-> ாவுக்கரசு நாயனார் புராணம்-3 233 இருநாவு எவ்விதமும்-எந்த வகைகளிலும்; ஒருமை பன்மை மயக்கம். செயல்-நடனமாடுதல், பாடுதல் முதலிய செய்களை ஒருமை பன்மை மயக்கம். புரிய-செய்ய. அத்தனார்-தந்தையாரைப் போன்றவராகிய அக்கினிசுவரருடைய உவம ஆகு பெயர். திருவடிக்கீழ்-திருவடிகளின் கீழே ஒருமை பன்மை மயக்கம். நினைவு-தம்முடைய திருவுள்ளத்தில் நினைக்கும் நினைவி லிருந்து. அகலா-நீங்காத அன்பு-பக்தியினால், உருகும்உருக்கத்தை அடையும். மெய்-உண்மையான. த்: சந்தி. தன்மை-பான்மையைப் பெற்ற, உணர்வு-உணர்ச்சியை. உடைய-பெற்ற விழு-மேலான தி:சந்தி. தவத்து-தவத்தைப் புரிந்த. மேலோர்-மேம்பாட்டைப் பெற்றவராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனார். தம்-தம்முடைய. சித்த-திருவுள் வத்தின். நிலை-நிலைமை. திரியாது-சற்றும் மாறாதவாறு, செய்-தாம் புரியும். பணி-உழவாரத் திருப்பணியும் வேறு பல திருப்பணிகளும்; ஒருமை பன்மை மயக்கம். தலை நின்றார்-தலை சிறந்து நின்றார். பிறகு வரும் 423-ஆம் கவியின் கருத்து வருமாறு: 'இந்த மாயமாகிய மானிடப் பிறவி என்னும் பிணைப்பு ஆகும் புண்ணியம் பாவம் என்னும் இரண்டு வினைகளையும் பார்த்து, 'உங்களால் இந்தத் திருப்புகலூரில் அடியேன் என்ன குறையைப் பெற்றவன்; திருவாரூரில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அம்மானாகிய வன்மீக நாதருக்கு அடியேன் அடிமையாகி விட்டேன்: நீங்கள் அடி யேனை அலைக்க வேண்டாம்' என, 'பொய்ம்மாயப் பெருங்கடலுள்' என்று வரும் ஒரு திருத்தாண்டகத்தை அந்தத் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளினார். பாடல் வருமாறு: - இம்மாயப் பவத்தொடக்காம் இருவினைகள் தமைநோக்கி 'உம்மால் இங் கென்னகுறை உடையேன்யான் திருவாரூர்
பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/241
தோற்றம்