உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 பெரிய புராண விளக்கம்-8 " சந்திரனும் தண்புனலும் சந்தித் தான்காண் தாழ்சடையான் காண் சார்ந்தார்க் கமுதானான் கான் அந்தரத்தில் அசுரர்.புரம் மூன்றட் டான்கான் அவ்வுருவில் அவ்வுருவம் ஆயி னான்காண் பந்தரத்து நான்மறைகள் ஆயி னான்காண் பலபலவும் பாணி பயில்கின் றான்காண் மத்திரத்து மறைப்பொருளும் ஆயி னான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.' அந்த நாயனார் திருவெண்ணியூரைப் பற்றிப் பாடி யருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: - ' தொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியி னாரும் து நீறு துதைந்திலங்கு மார்பி னாரும் புண்டரிகத் தயனொடுமால் காணா வண்ணம் பொங்குதழற் பிழம்பாய புராண னாரும் வண்டமரும் மலர்க்கொன்றை மாலை யாரும் வானவர்க்காய் நஞ்சுண்ட மைந்த னாரும் விண்டவர்தம் புரமூன்றும் எரிசெய் தாரும் வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே." அந்த நாயனார் திருவானைக்காவைப் பற்றிப் பாடி அருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத் தார் எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார் செத்தால்வந் துதவுவார் ஒருவர் இல்லை சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர் சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித் திருவானைக் காவுடைய செல்வா என்றன் அத்தா உன் பொற்பாதம் அடையப் பெற்றால் அல்லகண்டம் கொண்டடியேன் என்செய் கேனே." அந்த நாயனார் திருஏகம்பத்தைப் பற்றிப் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: -