உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கரங்கம்

அங்கரங்கம் பெ. எல்லாவிதமும். (சங். அக.)

அங்கரங்கவைபவம் பெ. அனைத்து நுகர்ச்சிகள். சுவா மிக்கு அங்கரங்க வைபவத்துக்கு விடுவித்த கிரா மம் (தெ.இ.க. 1, 71).

அங்கரங்கவைபோகம் பெ. → அங்கரங்க வைபவம். (நாட்.

வ.)

அங்கரசம் பெ. உடலில் உண்டாகும் சுக்கிலம். அங்க

ரசம்

...

மாயக்

குளிப்போர் (திருவனந்தை

விலா. 257).

அங்கரட்சிணி பெ. போர்க் கவசம். (வின்.)

அங்கரத்தான் பெ. தான்றி மரம். (பச்சிலை. அக.)

அங்கரமாதி பெ. பிறவிப்பாடாணம். (வைத், விரி. அக.

ப. 41

அங்கரமோதகி பெ. கருநாரத்தை. (செ. ப. அக. அனு.)

அங்கரவல்லி பெ. பெருங்குறிஞ்சா. (சித். அக./செ.ப.

அக. அனு.)

அங்கராகம் பெ. உடம்பிலும் கூந்தலிலும் பூசும் நறு மணச் சாந்துகள். நிலப் பெண்ணிற்கு அங்கராகம் என்னும் நிலப்பாணி தந்தும் (பாண்டி: செப். சின் மை. பெரிய. தமிழ். 59). மாதரொடு அங்கராகம் வீற் றிருந்து அணிந்தவார மொய்குழல் (சூளா. 488). அங்கராக மணியார மார்ப (பாரதம். 3,5,109).

அங்கராசன் பெ. (காப்.) அங்க தேசத்து அரசன் கன்னன். அங்கராசன் அடல் துரியோதனன்.... மடிய அன்று ஊதியசங்கம் வாழி (வரத. பாக.

1, 14).

அங்கராயர் பெ. 1. கள்ளர் இனப்பட்டப்பெயர். (கள்ளர் சரித். ப.145) 2. கார்காத்த வேளாளர் பட்டப் பெயர். (வட். வ.)

அங்கருகம் பெ. மயிர். (சங். அக.)

அங்கருடை பெ. கார்காத்தவேளாளர் பெயர். (கார்மண். சத. அனு. ப. 7.)

அங்கலட்சணம் பெ. உடலழகு. (நாட்.வ.)

கோத்திரப்

அங்கலாய்'-த்தல் 11வி, 1. பொருளுக்காகத் தவித் தல். அங்கலாய்க்குஞ் சோற்றுக்குந் தாமதப்

5

7

அங்கவித்தியை

படவே (முக்கூடற். 130). 2. துக்கப்படுதல், வருந்து தல். அங்கலாய்ப்பாளே சீதை (இராமநா. 3, 26

கண்ணி 5).

அங்கலாய்’ - த்தல் 11வி. பொறாமை கொள்ளுதல். ஆடு மறித்தவன் செய் விளையுமா, அங்கலாய்த்த வன் செய் விளையுமா? (பழமொழி).

அங்கலாய்" - த்தல் 11வி. முறையிடுதல். (பே.வ.)

அங்கலாய்ப்பு பெ. பேராசை. இன்னதனால் இவள் அங்கலாய்ப்பு உற்றாள் என்று அறிவதே மிகுந்த கல்வி (சி. சி. பர. லோகா. ம. 20 ஞானப்.).

அங்கலாய்ப்பு * பெ. கலக்கம். (நாட்.வ.)

அங்கலாய்ப்பு பெ. அருவருப்புக் கொள்ளுகை. (நாட்.

வ.)

அங்கலி! பெ. 1.விரல். (சம். அக./செ.ப. அக. அனு.) 2. ஐவிரலிக் கொடி. (பச்சிலை. அக.)

அங்கலி' பெ. கொங்கை. (சித். அக /செ. ப. அக். அனு.)

அங்கலிங்கம் பெ. வீரசைவர் தங்கள் உடலில் தரித்துக் கொள்ளும் சிவலிங்கம். அங்கலிங்கம் அயிக்கம் இதுவென (பிரபு. லீலை 23, 11),

அங்கவடி பெ. குதிரைச் சேணத்திலிருந்து தொங்கும் கால்தாங்கி. கச்சமும் படியும் அங்கவடி (பிங். 1621). தங்கத்தால் அங்கவடிதானணிந்து (திருவனந் தைவிலா. 483).

அங்கவத்திரம் பெ.

மேலாடை. அத்தியை எடுத்த ஐயன் அங்கவத்திரத்தில் கட்டி (வேங்கடேச. மகத். 620). அங்கவத்திரத்தை எடுத்து (மலைய.ப.338).

அங்கவயிச்சியர் பெ. ஆயுள்வேத வைத்தியர். (தெ.இ 5, 5, 164)

அங்கவன்

ப. 4)

பெ. பிறவிப்பாடாணம். * (வைத். விரி. அக.

அங்கவித்திகை பெ. கணித சாத்திரம். (சிந்தா. நி. 37/ செ.ப.அக . அனு.)

அங்கவித்தியை பெ. உடல் அங்கக் குறிகளைக் கொண்டு ஒருவருக்கு வரும் நன்மை தீமைகளை அறிவிக்கும் சாத்திரம். (சங். அக.)