உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகநிலை*படு

அகநிலை* பெ. (மனத்துள் இருப்பவன்) கடவுள்.

(ராட். அக)

அகநிலை" பெ.

ஆராய். ப.355)

பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி என்னும் பெரும் பண்களின் திறத்தொகுதி. (பண்

அகநிலைக்குறிஞ்சி பெ. குறிஞ்சியாழ் என்னும்பெரும்

பண்ணின் திறம் (முன். ப.355)

.

அகநிலைக்கொச்சகம் பெ. 1.

ஆசிரியத்தளையும்

ஓசையுடைய

வெண்டளையும் பெற்றுத் துள்ளல்

கலிப்பா வகை. (சீவக. 2514 நச்.) 2. தனிச்சொல்லும் அடக்கியலுமின்றிச் சுரிதகம் பெற்று

அடிவரையறை யற்றுச் செல்லும் கலிப்பா வகை. (கலித். 119 நச்.)

அகநிலைப்பசாசம் பெ. (நாட்டியம்) சுட்டுவிரல் நுனி யும் பெருவிரல் நுனியும் பொருந்தி ஏனைய விரல்கள் நிமிர்ந்து நிற்கும் கை அடையாளம். (சிலப். 3, 18

அடியார்க்.)

அகநிலைப்பாலை பெ. பாலையாழ் என்னும் பெரும் பண்ணின் திறம். (பண் ஆராய்.ப.355)

அகநிலைமருதம் பெ. மருதயாழ் என்னும் பெரும் பண்ணின் திறம். அகநிலை மருதமும் புறநிலை மருதமும் (சிலப்.8,39).

அகநிலைமுறை பெ. (இக்.) ஒரு (இக்) ஒரு பல்கலைக் பல்கலைக் கழகம் தேர்வுகளை வெளியாசிரியரின்றித் தன் கல்லூரி ஆசிரியர் வழி மதிப்பீடு செய்யும் முறை. (கல்வி -வ.)

அகநிலையொத்தாழிசை பெ. 1. கலியுறுப்பு வகை. (தொல். பொ. 450 பேரா.) 2. கலிப்பாவகை. (பாப்பா. 91)

அகப்பக்கம் பெ. உளதத்துவம் அல்லது சமயச் சார் பான உண்மையைப் பற்றிய அனுமானம். (வின்.)

அகப்பகை பெ. உட்பகை. புறப்பகை கோடியின் மிக்குறினும் அஞ்சார் அகப்பகை ஒன்று அஞ்சிக் காப்ப (நீதிநெறி. 55).

திம்

அகப்பட்டி பெ. (அடங்கிச் செல்லும்) கயவன். அகப் பட்டியாவாரைக்காணின் (குறள்.1074).

Ta

அகப்படச்சூத்திரி-த்தல்

11வி. பொருள்

உள்ளடங்கியிருக்குமாறு நூற்பா செய்தல்.

புலப்படாது

உள்ளது

அல்லது என்றல் கருத்தாயின் ஆசிரியர் அல்ல

27

அகப்படு'-த்தல்

தெனக் குறித்த பொருள் விளங்காமையின் அகப் படச் சூத்திரியாராகலானும் (தொல். சொல். 35

சேனா. எடுத்துக்.).

அகப்படப்பிடி-த்தல் 11வி.

கைப்பற்றல். பெண்டிர் பண்டாரமும் அகப்படப்பிடித்து (மெய்க். இரண்டாம் இராசேந். 2, 12).

.

அகப்படு-தல் 6வி. 1.குறைதல், சுருங்குதல். இடை நிலைப்பாட்டே தரவு அகப்பட்ட மரபினதென்ப (தொல். பொ. 439. TD.). 2. அமைந்திருத்தல். கான் அகப்பட்ட செந்நெறி (மலைபடு. 258). அந்த மில்லாத அகண்டமும் நம்முள் அகப்படும் (திரு வாச. 49,3). 3. (தடுக்க இயலாது) சிக்கிக் கொள் ளுதல், மாட்டிக்கொள்ளுதல். நீடுகுழி அகப்பட்ட... கொல் களிறு (புறநா. 17, 15). ஒருவன் வலை அகப்பட்டது என் நெஞ்சு (கலித். 147, 21). மா னிளம் பேடை அயில் எயிற்று வெம்புலிக் குழாத்து அகப்பட்டது அன்னாள் (கம்பரா. 5, 3, 4). அகப் பட்ட களிறு அநேகம் (கலிங். 459). பொய்ந் நெறி கண்டே பிறப்பு வலையுள் அகப்படுதலின் (குறள்.348 பரிமே.). ...கால் நுழைத்துக்கொண்டே ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல அகப்பட்டீர் ...... ... (பட்டினத்தார். பொது அன்னை. 42). அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே (திரு வருட்பா 3269). 4. (தடுக்க இயலாது/தற்செய லாகக்) கிட்டுதல். அடியனேற்கு இவர்தாம் இங்கே அகப்பட்டார் அச்சோ (பெரியபு. 10,106). அகப் பட்டார் அத்தைமகன் (காத்தவரா.ப. 143). பைக் குள் கை விட்டுஅகப்பட்ட காசை எடுத்தான் (பே. வ.). 5. வசப்படுதல், ஈடுபடுதல். திருவவதாரத்திலே அகப்பட்டபடி சொல்லுகிறார் (அமலனாதி. 7 பெரிய.). அங்கொருத்தி கையில் அகப்பட்டதுவும் (தெய்வச். விறலி. தூது 115). 6. உட்படுதல், சேர்த்து எண்ணப் படுதல். சித்த இருடிக்கணம் அகப்பட ... முனித் தலைவரும் (உத்தர. வரையெடு. 69). இந்நாற் பே ரெல்லைக்குள்ளும் அகப்பட்ட நீர்நிலமும் (தெ.இ. க. 7,854). 7. காட்சியாதல், தோன்றுதல். எண் ணினர் எண்ணகப்படாத செய்கையான் (சூளா. 52). அங்கவர்க்கு உமையவளொடும் அரன் அகப் பட்டு... வீடருள் புரிவான் (திருக்காளத். பு. 7,13).

அகப்படு'-த்தல் 11வி. 1. (இரையை வளைத்துப்) பிடித்தல், கவ்வுதல், களிறு அகப்படுத்த பெருஞ் சின மாசுணம் (நற்.261,6). நாய் அகப்படுப்ப வலைவர்க்கு அமர்ந்த மடமான்போல (கலித். 23, 16-17). தீவகத்தால் பறவை அகப்படுத்துமாறு