உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கினிநட்சத்திரம்

உரை). அக்கினி தேவன் கைமேலே எழுந்தாளே

(இராமநா. 6, 83 தரு. 4).

அக்கினிநட்சத்திரம்

றாம் நட்சத்திரமாகிய)

பெ. 1. (மூன்

கார்த்திகை. (நாட்.வ.)

2. சித்திரை-வைகாசியில் பரணி மூன்றாம் பாதம் முதல் உரோகிணி முதற் பாகம் வரை சூரியன் நிற்கும் கடுங் கோடைக்காலம். (போக. சென.288)

அக்கினிநாள்

பெ. (மூன்றாம்

நட்சத்திரமாகிய)

கார்த்திகை. (சோதிட சிந். 55/செ.ப. அக.)

அக்கினிநீர் பெ. திராவக வகை. (புதுவை வ.)

அக்கினிநோய் பெ. வெப்புநோய். நமசிவாய என் னின் ... அக்கினி நோய்தீரும் (கருவூரார். திர.278).

அக்கினிப்பிரத்தரம் பெ. 1. சூரிய காந்தக்கல். (சங். அக.) 2.தீத்தட்டிக்கல். (முன்.)

அக்கினிப்பிரமாணம் பெ. நெருப்பைக் கொண்டு சத்தி யம் செய்யும்படி சொல்லுதல். அக்கினிப் பிரமா ணம் எனச் சொல்லும் மழுப்பிரமாணம் (மனு விஞ். 446).

அக்கினிப்பிரவேசம்

பெ. 1. தீப்புகுகை. சீதையின் அக்கினிப்பிரவேசம் (நாட். வ). 2. உடன்கட்டை ஏறுகை. (ராட். அக.)

அக்கினிப்பிரளயம் பெ. தீயினால் உண்டாகும் உலகழிவு. (செ.ப.அக. அனு.)

அக்கினிப்பிராமணன்

பெ. பிணத்தை எரிக்கும்போது

சடங்குகள் செய்விக்கும் பிராமணன். (கோவை வ.)

அக்கினிப்பிளப்பு பெ. எரிமலை. (வின்.)

அக்கினிப்பொறி பெ. துப்பாக்கி (அருகிய வ.)

அக்கினி பகவான் பெ. அக்கினிக் கடவுள்.

வாராய்

அக்கினி பகவானே என்றும் (மனுவிஞ். 1, 34). ஊடாதே கனலாவது அக்கினிபகவான் என வும் கொள்க (தக்க, 103 ப. உரை).

...

அக்கினிபஞ்சகம் பெ. (நல்வேளை அல்லாதது எனக் (கருதப்படும் ஐவகைக் காலங்களுள்) நெருப்பால் தீங்கு விளையக் கூடியதான காலம். (சோதிட சிந் 213/செ.ப.அக.)

5

அக்கிமந்தச்சுரம்

அக்கினிபதச்சிலந்தி பெ. விடக் கால்களை உடைய

சிலந்தி. (சீவரட். ப. 354).

அக்கினிபம் பெ. பொன். (சங். அக.)

அக்கினிபரிச்சதம் பெ. ஓமஞ் செய்தற்கு வேண்டிய உபகரணம். (முன்.)

அக்கினிபரித்தியாகம் பெ. அக்கினியிலே ஓமஞ் செய்யா தொழிகை. அக்கினிபரித்தியாகப் பிராயச்சித்தம்

(பராச.9,194 வரதாசாரி.).

அக்கினிபரீட்சை பெ. (ஒருவரைச் சோதித்தறிவதற் காக) நெருப்பில் புகச் சொல்லுதலாகிய சோதனை.

(பே.வ.)

அக்கினிபாதை பெ. தீயால் நேருங் கேடு. (செ.ப.அக.)

அக்கினிபீசம்1 (அக்கினிவீசம்!) பெ. பொன். (கதிரை.

அக.)

அக்கினிபீசம் 2 (அக்கினிவீசம்2) பெ. ரம் என்னும் மந்திர ஒலி. (சங். அக.)

அக்கினிபுமான் பெ. கிராமத்

தெய்வங்கள்முன் தீச் சட்டி எடுப்பதற்காக விடப்பட்ட மானியம். (செ. ப. அக. அனு.)

அக்கினிபுராணம் பெ. வடமொழிப் பதினெண் புராணங் களுள் அக்கினிதேவனைச் சிறப்பித்துக் கூறும் புரா ணம், ஆக்கினேயம். இந்தச் சாத்திரத்தின் பெருமை அக்கினிபுராணத்தில் பேசப்பட்டுள்ளது லங்கார வரலாறு).

அக்கினிபூ

(மாறன

பெ. (நெருப்பில் தோன்றியவனான) முருகன். ஆர்த்து எழும் அனலில் தோன்றலால் அக்கினிபூ என்றும்... நாமம் இயம்பி (மச்சபு. உத்தர.

57, 115).

அக்கினிமண்டலம் பெ. 1. ஏழ்வகை மண்டலங்களுள் நெருப்பிற்குரிய இடம். (சதுரக.) 2. (யோக) மூலா தாரத்துள் நீருக்கும் நிலத்திற்கும் நடுப்பட்ட நெருப்பு மயமான தானம். (சீவோற்பத். 30/செ.ப.அக.) 3. அடி வயிறு. (வைத். விரி. அக. ப. 4)

அக்கினிமணி பெ. சூரியகாந்தக்கல். (சங். அக.) அக்கினிமந்தச்சுரம் பெ. சுரநோய்களுள் ஒன்று. (சீவரட்

u.47).