உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கினிவெள்ளை

அக்கினிவெள்ளை பெ. கேழ்வரகு வகை. (செ.ப. அக.

அனு.)

அக்கீகத்து1 பெ. வழக்கை எடுத்துரைக்கை. (செ.ப.

அக.அனு.)

அக்கீகத்து' பெ. உண்மை. (முன்.)

அக்கீம் பெ. முகம்மதிய வைத்தியர்.(செ.ப.அக.) அக்கு இ.சொ. ஒரு சாரியை. அக்கே இக்கே... என்ப சாரியை மொழியே (தொல்.எழுத்.119 நச்.).

அக்கு பெ. எலும்பு. எலும்பு. அக்கு அயலே வைத்த அரவு விளங்கி மிளிருமே (காரை.அந். 26). சுடலை நீறும் ...அக்கும் அரவும் (தேவா. 4,111,6). அக்கும் புலியின் அதளும் உடையார் (பெரியதி. 9,6,1). அக்கு அறுகு க கொன்றை...சூடுகின்ற சொக்கர் (பட்டினத்தார். அருட்பு. நெஞ். 24). பல் அக்கைப் பெண்ணாகப் பாடினோன் (திருக்காளத். உலா 182).

அக்கு' பெ. மாட்டின் திமில். ஏற்றின் முரிப்பு... அக்கு எனல் (பிங்.3036)

அக்கு பெ. எட்டிமரம். (சங். அக.)

அக்கு பெ. அகில்மரம். (கதிரை. அக.)

அக்கு பெ. உகா மரம். (செ. ப. அக.)

அக்கு பெ. உருத்திராக்கம். அக்கினொடும் என்பு அணிந்த அழகன் (தேவா. 6, 74, 7). தங்கம் ஒல் கும் அக்கும் (தில். நெல். 27).

அக்கு பெ. 1. (வெண்ணிறமுடைய ) சங்குமணி. அக்கே போல்...விரல் அழுகி (நாலடி. 123). தென் கூடல் அன்ன அக்கு இன்னகை இவள் (திருக்கோ. 376). 2. கடற்சோழி, பலகறை. (கதிரை. அக.)

அக்கு பெ. கண். அக்குப் பீளை (திருப்பு. 7). அக்கு நுதல் பிறைச் சடையாய் (திருவருட்பா 1377).

அக்கு10

(செ.

ப. அக.)

அக்குத்

உரிமை. பெ. தொக்கு இல்லாதவனுக்குத் துக்கம் ஏது (யென்.

பழ. தொ. 2652).

அக்குச்சரி பெ. சங்குவளை. கைச்செறி அக்குச்சரி பப்பத்தினரே (தக்க. 100).

பெ. சொ. அ,1-2

17

அக்குரன்

அக்குசு பெ. அக்கறை. அவன் அக்குசோடு வேலை செய்கிறான் (ரா. வட். அக.).

அக்குசை பெ. கணவனை இழந்தபின் துறவு பூண்டு தவம்புரியும் சைனப்பெண். ..அன்னங்கள்... ஆரி யாங்கனைகள் நூல் வாங்கும் அக்குசைகள் என்ன மூவகைப் பெண் தவப்பள்ளிகள் (திருவிளை. பு.

63, 17).

அக்குட்புற்று பெ. அக்குளில் உண்டாகும் புற்றுநோய். கன்னோசி அக்குட்புற்று விழலாய்ப்போமே

(போகர் 700, 102).

...

அக்குணி பெ. சிறு அளவு. அக்குணிப் பிள்ளைக்குத் துக்குணிப் பிச்சை (பழமொழி).

அக்குத்து பெ. சந்தேகம். (யாழ். அக.)

அக்குத்து 2 பெ. நிபந்தனை. (செ.ப.அக.)

அக்குத்து' பெ. பொருத்தம். (வின்.)

அக்குத்து' பெ. அக்கிரமம். (ரா. வட். அக.)

அக்குத்தொக்கு பெ. 1. குடும்பப்பற்று. அக்குத் தொக்கு இல்லாதவனுக்குத் துக்கம் என்ன? (பழ.

அக. 51).

2.

சம்பந்தம்.

அக்குத்தொக்கில்லாத

சங்கதி (செ.ப. அக.).

அக்குதார் பெ. உரிமையாளன். (செ. ப. அக.)

அக்குப்போர் (அக்கப்போர்) பெ. 1.வம்புப்பேச்சு. அல்லற்போர் சல்லிப்போர் அக்குப்போர் ( நெல்விடு. 400).2. தொல்லை. (செ.ப.அக .அனு.)

அக்குமணி 1 பெ. சங்குமணி. நாய் கடித்துக் கொண்டுவந்த அக்குமணி போலும் முட்டைகளை யுடைய உடும்பினது (பெரும்பாண். 132 நச்.).

அக்குமணி' பெ. உருத்திராக்க மணி. தோள் வளை கள் அக்குமணிக் குண்டலங்கள் (இராமநா. 6, 72

...

தரு. 1).

அக்குமாலை பெ. உருத்திராக்க மாலை. (கதிரை. அக.)

அக்குரன் பெ. இடை

வள்ளல்

...

அக்குரன்

அக்குரன் அனைய கைவண்மையையே (பதிற்றுப்.

14, 7). அந்திமான்

(பிங். 756).

எழுவருள் ஒருவன்.

...

இடைவள்ளல்