உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 - பெரிய புராண விளக்கம்-8 அந்த நாயனார் திருச்சிவபுரத்தைப் பற்றிப்பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: வானவன் காண் வானவர்க்கும் மேலோ னான்காண் வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன்காண் ஆனைந்தும் ஆடி னான்காண் ஐயன்காண் கையிலனல் ஏந்தி ஆடும் கானவன் காண் கானவனுக் கருள்செய் தான்காண் கருதுவார் இதயத்துக் கமலத் துாறும் جیہہ:۔ தேனவன்கர்ண் சென்றடையாச் செல்வன் தான்கான் - சிவனவன்காண் சிவபுரத்தெம் செல்வன் தானே." அந்த நாயனார் திருஇன்னம்பரைப் பற்றிப் பாடி பருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: அல்லிமலர் நாற்றத் துள்ளார். போலும் அன்புடையார் சிந்தை அகலார் போலும் சொல்லின் அருமறைகள் தாமே போலும் துநெறிக்கு வழிகாட்டும் தொழிலார் போலும் வில்லின் புரமூன் றெரித்தார் போலும் வீங்கிருளும் நல்லொளியும் ஆனார் போலும் எல்லி நடமாட வல்லார் போலும் இன்னம்பர்த் தான்தோன்றி ஈச னாரே." அந்த நாயனார் திருக்கஞ்சனுாரைப் பற்றிப் பாடி, யருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: . ஏடேறு மலர்க்கொன்னற அரவு தும்பை . இளமதியம் எருக்குவான் இழிந்த கங்கை சேடெறிந்த சடையானைத் தேவர் கோவைச் செம்பொன்மால் வரையானைச் சேர்ந்தார் - சிந்தைக் கேடிலியைக் கீழ்வேளுர் ஆளும் கோவைச் சிறிபேசி மடவார் பெய் வளைகள் கொள்ளும் காடவனைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக் . கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே." அந்த நாயனார் திருஎறும்பியூரைப் பற்றிப் பாடியிருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: h