உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகலம்'

மிடற்றர் வெண்ணூல் சேர்ந்த அகலத்தார் (தேவா. 1, 67, 7). அஞ்செஞ் சாந்தம் மெழுகிய அகலம் (பெருங். 1,46,25). சதுரர் தம் மணி அகலத்து (கலிங். 418). தாரகலத்தண்ணல் (கம்பரா. 6, 17, 275). ஏடவிழ்ந்த தார் அகலமும் (திருவிளை. பு. நகரச். 35). அகலம் மீது நிலவு தரித்தன்ன புரிநூல் (சங்கர. உலா 61). 7. வயிறு. பேர் ஆர மார்வனார் ஓர் அகலத்துள்ளது உலகு (இயற். மூன்றாம். 43). 8.மேனி, உடல். மாது உகந்த மார்வற்குப் பெண் ணகலம் காதல் பெரிது (இயற். மூன்றாம்.54).9. (பொருள்) விளக்கம், விருத்தியுரை. கொழித்து அகலம் காட்டாதார் சொற்கள் (நாலடி.319). பொழிப்புத் திரட்டி அகலங் கூறல் (இறை. அக. 1 உரை). அகலம் எனினும் விருத்தியுரை எனினும் ஒக்கும் (யாப். காரிகை 2 உரை). 10. வித்தாரகவி. ஆசு மதுரம் சித்திரம் அகலம் பாட்டு.. நால்வகைத்தே (இலக். வி. 763). 11. இடம். அசும்பு சோர் அருவரை அகலம் பொருந்தி (பெருங். 2, 14, 6). 12. ஆகாயம். அப்பும் அனலும் அகலத்துளே வரும் (திருமந். 2266). 13.பூமி. பரவைசூழ் அக லத்து (கருவூர். திருவிசை. 1,11). அலை எறி எழு கடல் அகலம் (திருச்சோற்று. பு. பாயிரம் 11). 14. மத கின் வாய். குளத்தனைய குளத்தனைய தூம்பின் அகலங்கள்

(நான்மணி. 70).

அகலம்' பெ. வேப்பிலை. (செ.ப.அக .அனு.)

அகலம்' பெ. யானைத்திப்பிலி. (முன்.)

அகலமணி பெ. ஓர் அணிகலன். (தெ.இ.க.8328)

அகலர்' பெ. கீழ்மக்கள். (வின்.)

சி.1,

அகலர்' பெ. 1. கலை நீங்கினவர். விஞ்ஞானகலர்க் குக் கலாதி சம்பந்தமுண்டாயிருந்துங் கலாதி பரதந்திரரல்லாதபடியால் அகலரே (சி. A. 1, 25 உரை சிவாக்.). 2. உருவமில்லாதவர், கலையோடு பொருந்தாதவர்.(சிவநெறிப்.42 உரை)

அகலவன் பெ. நீங்கிச்செல்பவன். போற்றார் சிந்தை அகலவனை (தேவா. 6,33,10).

அகலவாய்ச்சி பெ. தச்சர் மரம் செதுக்கப் பயன்படுத் தும் அகன்றவாயுடையகருவி. (செ. ப. அக.)

.

அகலவிடு-தல் 6 வி. 1. இடம்விட்டு விதைத்தல். சில வித்து அகலஇட்டு எனப் பல விளைந்து (நற்.

38

அகலிடம்

209,3).2. விலக்கிவிடுதல், ஒதுக்குதல். அடியாரா னீர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டை (திருவாச. 45, 4). அபயம் என்றானை அயிர்த்து அகலவிடுதி ஆயின் (கம்பரா.6,4,100).

அகலவுரை பெ. (இலக்.) நூற்பாப்பொருளை வினா விடையோடு விளக்கும் உரை. சூத்திரத்துப் பொரு ளைக் கடாவிடை உள்ளுறுத்து உரைக்கும் உரையெல்லாம் அகலவுரை (இறை. அக. 1 உரை).

...

அகலறை பெ. 1. பாசறை. முரசம் ... அகலறை அதிர்வன முழங்க (பட்டினப். 237 பாசறையிலே நடுங்கு வனவாய் முழங்க-நச்.) 2. மலைப்பக்கம். (முன். மலைப் பக்கமுமாம் - நச்.)

அகலன்1

பெ. 1. கடவுள். (கதிரை. அக.) 2. பெருமையுடையவன், பெருத்தவன். (முன்.)

அகலன்2 பெ. தீண்டாதவன். (சம். அக./செ.ப.அக.)

அகலன்3 பெ. ஏழை. (கதிரை. அக.)

4

அகலன் பெ. கொடியவனல்லாதவன். (முன்.)

அகலி (அகலிகை, அகலியை) பெ. கௌதம முனி வரின் மனைவி. அகலி மெய்க் கேள்வன் (நல். பாரத. கிருட்டிணார்ச்சுன. 99).

அகலிகை (அகலி, அகலியை) பெ. கௌதம முனி வரின் மனைவி. அகலிகை ... கவுதமன் சினனுறக் கல்லுரு ஒன்றிய படியிதென்று (பரிபா. 19, 50-52). அகலிகைக்கு அளித்த தாளும் (கம்பரா. 1, 20, 5). கடல் கடைகிற காலத்து ... அகலிகை என்ற தெய் வப் பெண்ணும் தோற்ற (தக்க.38 ப. உரை). தேடிய அகலிகை சாபம் தீர்த்த தாள் (பாரதம்.

6, 4, 1).

அகலிடத்தார் பெ. உலகத்தார். அகன்றாள் அக லிடத்தார் ஆசாரத்தை (தேவா. 6,25,7).

அகலிடம் பெ. (அகன்ற இடம்) உலகம், உலக மக்கள். பருதியைக் கெடுத்த அகலிடம் போல அச்சம் எய்தி (பெருங். 1,46,208 - 209). ஆட் கொண்ட வார்த்தையுரைக்கும் அன்றோ இவ் அகலிடமே (தேவா. 4, 97, 7). அகலிடம் அழிவு செய்யும் ... மூரிக்கடல் (கம்பரா. 5, 7, 3). ஆழி யால் அகலிடம் அடக்கி ஆண்டவன் (சூளா. 398). கடுவளி கனல் புனல் ககனமோடு அகலிடம் (திருவரங். கலம். 7 அராகம் 3).