உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம்-3 . 岔5岛飞 அந்த நாயனார் திருவாரூரைப் பற்றிப் பாடியருளிய ஒரு திருவிருத்தம் வருமாறு: 1. வேம்பினைப் பேசி விடக்கினை ஒம்பி வினைபெருக்கித் துாம்பினைத் தூர்த்தங்கோர் சுற்றம் துணையென் றிருத்திர்தொண்டர் ஆம்பலம் பூம்பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடி நிழற்கீழ்ச் சாம்பலைப் பூசிக் கலமின்றித் தொண்டுபட் டுய்ம்மின்களே.' அந்த நாயனார் திருவதிகை வீரட்டானத்தைப் பற்றிம்: பாடியருளிய ஒரு திருவிருத்தம் வருமாறு: மாசில்ஒள் வாள்போல் மறியும் மணிநீர்த் திரைத்தொகுதி ஊசிலை ஆடியங் கொண்சிறை அன்னம் உறங்கலுற்றால் பாசறை நீலம் பருகிய வண்டுபண் பாடல்கண்டு வீசும் கெடில வடகரைத் தேஎந்தை வீரட்டமே.” அந்த நாயனார் திருக்கடவூர் விரட்டத்தைப் பற்றிப், பாடியருளிய ஒரு திருவிருத்தம் வருமாறு: - மருள்துயர் தீரஅன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டயற்காய் இருட்டிய மேனி வளைவாள் எயிற்றெரி போலும் குஞ்சிச் சுருட்டிய நாவில் வெங் கூற்றம் பதைப்ப உதைத்துங்ங்னே உருட்டிய சேவடி யான்கட. ஆருறை உத்தமனே.”