உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

% திருநாவுக்கரசு நாயனார் புராணம்-3 : 23?" னாருக்கு மேலே சொரிவார்கள் அந்த நாயனாரைப் புனர் பவர்களைப் போல அந்த நாயனாரைத் தழுவிக் கொள் வார்கள் தங்களுடைய கூந்தல்கள் அவிழ்ந்து விழுமாறு: தங்களுடைய இடுப்புக்கள் அசைய அங்கும் இங்கும் ஒடு. வார்கள்; காமவேளோடு திரும்பி வருவார்கள்; பிரகாசம் பெருகி வீச நெடுநேரமாக இருப்பார்கள்; தாங்கள் உடுத்திருந்த மெல்லிய ஆடைகள் அசையுமாறு நின்று: கொண்டிருப்பவர்களுமாக ஆனார்கள். பாடல் வருமாறு: ஆடுவார்; பாடுவார்; அலர்மாரி மேற்பொழிவார்; கூடுவார் போன்றணைவார்; குழல்அவிழ இடைநுடங்க - ஓடுவார்; மாரவே * ளுடன் மீள்வர் ஒளிபெருக நீடுவார் துகில்அசைய கிற்பாரும் ஆயினார்.' ஆடுவார். அந்தத் தேவலோகத்திலிருந்து தி ரு ப் டி. கலூருக்கு இறங்கி வந்த தெய்வப் பெண்மணிகள் திருநாவுக் கரசு நாயனாருக்கு முன்னால் நடனம் ஆடுவார்கள்: ஒருமை பன்மை மயக்கம். பாடுவார்-இசைப் பாடல்களைப் பாடு வார்கள்: ஒருமை பன்மை மயக்கம். அலர்மாரி-கற்பக மரத் தில் மலர்ந்த மலர்களை மழையைப் போல; உவம ஆகுபெயர். மேல்-அந்தத் திருநாவுக்கரசு நாயனாரின் மேலே. பொழிவார்-சொரிவார்கள்: ஒருமை பன்மை. மயக்கம். கூடுவார் போன்று-அந்த நாயனாரைப் புணர்பவர் களைப் போல இருந்து. கூடுவார்: ஒருமை பன்மை மயக்கம். ஆணைவார்-அந்த நாயனாரைத் தழுவிக் கொள்வார்கள்: ஒருமை பன்மை மயக்கம். குழல்-தங்களுடைய கூந்தல்கள்: ஒருமை பன்மை மயக்கம். அவிழ-அவிழ்ந்து விழுமாறு. இடை-தங்களுடைய இடுப்புக்கள்: ஒருமை பன்மை மயக்கம். நுட்ங்க-அசைய. ஒடுவார்-அங்கும் இங்கும் ஒடுவார்கள்: ஒருமை பன்மை மயக்கம். மாரவேளுடன்-காமவேளோடு.