உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அட்டபரிசம்

வெண்ணெய், குங்குலியம், நற்காவி ஆகிய எட்டுப் பொருள்களையும் கூட்டி இடித்துச் செய்யும் கலவை. (கையேடு ப.283)

அட்டபரிசம் பெ. தொடுதல் உணர்வு உண்டாக்கும் தட்டல், பற்றல், தடவல், தீண்டல், குத்தல், வெட்டல், கட்டல், ஊன்றல் எனும் எட்டுச் செய்கை. (சங். அக.)

அட்டபாலகர் (அட்டபாலர்) பெ. எட்டுத் திக்குப் பாலகர். அட்டபாலகரும் வசுக்களும் (நல். பாரத. குமாரச. 103).

அட்டபாலர்

(அட்டபாலகர்) பெ. எட்டுத் திக்குப் பாலகர். அட்டகெசம் அட்டபாலர் நாட்டே (கருவூரார்.திர. 154).

அட்டபுட்பம் பெ.

பெ. 1. புன்னை, வெள்ளெருக்கு, சண் பகம், நந்தியாவர்த்தம், நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை ஆகிய வழிபாட்டுக்குரிய எட்டு மலர்கள். அட்டபுட்பம் அவை கொளுமாறு கொண்டு (தேவா. 5, 54, 10). 2. கொல்லாமை, ஐம்பொறி யடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், தியானம் என்ற பண்புகளாகிய மலர்கள். (தத்து.பிர. 164 உரை)

அட்டபுயகரத்தான் பெ. காஞ்சித் திருஅட்டபுயகரத்தில் எழுந்தருளியுள்ள பெருமான், திருமால். அட்டபுய கரத்தான் (இயற். மூன்றாம் திருவந்.99).

அட்டபுயகரம் பெ. திருமால் எழுந்தருளியுள்ள ஊர். செழும்பொழில்சூழ் அட்டபுயகரம் (மாறனலங். 626) அட்டபுயங்கப்பிரான் பெ. (எட்டு மா நாகங்களை அணிந்த) சிவபிரான். அட்டபுயங்கப்பிரானது இடம் கலிக் கச்சி யநேகதங்காவதமே (தேவா. 7,

10, 7).

அட்டபோகம்1 பெ. நில உடைமையில் நீர், மரம், கல், செல்வம், புதையல், விற்பனை, ஒற்றி, தானம் ஆகிய எண்வகை உரிமைகள். (செ.ப. அக.)

அட்டபோகம் - பெ. ஆடவர் துய்க்கும் எண்வகை இன் பம். போகம் எட்டாம்; அவை பெண் ஆடை

...

அணிகலன் உண்டி தாம்பூலம் பரிமணம் பாட்டு அமளி எனப் பகர்ப (பொருட், நி. 712). அட்டபோகம் பெ. அலர்வில்லை யெனும் மருந்து.

(வாகட அக.)

அட்டம்1 பெ. 1. குறுக்கு. அட்டமே பாய நின்று ஆடும் எங்கள் அப்பன் (காரை. பதிகம் 1, 6). அட்

1

09

அட்டமங்கலம் 3

டம் ஆளித்திரள் வந்தணையும் (தேவா. 1,69,10). நாய்கள் அட்டமாக விட்டு (பெரியபு. 10, 76). கரை கள் எல்லாம் கண்டுகண்டு ஒப்புநோக்கி அட்டமே செல்வார் (திருவிளை. பு. 61, 40). அட்டம் வளராது நெட்ட நெடுமை கொண்டன (தக்க. 406 ப. உரை). மாட்டுக்கு அட்டத்திலே போகாதே (வட்.வ.). 2. விரோதம். அட்டமாக வழுதிமேல் அமர்க்கு எழுந் தது ஒக்குமே (திருவிளை. பு. 13,9)

அட்டம்' பெ. பக்கம். அட்டமிட்ட

நெடுங்கழை

(கலிங். 143). இரண்டட்டத்திலும் மரகதகிரியைக் கடைந்து மடுத்தாற்போல் (அட்டாதச. அரிச்சி. பிர3). இரண்டட்டத்திலுமிருந்து அனுபவிக்கிற கூந்தல் மலர்மங்கைக்கும் (குருபரம். ஆறா. ப. 4). அட்டம் நின்றருளிய (திருவருட்பா 4615,258).

அட்டம்3 பெ. சாதிக்காய். (சங். அக.)

அட்டம்+ பெ. எட்டு. அவனே அட்டமூர்த்தியுமாய் (காரை. அந்.21). அட்டமாவுருவினானே ஆவடு துறையுளானே (தேவா. 4, 57, 3). மலைமகள் பாகத்து அட்டமூர்த்தியைப் பொருளென உடைமையால் (பெரியபு.28,786)

அட்டம்பக்கம் பெ. அடுத்த பக்கம். (இலங். வ.)

அட்டம்பாரி-த்தல் 11 வி. 1.பருத்தல். (முன்.) பக்கஞ்சார்ந்து செல்லுதல். (முன்.)

2.

அட்டமகாரோகம் பெ. எளிதில் தீராத வயிற்றுப் போக்கு, வாதம், குட்டம், மூலம், பவுத்திரம், பெரு வயிறு, கல்லடைப்பு, மேகம் என்னும் எட்டு நோய்கள். (சித். பரி. அக.ப. 154)

அட்டமங்கலம்1 பெ. சாமரம், நிறைகுடம், கண்ணாடி, தோட்டி, முரசு, விளக்கு, கொடி, இணைக்கயல் என் னும் எண்வகை மங்கலப் பொருள்கள். அட்டமங்கல மும் ஏந்தி ஆயிரத்தெண்மர் ஈண்டி (சீவக. 472). மங்கலம் எட்டாம் அவைகள் சாமரம்... கயல் என விளம்புப (பொருட்.நி.713).

அட்டமங்கலம் " பெ. எட்டுறுப்புக்களில் வெண்மை நிறம் கொண்ட குதிரை. மணஞ்சிறந்த அட்டமங்கலங்

கள் பாராய் (திருவால.பு.28, 68).

அட்டமங்கலம்' பெ. கடவுள் காக்க என எட்டு அக வல் விருத்தங்களால் பாடப்பெறும் பிரபந்தவகை. கட வுள் காக்க எனக் கவி இருநான்கு.. வகுப்பது அட்ட மங்கலம் (இலக். வி. 843).