உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகை6-த்தல்

25,12-13 கடுமை செலவின் ஆற்றல் தோன்றப் பறவையாகக் கூறுவான் உபசார வழக்கு பற்றிச் சிறகு அகைப்ப என்றான். ப. உரை).

அகை - த்தல் 11வி. 1. முறித்தல், ஒடித்தல். தேம்பட மலர்ந்த மராஅ மெல்லிணரும் உம்பல் அகைத்த ஒண்முறி (மலைபடு. 428-429). மண்ணில் அடித்தனன் சிலரை அங்கம் அகைத்தனன் சிலரை (பாரதம் 3, 3, 98).2. அறுத்தல். மயிருக்கு ஒன்றாக வாங்கி அகைத்தகைத்திடுவர்(சீவக. 2766). 3. கூறுபடுத்தல். பொன் அகை (கலித். 55, 2 பொன்னைக் அழகினையுடைய வகிர்களை-நச்.),

.

கூறுபடுத்தின

அகை-த்தல் 11வி. 1. அடித்தல். புடைத்தல்....அடித் தல் என்ப அகைத்தலுமாகும் (பிங். 2137). 2. வருத் துதல். உடலந் தன்னுள் அகைத்திட்டு அங்கதனை ...ஐவர் கொண்டாட்ட (தேவா. 4, 54, 1). கழுப் பல ஏற்றி அகைப்பர் கடிதே (சூளா. 1940).

அகை 10-த்தல் 11வி. 1. விட்டுவிட்டுச் செல்லுதல். இது விட்டுவிட்டுச் சேறலின் அகைப்பு வண்ணம் (தொல். பொ. 541 பேரா.) 2. செலுத்துதல். நடவலே... கடவல் அகைத்தல்... செலுத்தல் (சூடா. நி. 9, 44). தொத்து அகைத்து இமயம் புரந்து அனல். உதித்து (திருக் கோவ. பு. 16,9).

அகை -த்தல் 11வி. ஒழித்தல். காண்பார் கவல் அகைத்து ஆள் (சேந். செந். அமைதி. 48).

அகை 19-த்தல் 11வி. இரத்தல். (வட.நி. 71)

அகை13-த்தல் 11வி. ஒலித்தல். (முன்.)

14

அகை பெ. எரிவு. அகையுறு கழை கொன்றுண்ட (கந்தபு. 6, 24, 13).

அகை15 பெ. கூறுபாடு, பிளவு. அகையார்ந்து இலங் கும் பரியகம் (சீவக. 2694 அகை -கூறுபாடு-நச்.).

அகைப்பு' பெ. முயற்சியால் உண்டானது. அண்டம் திருமால் அகைப்பு (இயற். நான்முகன் திருவந். 37).

அகைப்பு: பெ. அறிவுச் சிறப்பு. அகைப்பில் மனிசரை ஆறு சமயம் புகைத்தான் (இயற். நான்முகன் திருவந்.

28).

அகைப்பு3 பெ. 1. அகைப்பு வண்ணம் என்னும் சந்தம். (தொல். பொ. 541 பேரா.) 2. எழுச்சி. (செ. ப. அக.)

50

அகோரசிவன்

அகைப்புவண்ணம் பெ. (யாப்.) ஓரிடத்து நெடிலும் ஓரிடத்துக் குறிலும் விரவி வருவதால் விட்டுவிட்டுச் செல்லும் சந்தம். அகைப்புவண்ணம் அறுத்தறுத்து ஒழுகும் (தொல். பொ. 541 பேரா.).

அகைமம்1 பெ. புல்லுருவி. (பச்சிலை. அக.)

அகைமம்' பெ. கருந்தாளி மரம். (சித். அக. / செ. ப. அக.

அனு.)

அகையாறு

பெ. கிளைவாய்க்கால்.

இல்ல வளாக மும் தோட்டமும் அகையாறும் புன்செயும் (தெ.இ.

5. 4, 531).

அகைவாய்க்கால் பெ. கிளைவாய்க்கால். (தெ.இ.க. &

ப. 171)

அகோ இ. சொ. வியப்பு, வருத்தம், இகழ்ச்சி முதலிய வற்றை உணர்த்தும் குறிப்புமொழி, ஐயோ. அகோ உன்னை ஏத்தாதார் யாரே (வீரசோ. 107 ப. உரை) மண்டலத்தின் மிசையொருவன் செய்தவித்தை அகோ எனவும் (தாயுமா. 26,1).

அகோசரம் பெ. 1. புலனுக்கெட்டாதது. அகோசர வீயத்தை முற்றும் விளக்கியிட்டேனே (திருமந். 90). 2. புலப்படாதது. அடிநின்ற சூழல் அகோசரம் மாலுக்கு, அயற்கு அலரின் முடிநின்ற சூழ்முடி காண்பதரிதாயிற்று (பட்டினத்துப். ப. அந். 6). வாக்குமனா தீத அகோசரத்தில் செல்ல (பட்டி

னத்தார். அருட்பு.

74).

அகோசரி பெ. (புலன்களுக்கு எட்டாதவள்) சக்தி. பரை அபிராமி அகோசரி (திருமந். 1048).

அகோசரிமுத்திரை பெ. (யோக.) காதுகளைப் பஞ் சால் அடைத்துக்கொண்டு தலையை இருதோளிலும் சாய்த்துச் செவியில் உண்டாம் ஓசையைக் கேட்டுக் கொண்டிருக்கும் யோகாசன வகை. (யோகஞானா. 34] செ. ப. அக. அனு.)

அகோடம் பெ. கமுகமரம். (சங். அக.)

அகோபிலம் பெ. ஆந்திர மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்திலுள்ள சிங்கவேள் குன்றம்

என்னும்

வைணவத்திருப்பதி. சொல் அகோபில நரசிங்கம்

(திருச்செந்.பு.18,43). ஆளும் பெருமாள் அகோபில மால் (கூளப்ப. காதல் 3).

அகோரசிவன் பெ. திருவெண்காட்டில் சிறப்பாகவுள்ள அகோரமூர்த்தி. மருத்துவனை

சிவமூர்த்தமாகிய