உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்குரக்கால்

றீர் (சிவஞானசுவாமி தனிப்பாடல்). ஒரு படைத்தலை வனைப் போல் அங்குமிங்கும் ஓடி அவர்களைத் துரிதப்படுத்தி (செய்தி.வ.).

அங்குரக்கால் பெ. திருமணப் பந்தல் கால். அங்குரக் கால் பாளம் தூக்கல் முதலிய (சிவதரு. 2, 49 உரை).

அங்குரகம் பெ. பறவைகள் தங்கும் கூடு. (சிந்தா. நி 39/செ. ப. அக. அனு.)

அங்குரம்1 பெ. முளை. அறத்தின் வித்தின் முளைத்த அங்குரங்கொல் (கம்பரா. 5, 4, 53). அங்குரம் போல் வளர்ந்தருளி (பெரியபு. 28, 53). வித்தும் அதன் அங்குரமும் போன்றிருக்கும் மெய்ஞ்ஞா னம் (களிற்று. 57). அங்குரத்தினில் அறிகுவர் விளை பயிர் (பஞ்ச. மித்திர.35).

2

அங்குரம் 2 பெ 1. இரத்தம். அங்குரம்... இரத்தம்... நீர்...உரோமமுமே (நாநார்த்த.91). 2. நீர். (முன்.)

அங்குரம் 3 பெ. உரோமம்.. (முன்.)

அங்குரம் + பெ. குப்பைமேனி. (வின்.)

அங்குரார்ப்பணம் பெ. 1.

கோயில் பிரம்மோற்சவம் கும்பாபிடேகம் போன்ற பலநாள் விழாவில் முதல்நாள் விழா. (பே.வ.) . 2, ஒரு நிகழ்ச்சிக்குத் தொடக்கம் செய்கை. பதினைந்தா நாழிகையிலே அங்குரார்ப் பணம் பண்ணி (நெடுநல். 75 நச்.). அங்குரார்ப் பணம் அதிவாசம் முதலிய சடங்குகள் எல்லாம் நிகழ்த்தி (சீவக. 2363 நச்.).

அங்குரி'-த்தல் 11வி. 1. முளைத்தல். தவம் என்னும் பெரிய வித்துள் தங்கியே யங்குரித்து (திருவாத. பு¥ பயிர் (முத்துக் மந்தி, 7). நிலத்து அங்குரிக்கும் பிள். 7). ஐயம் உறாதே புளகம் அங்குரிப்ப (கடம் பர். உலா 375). 2. பிறத்தல். புகழ்க் குருவு மக் குலத்தில் அங்குரித்தான் (பாரதம். 1, 1, 31 பா.பே.) 3.வெளிப்படுதல். ஆண்டு மன்றல்பெற் றங்குரித் தார் (முன். 1,5,98).

DTE

அங்குரி' பெ. கைகால் விரல். (சிந்தா . நி.36[செ.ப.அக.

அனு.)

அங்குலதோரணம் பெ. சைவர் நெற்றியிலணியும் விபூதித் திரிபுண்டரம். (செ.ப.அக . அனு.)

அங்குலம் பெ. 1.கைவிரல். கமலங்கள் நிகரும் அங் (மருதூரந். 48). 2 மோதிர விரல்.

குலத் திருக்கை

6

4

அங்குள்

அங்குலம் என்பது அணிவிரலாகும் (அக.நி.அம் முதல். 20). 3. ஒரு விரலகலம். அதனிரு நான்கு கொண்டது அங்குலத்தளவை. யாமே (கந்தபு. 2, 11, 5). 4. (முன் வழங்கிய) நீட்டலளவையின்படி, ஓர் அடியில் பன்னிரண்டில் ஒரு கூறு. (எண்சுவடி)

அங்குலிட பெ. 1. விரல். அங்குலி கையெறிந்து அஞ்சுமகன் விரித்த (சிலப். 22, 44). 2. மோதிரம். அருமணிக் கடகமோடு அங்குலி யழிய (பெருங்.2, 19,138). மேல்விரல் தனக்கும் அங்குலி பொருத்தி (நல்.பாரத. திரௌ.30). 3. விரலகலம். வலஞ்சுழி

4.

உந்தி ஒரு நான்கு அங்குலி (ஞானா. 16, 12). யானைத் துதிக்கையின் நுனியிலுள்ள விரல்போன்ற சிறிய உறுப்பு. அக்கிரி குலங்கள் விடும் அங்குலி யின் நுண்திவலை (கலிங். 299).

அங்குலி' பெ. ஐவிரலிக்கொடி. (பரி. அக./செ. ப. அக.

அனு.)

அங்குலி' பெ. ஆன்மாவின் இருப்பிடமாய்க் கருதப் படும் புருவ மையம். அங்குலி கூட்டி அகம் புறம் பார்த்தனர் (திருமந்.1191).

அங்குலிகம் (அங்குலியம்) பெ. மோதிரம். அங்கு லிகமொன்று புனலாழ்தரு கிணற்றில் விழ (பாரதம்.

1, 3, 51).

அங்குலித்திரம் (அங்குலித்திராணம்) பெ. விரலுறை.

(யாழ். அக. அனு.)

அங்குலித்திராணம் (அங்குலித்திரம்) பெ. விரலுறை. (யாழ். அக. அனு.)

அங்குலிதோரணம் பெ. தோரணம்போல் நெற்றியில் சந்தனம் முதலியவற்றால் தரிக்குங்குறி. (சங். அக.)

அங்குலிப்பர்வம் பெ. விரற்கணு. அங்குலிப்பர்வங்க ளாலே தர்பபிக்க (தத்து, பிர.68 உரை).

அங்குலிமுத்திரை பெ. முத்திரை மோதிரம், (யாழ். அக. அனு.)

அங்குலியம் (அங்குலிகம்) பெ. மோதிரம். (யாழ். அக.

அனு.)

அங்குள் பெ. குறட்டைப்பழம். (செ.ப.அக .அனு.)