உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசுரநாள்

அசுரநாள் பெ.

(இருபத்தேழு

நட்சத்திரங்களுள்

பத்தொன்பதாவதாகிய) மூலம். கொக்கே...அசுர

நாள் மூலம் (பிங். 257).

அசுரம்1

பெ.

16, 24)

அரக்கத்தன்மை.

(பகவத். வெண்.

அசுரம்2 பெ. 1. எட்டுவகையான மணங்களுள் ஒருவன் தன் வீரத்தை அல்லது திறமையைக் காட்டிப் பெண் கொள்ளும் மணவகை. அசுரமாவது வில்லேற்றினானாதல் திரிபன்றி எய்தானாதல் கோடற்குரியன் எனக் கூறியவழி அது செய்தாற் குப் பெண்ணைக் கொடுத்தல் (தொல். பொ. 89 .). அசுரம் என்பது கொல்லேறு கொண்

இளம்.).

டான் இவளை எய்தும் வில்லேற்றினான் இவளை எய்தும்... என இவ்வாறு சொல்லிக் கொடுப்பது (இறை. அக. 1 உரை). 2. பெண்ணிற்குப் பொன் னணிகள் கொடுத்தும் அவள் உறவினர்க்குப் பொருள் கொடுத்தும் பெண் கொள்ளும் மணவகை. (சங். அக.) அசுரமணம் பெ. அசுரம்2. (செ. ப. அக.)

அசுரமந்திரி பெ. (அசுரர்களின் அரசனுக்கு அமைச்ச னான) சுக்கிரன். கடலுளான், அமரர் ஆசான் ...அசுர மந்திரி (சூளா. 1098).

அசுரர் (அசுர்) பெ. (தேவர் அல்லாதவர்) அரக்கர். பல்வகை அசுரரும்...எண்வகை நரகரும் (மணிமே. 6,180-181). ஆயிரம் அசுரர் வாழும் அணிமதில் மூன்றும் வேவ (தேவா. 4,53,10). திண்கொள் அசுரரைத் தேய வளர்கின்றான் (பெரியாழ். தி.1, 3,16). தேவரும் அசுரரும் பொருத காலத்து (இறை. அக.39 உரை). எழுந்த சுர அசுரர் விழாத வாறும் விசும்பற வீசியே (தக்க. 364). திண்கழற் கால் அசுரர்க்குத் தீங்கு இழைக்குந் திருமாலை (திருவாய். 3, 5, 2). அரியன செய்ப அன்றே அசு ரர் (சூளா. 1190). இராவணாதி அசுரர்களை நாசம் செய்து (பிரதாப.ப.62).

அசுரர்க்கமித்திரர் பெ. (அசுரர்க்கு + அமித்திரர்) (அசுரர்க்குப் பகைவர்) தேவர். வானவர்... அசு ரர்க்கமித்திரர்... தேவர் பொதுப்பெயர் (பிங். 177).

அசுரவாத்தியம் பெ. முரசு போன்ற

வாத்தியம். (செ.ப.அக.அனு.)

பேரொலியுடைய

அசுரவேகம் பெ. ஆற்றலுடன் கூடிய கடும் விரைவு. அசுரவேகத்தில் செய்துமுடித்தான் (நாட். வ.).

€8

90

அசுவத்தாமன்

அசுர ைவத்தியம் பெ. கடுமையான மருத்துவம். (செ.ப.

அக.)

அசுரற்றடிந்தோன் பெ. (சூரபன்மன் என்னும் அசுர னைக் கொன்ற) முருகன். குமரன்

...

அசுரற்றடிந் தோன் அறுமுகக்கடவுள் பெயரே (பிங். 110).

அசுரன்1 பெ. 1. அசுரர் கூட்டத்துள் ஒருவன். கள்ள அசுரன் வருவானைத்தான் கண்டு (பெரியாழ். தி.2, 5, 4).2. எடுத்த செயலை அசுர ஆற்றலுடன் விரைந்து முடிப்பவன். வேலையில் அவன் அசுரன் (நாட்.வ.).

அசுரன்2 பெ. பூவழை என்னும் மருந்துப்பொடி. (போகர் நி.19)

அசுவகதி பெ. குதிரையின் வேகம், குதிரையின் ஐவகை நடை, (செ.ப.அக.)

அசுவகந்தி (அசுவகெந்தம்) பெ. அமுக்கிராக் கிழங்கு. (குண. 1 ப.20).

அசுவகெந்தம் (அசுவகந்தி) பெ. அமுக்கிராக்கிழங்கு.

(வாகட அக.)

அசுவசட்டிரம் பெ. நெருஞ்சில். (வைத். விரி. அக.ப. 13) அசுவசாகுடம் பெ. பூடுவகை. (சாம்ப. அக.)

அசுவசாத்திரம் (அச்சுவசாத்திரம்) பெ. குதிரையின் உடற்கூறு, நோய், மருத்துவம் முதலியவற்றைக் கூறும் நூல். (சங். அக.)

அசுவணி பெ. சொறிசிரங்கு. (செ.ப .அக.)

அசுவணி' (அசுபதி, அசுலதி, அசுவினி) பெ. இரு பத்தேழு நட்சத்திரங்களுள் முதலாவது. (சோதிட வ.) அசுவத்தம் பெ. அரசமரம். நீண்ட அசுவத்தம் அயல் நீர்த்தடம் (பெருந்.பு.35,5). ஆர் மேவிய அசுவத் தமது எனவே அரசு அதனின் பேர்மேயது (பகவற்

15, 2).

அசுவத்தவிவாகம் பெ. குழந்தைப் பேறு வேண்டி அரசை ஆணாகவும், வேம்பைப் பெண்ணாகவும் கொண்டு இரண்டிற்கும் விதிப்படி செய்யும் ஒரு மணச்சடங்கு. (செ.ப.அக. அனு.)

,

அசுவத்தாமன் (அச்சுவத்தாமன், அச்சுவத்தாமா, அசு வத்தாமா) பெ. (துரியோதனன் சார்பாகப் போர் புரிந்த) துரோணாசாரியரின் மகன். தாப்பை ஆச னத்து இனிதுறையம் அசுவத்தாமன் (அரங்க. பாரதம். சிகா. 46). புகழ்ப்பதாகை ஆர்ப்பரித்திடும் சொல்