உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசாதி

சின்னமாகை (திருவாய். 6, 1, 7 ஈடு). 2. வழக்கத் திற்கு மாறானது. முகத்தில் சாதாரணப் புன்னகை மாறி அசாதாரணமானதொரு கருமை படர்ந்தது

(செய்தி.வ.).

அசாதி பெ. (அச் + ஆதி) உயிரெழுத்தை முதலாக உடையது. மெய்ம்முதல் அலாதி எனவும் உயிர் முதல் அசாதி எனவும் (பிர. வி. 46 உரை).

அசாதி2 பெ. செவ்வாய் என்னும் கோள். (சங். அக.)

அசாந்தன் பெ. (அ+சாந்தன் ) அமைதியில்லாதவன். விரவு அசாந்தர்கள் சமாதியின் மேவலர் (ஞானவா. உபசாந்தி. சுரகு, 41),

அசாயசூரன்

(அசகாய சூரன்)

பெ.

செய்தற்கரிய

பணிகளைப் பிறருதவியின்றியே நிறைவேற்றும் ஆற்ற லுடையவன். (பே.வ.)

அசாரம்' பெ. (அ + சாரம்) 1. சாரமற்றது. (செ.ப. அக.) 2. பயனற்றது. (கதிரை. அக.)

அசாரம்2 பெ. ஆமணக்கஞ்செடி. (யாழ். அக. அனு.)

அசாரம்' பெ. அரசவை மண்டபம். (செ. ப. அக.)

அசாரவாசி

காப்போன்.

பெ. (அசாரம் + வாசி) அரசன் வாயில்

(முன்.)

அசாவிடு-தல் 669. இளைப்பாறுதல். துண்டு அசாவிடூஉம் புள்ளினம் இரையைத் தேடித் தின்று இளைப்பாறும்

இரைதேர்ந்

.

(கலித். 132,3 புள்ளினங்கள்-நச் ).

அசாவு1-தல் 5வி. 1. தளர்தல், களைப்படைதல். சேயாறு சென்று துனைபரி அசாவாது உசாவுநர்ப் பெறின் (குறுந். 269). கடுந்தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவல் பகடே (புறநா. 399, 27). அருமை யுடைத்தென்று அசாவாமை வேண்டும் (குறள். 611). 2.(உடல்) மெலிதல். நன்னலம் தொலைய அசாஅய்த் தீப்பிணி உற்று (பெருங். 4, 2, 28).

...

மகளிர்

அசாவு-- தல் 5வி. (கருவுற்ற காலத்து ஒன்றை) விரும்புதல். பட்டத்தேவி அசைவுறு வெந்நோய் அறிந்த அரசன் அசாஅ அரும்பொருள் யாதென உசாஅய் (பெருங்.5, 1, 211-213).

அசாவேரி பெ. இளவேனிற்கால இராகங்களுள் ஒன்று. அசாவேரி தன்னியாசி ஆகும் வசந்தம் (பரத. 2,77).

84

அசித்தம் 1

...

அசி -த்தல் 11வி. உண்ணுதல். பேயொடு பூதம் பல்பிணத் தசைநாடி அசிக்கவே (தேவா. 3, 115, 3). ஊனை அசிப்பனவே போல் அமர்ந்திருந்து உண்ணும் (நீல.254).

அசி 2 - த்தல்

11வி. (ஏளனமாகச்) சிரித்தல். பேயொடு பூதம் அசிக்கவே (தேவா. 3, 115, 3). புள்ளெலாம் அசிப்ப போன்று (சீவக. 659 புள்ளெல்லாம்

...

வெருவி அவரைச் சிரிப்பன போல்-நச்.). எஃகினோடு இரும்பு அசிக்கும் எயிற்றினான் (கம்பரா. 6, 15, 64).

அசிக்க ஆரியங்கள்

திருவிசை. 4, 5).

ஓதும் ஆதரை (திருமாளி.

அசி3 பெ. ஏளனச் சிரிப்பு, இகழ்ச்சி நகை. அசி... அவமதிச் சிரிப்பு (சூடா.நி.11சகர. 3).

...

அசி + பெ. 1. படைக்கலம், ஆயுதம். அசி படைக் கலமே (முன்.).2. வாள். அசி நவிர் வாள் (முன்.) விறன்மிண்டர் அணங்காக வைக்கும் அசியும் (திருவாரூருலா 464). அசிநிகர் விழியினாய் (நல். பாரத. வேத்தி. 22). கதிர் அசி பாசம் கட்டங்கம் (பொதி. நி.2,18).3. அம்பு. அசி வாளும் அம்பும்... (முன்.) 4. போர். (சங். அக.)

அசி"

பெ. ஆன்மா. அரியவாம் சாமத்து அசி உரைப்படியே (சுத்தசாத. 7).

அசி பெ. கருமை. கந்துள் இருந்தை அசி நல்லம் ...நான் குமே கரி (ஆசி. நி. 22).

அசி பெ. அரிசி. வாலசி கழுவிய வண்ணச் செம் புனல் (சீவக. 830 பா.பே.).

அசிகை! பெ. சிரித்துப் பேசும் பேச்சு. கசுகுசு என் னவே சொல்ல அசிகை என்னடி (மதுரகவி . 4 /செ.ப.

அக.).

அசிகை2 பெ. பொறாமை. (செ. ப. அக. அனு.)

அசிகை' பெ.

பெ. பட்டுப்பருத்தி. (சங். அக.)

அசிங்கம் (அசங்கிதம், அசங்கியம்) பெ. 1. தூய்மை பின்மை. அசிங்கமான இடம் (நாட்.வ). 2. (பார்க்க/பேசத்தகாதது) அருவருப்பு. இதை வெளி யில் காட்டாதே | சொல்லாதே, அசிங்கம் (முன்.). 3. அருவருப்பான பொருள். அது அசிங்கம், தொடாதே (முன்.).

அசித்தம்1 பெ. (அளவை) மூவகை ஏதுப் போலிகளுள்