உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகவற்சுரிதகம்

அகவற்சுரிதகம் பெ. அம்போதரங்க ஒத்தாழிசை போன்ற கலிப்பாவின் கடை உறுப்பு, ஆசிரியச் சுரித கம். (முன்.)

அகவற்பா பெ. ஆசிரியப்பா. வெண்பா, அகவற்பா, கலிப்பா, வஞ்சிப்பா எனப் பா நான்காம் (சிதம்.

பாட். 7 ப. உரை).

அகவற்றாழிசை பெ. மூன்றடியாய்த் தம்முள் அள வொத்துத் தனித்தோ ஒரு பொருள்மேல் மூன்றடுக் கியோ வரும் ஆசிரியப்பா இனம். மூன்றடி, ஒத்த முடிவினவாய்விடின்... அகவற்றாழிசை ஆகும் (யாப்.

வி. 75).

அகவற்றுள்ளல் பெ. வெண்சீர் வெண்டளையும் கலித் தளையும் கலந்துவரும் துள்ளலோசை. (யாப்.

22 உரை)

காரிகை

அகவற்றுறை பெ. இடையடிகள் அளவிற் குறைந்து வரும் நான்கடிகள் கொண்ட ஆசிரியத் துறை.... நான் கடியாகி இடையிடை குறைநவும் அகவற்றுறையே

யாப், வி. 76).

அகவற்றூங்கல் பெ. ஒன்றாத வஞ்சித்தளையால் வரும் வஞ்சிப்பாவிற்குரிய தூங்கலோசை. (யாப். காரிகை 22

உரை)

அகவன்மகள் பெ. 1. பாண் மகள். வெண்கடைச் சிறு கோல் அகவன் மகளிர் (குறுந். 298). 2. தெய்வங் களை அழைத்துப் பாடும் கட்டுவிச்சி. அகவன்மகளே பாடுக பாட்டே (முன். 23).

அகவனசம் பெ. உள்ளத்தாமரை. அகவனசம்... மலர (தக்க.92).

அகவாட்டி பெ. மனைவி (வின்.)

அகவாய்1 பெ. 1. உள்ளிடம். அகவாயிற் பெருச்சாளி (தொண்டரடி. திருமாலை 7 வியாக்.). 2. உள்ளம். நெஞ் சமும் தம்மதே, அகவாயில் ஆபரணமும் அவரதே (பெரியதி. 2, 8, 9 தமிழாக்.). 3. உட்கருத்து. வித்தகன் மெய் உரையின் அகவாய் அறிந்தவர் (தேசிகப். 17,

32).

அகவாய்' பெ. கதவுநிலை. திருக்கற்றளிப் பலகைப் படையும் பஞ்சரமும் அகவாயுஞ்செய்தான் (புது. கல். 635). அகவாயும் புறவாயும் மகுடமும் பொன் ஆசித்து (தெ.இ.க.19,390).

40

அகவினை

அகவாய்க்கோடு பெ. வண்டியின் நெடுஞ்சட்டம். அக வாய்க்கோடும் புறவாய்ப்பூணும் (பெருங். 1, 58, 48).

அகவாயில் பெ. உள்ளம். அகவாயில் எண்ணத்தின் ஏற்றம் அறிந்து (குருபரம். ஆறா.ப.558).

அகவாயுக்கள் பெ. அகத்திலுள்ள அந்தக்கரணங்களைச் சீவனோடு கூடிநின்று அசைப்பிக்கின்றனவாகச் சொல் லப்படும் வைரம்பன், முக்கியன், பிரபஞ்சன், அந்தரி யாமி, மகாப்பிராணன் என்னும் ஐந்து வாயுக்கள். (வேதா. சூ. 76 உரை)

அகவான் பெ. அரசன் சார்பாய்க் காரியம் நடத்துபவன். நேரிருந்து சீமை யகவான் நிகழ்த்த (பஞ்ச. திருமுக.

2164).

அகவிதழ் பெ. பூவின் உள்ளிதழ். அம்மலர் அகவிதழ்த் தண்பனி உறைத்தரும் (கலித். 77, 7). தண்தாமரை யின் அகவிதழ் போல (பெருங். 2, 4, 192). தாமரை அகவிதழ் தடுத்த கண்ணினன் (சூளா. 75).

அகவிரல் பெ. விரலின் உட்புறம். ...வீக்கின நரம்பை அகவிரலாலும் புறவிரலாலும் கரணம் செய்து தடவிப் பார்த்தல் (சீவக. 657 நச்.).

பெ..

அகவிருள் பெ. அறியாமை. புலவோர்

அகவிருள்

ds

தானகல (கம்பரா. மிகை. தனியன் 3). அகவிருட் பானு (திருவேங். சத. தனியன்).

அகவிலான் பெ. (அகம் + விலான்) (மலையை வில் லாகக் கொண்ட) சிவன். அகவிலான் பரவிநின்ற அன்பனை நோக்கி (திருவிளை. பு. 57, 60).

அகவிலை1 பெ. பூவின் உள்ளிதழ். அகவிலை ஆம் பல் (தேவா. 4, 55, 8).

அகவிலை2 பெ. 1 தானிய விலை. ஆதலால் உலகில் நெல்லும் அகவிலை குறைந்து (திருநேல்பு. நெல்லு.4). 2. பொருள் விளையும் உள்நாட்டில் அதற்கு அமையும் விலை. கொடுமையால் அகவிலை குறைந்த காலமே (சீறாப்பு. 1,6,12). வெகுதூரம் அகவிலை யை நீட்டினேன் (சர்வ. கீர்த். 16,4). அகவிலை ஏறிப் போச்சு (கோவை வ.). 3. பொருள்களின் அதிக விலை. (தஞ்.வ.)

அகவிலைப்படி பெ. (இக்.) பொருள்களின் விலையேற் றத்தை ஈடு செய்வதற்காக மாத ஊதியத்தோடு சேர்த் துக் கொடுக்கப்படும் தொகை, பஞ்சப்படி (அலுவலக வ.) அகவினை பெ. இடையூறு. செந்நீர்க்கு அகவினை செய்யாததாகவும் (தெ.இ.க.5,206).