உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கதயோனி

3. Quri.

...

அக்கதம் பொரி யவை தானியம் (நாநார்த்த. 47). 4. வால்கோதுமை. அக்கதம் பொரி யவை... தானியம் (முன்.). 5. தானியம். அக்கதம் பொரி யவை...தானியம் (முன்.).

.

அக்கதயோனி பெ. கன்னி. (சிந்தா. நி. 31/செ.ப.அக.

அனு.)

அக்கதாரி

பெ. 1. (எலும்புமாலை அணிந்த) சிவன். (சங். அக.) 2. (உருத்திராக்கம் அணிந்த) சிவனடியான். (முன்.)

அக்கதூர்த்தன் பெ. சூதாடுகிற தீயவன். (சங்.அக.)

அக்கதேவி 1 பெ. சூதாடுபவன். (முன்.)

அக்கதேவி' பெ. சோனைப்புல். (மலை அக. செ.ப.அக.)

அக்கதை

யாத அரிசி.

(அட்சதை) பெ. முனைமுறி நித்தில அக்கதையுமிட்டாள் (பிரபு. லீலை 4,44)... அக்கதையும் சாத்தி (குசே.407).

அக்கந்தம் (அக்கணா, அக்கத்தான், அக்கம், 4 அக் காத்தான், அக்காந்தி) பெ. தான்றி மரம். (வின்.)

அக்கந்து1 பெ. தூற்றுகையில் தானியக் குவியலின் புறத்தே சிதறும் பதர், புறக்கந்து. (யாழ். அக.)

அக்கந்து ' பெ. நெல்லைப் பாதிக்கும் ஒரு பூச்சி.

(இலங்.வ.)

அக்கப்பறை பெ. அலைக்கழிவு. (சம்.அக.செ.ப.அக.)

அக்கப்பாடு பெ. 1. கடலில் மரக்கலத்திற்கு ஏற்படும் சேதம். (வின்.) 2. மரக்கலத்தில் ஏற்றப்பட்ட பொருள் நட்டமாகை. (சங். அக.)

படிப்பாம்

அக்கப்போர் (அக்குப்போர்) பெ. 1. வம்புப் பேச்சு. இரவு முழுதும் ஒரே அக்கப்போர், அரட்டை (நாட்.வ.).2. தொல்லை. (முன்.)

(பே.வ.)

அக்கபாடகன் பெ. நியாயாதிபதி. (சங். அக.)

அக்கபாடம் (அக்கவாடம்)

களம். (வின்.)

3. கலகம்.

பெ. மற்போர் பழகும்

அக்கபாதன் பெ. 1. நியாய தத்துவத்தைத் தோற்று வித்த கௌதமன். அக்கபாதன் கணாதன் சைமினி



5

அககமாலிகாபரணன்

(மணிமே. 27, 82). 2. தருக்கம் பேசுதலில் வல்லவ னாகிய நையாயிகன். (சங்.அக.)

P00

அக்கபாரி பெ. நறுமணம் உள்ள ஒரு கசப்பு நீர்ப்பூடு. (சாம்ப. அக.)

அக்கபிரம் பெ. மாமரம். (மலை அக.)

1

அக்கம் 1 (அஃகம்1) பெ. தானியம். (கதிரை. அக.)

...

...

அக்கம்' பெ. கயிறு. பழுதையே அக்கம் கயி றதாமே (சூடா.நி.7,60).

அக்கம்' பெ.

1.கண். அக்க நிரை சிந்தினர் (கந்தபு. 3,16,23). அக்கம் அன்ன மன் அப்துல்லா (சீறாப்பு. அக்கம் வேணி நுதலில் கரந்தவன் (கங்கா .இரட். யமக.19). 2.உருத்திராக்க மணி. தலை யெலும்பு அப்பு கொக்கிறகு அக்கம் (திருப்பு. 458).

1, 5, 37).

அக்கம் * ( அக்கணா, அக்கத்தான், அக்கந்தம், அக் காத்தான், அக்காந்தி) பெ. தான்றி மரம். (வின்.)

அக்கம்5 பெ. பூகோளத்தின் குறுக்கு ரேகை. (முன்.)

அக்கம்' பெ. பன்னிரண்டில் ஒரு பங்கு மதிப்புடைய காசு. ஓராட்டைக்கு அக்கம் நூற்று எண்பது

(தெ.இ.க.2, 6).

அக்கம் பெ. 1. பொன். அக்கமான பேரை (திருப்பு. 1223). 2.விளைபொருள் விலை. (வின்.)

அக்கம்பக்கம் பெ. அண்டையயல், அருகு. அக்கம் பக்கம் வீட்டாரெல்லாம் அடுத்தடுத்து வாராங் களாம்

(மலைய.ப. 141).

...

அக்கம்மா பெ. உடன்பிறந்தவள், சகோதரி. (இலங்.வ.)

அக்கமணி பெ. பெ. உருத்திராக்க மணி. அடிமை என்று சொன்னையிலை, அக்கமணி தந்தையிலை (பட்டி னத்தார். அருட்பு. 37). பொறி யரவு அக்கமணி தொடை பூண்டு (திருக்காளத். பு. 5, 27). பூதி அக் கமணி எழுத்தைந்து ஆதரியாப் புன்மையோரை (சூத. எக்கிய. பூருவ.18,27).

அக்கமம் பெ. பொறுக்கக் கூடாமை. (யாழ். அக. அனு.)

அக்கமாலிகாபரணன் பெ. (உருத்திராக்க மாலை அணிந்த) சிவன். மன்னுமாபதி நல்லக்க மாலிகா பரணன் (சூத. ஞான. 19,8).