உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சனம்2

...

அஞ்சனம்' பெ. எட்டுத் திக்கு யானைகளுள் மேற்குத் திக்கிற்கு உரிய யானை. அஞ்சனம் புட்பதந்தம் எண்டிசை யானைப் யானைப் பெயர் (பிங். 20). எட்டுத் திக்கிலும் நின்ற ஐராவதம்...அஞ்சனம்... என்கின்ற திக்கசங்கள் (தக்க. 118 ப. உரை).

அஞ்சனம் 3 பெ. ஒரு மரவகை. குரல் அஞ்சன மந் தரை (மச்சபு. பூருவ. 106,5).

அஞ்சனம் + பெ. நீலச்சாயம் தரும் அவுரிச்செடி. (செ.

ப. அக. அனு.)

அஞ்சனம்' பெ. 1. கரு நீலக்கல். அஞ்சன மேனி இவ்வழகற்கு (கம்பரா. 2, 4, 184). 2. கரியநிறச் சல வைக்கல். (ராட். அக.)

அஞ்சனம்' பெ. (இன்று கிடைக்காத) ஒரு தருக்க நூல். ... பிங்கலம் அஞ்சனம்...முதலிய செய்யுட் களுள்ளும்...காண்க

(யாப். வி.96 உரை).

அஞ்சனம்' பெ. மந்திரம் ஓதித் தெய்வ உருவுக்குச் செய்யும் திருமுழுக்கு. அஞ்சனம் இருளும்... மஞ்சன மும் என வழங்கினர் (பொதி.நி.2,34).

அஞ்சனம்' பெ. குற்றம். (திவ்ய. அக.)

அஞ்சனம்பார்-த்தல் 11 வி. காணாமற் போன பொருளை மையிட்டறிதல். அவர் பணத்தை யார் திருடினார் என அறிய அஞ்சனம் பார்க்கப் போகிறோம்

(பே.வ.).

அஞ்சனலா பெ. 1. கருநீல நிறத்திலும் சங்கு வடி வத்திலும் அமைந்த கருங்காக்கணம்பூ. (செ.ப.அக. அனு.) 2. கருங் குவளை. (யாழ். அக. அனு.)

அஞ்சனவண்ணன் பெ. கருநிறமுடைய கண்ணன், இராமன், திருமால். அஞ்சனவண்ணன் ஆடிய ஆடலும் (சிலப். 6, 47). அஞ்சனவண்ணன் அறிந்து துயில் உகக்க (பாரத வெண். 76). ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சனவண்ணன் (பெரியாழ். தி. 1, 8, 11): அஞ்சனவண்ணன் என் ஆருயிர் நாயகன் ஆளாமே (கம்பரா. 2, 12, 14).

அஞ்சனவித்தை பெ. காணாமற் போன பொருளை மையிட்டுக் காணும் கலை. (செ. ப . அக.)

அஞ்சனவுருவன் பெ. கருநிறமுடைய திருமால். அஞ் சனவுருவன் தந்து நிறுத்தாங்கு (புறநா. 174,5).

1

0.1

அஞ்சாலிமக்கள்

அஞ்சனவெற்பு பெ. திரு வேங்கட மலை. லும் அஞ்சனவெற்பும் (திருவாய். 8, 2,8).

பாற்கட

அஞ்சனா பெ. சாகுபடி மதிப்பு. (செ.ப. அக.)

அஞ்சனாட்சி பெ. மைதீட்டிய கண்ணுடையாள். (செ.

ப . அக.)

அஞ்சனாதார் பெ.

அக.)

சாகுபடி மதிப்பிடுபவன். (செ.ப.

அஞ்சனாவதி பெ. வடகீழ்த் திசை யானையின் பிடி.

(அபி. சிந்.)

அஞ்சனி' பெ.

வாகும்

காயாமரம். பூவை யஞ்சனி...காயா

(பிங்.2715).

அஞ்சனி - பெ. நாணல் புல்வகை. (வைத். விரி. அக.ப.13)

அஞ்சனை 1 பெ. (காப்.) அனுமனுடைய தாம். அஞ்சனை வயிற்றில் வந்தேன் நாமமும் அனுமன் என்பேன் (கம்பரா. 4, 2, 15).

அஞ்சனை 2 பெ. வடதிசை யானையின் பிடி. (அபி. சிந்.)

அஞ்சனை சாபிதா பெ. விளைச்சல் புள்ளிக்கணக்கு.

(செ.ப. அக.)

அஞ்சாணிமூலி பெ. வேலிப்பருத்தி. (செ.ப. அக. அனு.) . அஞ்சாப்பட்டயம் பெ. 1. எடுத்த உரிமைகளைத் திரும்ப அளித்ததற்குரிய சாசனம். (இலங். வ.) 2. பிறர் கொடுமை செய்யாவாறு காக்கும் சாசனம். (யாழ். அக.) 3. வேற்று நாட்டிற்குச் செல்ல அரசு வழங்கும் கடவைச்சீட்டு. (இலங்.வ.)

அஞ்சாரப்பெட்டி (அஞ்சறைப் பெட்டி) பெ. கறிக் கூட்டுப் பொருள்கள் வைக்கும் ஐந்து (அல்லது மிகுதி யாக) அறைகள் உள்ள பெட்டி. (நாட். வ.) அஞ்சாலி பெ. வரிவகை. (திருவாங்.கல்.)

அஞ்சாலிகள் பெ. நிலவருவாயில் ஐந்தில் நான்கு பங்கு அரசுக்குத் தந்து ஒரு பங்கு மட்டுமே எடுத்துக் கொள்ளும் நிலையுடைய குடிகள். (ராட். அக.)

அஞ்சாலிமக்கள் பெ. இடையரில் ஒரு பிரிவினர். அஞ் சாலி மக்களும் சாணாரும் பாடலுற்றார்

(பெருந்.1735).

...