உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அட்டாங்கயோகம்

அட்டாங்கயோகம் பெ. எண்வகை யோக உறுப்புக்க ளின் வழியே செய்யும் யோக சாதனை. இயமநிய மம் அட்டாங்கயோகம் (பிங். 419). அட்டாங்க யோகமும் ஆதாரம் ஆறும் (பட்டினத்தார். பொது 25). அட்டாங்கயோக மார்க்கம் குரு தொட்டே காட்டவேண்டும் (போகர் 700, 28). செப்புறு நல் அட்டாங்க யோகசித்தி சேர்ந்தவன் (பாரதி. அறுபத்.

24).

அட்டாங்கவிமானம் பெ. எட்டு அங்கங்களையுடைய கோயில் விமானம். அட்டாங்க விமானம் அவை யிரண்டும் (அழ. கிள். தூது 149).

அட்டாணி பெ. கோட்டை மதில் மேலுள்ளமண்டபம். தலையெடுப்பாக உயர்ந்த அட்டாணியும் (இராம நா. 5,3 தரு 2).

அட்டாணிக்கால்

.

(அட்டங்கால், அட்டணங்கால், அட்டணைக்கால்) பெ. குறுக்காக மடக்கி வைக்கும் கால். (வட்.வ.)

அட்டாதசகணம் பெ. அமரர், சித்தர், அசுரர், தைத்தி யர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், கந்தருவர், இயக்கர், விஞ்சையர், பூதர்; பசாசர், அந்தரர், முனி வர், உரகர், ஆகாய வாசியர், போகபூமியர் எனப் புரா ணங்கள் சொல்லும் பதினெண்கணம். (செ. ப. அக.)

அட்டாதசவன்னனை பெ. (காப்.) மலை,கடல்,நாடு, நகர், சிறுபொழுது ஆறு, பெரும்பொழுது ஆறு சூரியன் தோற்றம், சந்திர்ன்தோற்றம் என்னும் பதினெட்டு வருணனைகள். அட்டாதச வன்னனைகள் எனும் வாழ்வு எலாம் கண்டு மகிழ்ந்தாயே (தமிழ்விடு.

34).

அட்டாதசவாத்தியம் பெ. தோடி நாகசுரம், மகாபேரி

மந்தத்தவில், தவண்டை, சங்கீரணதாளம், பாணி, ஒத்து நாகசுரம், மகாசங்கம், சுற்றுத்தவில், சிகண்டி, இடங்கா, நகராதாளம், கிடிபிடி, பேரிதாளம், சக்கர வர்த்தி, பம்பை, மகாடமரு, நகரா ஆகிய பதினெண் வாத்தியவகை. (நடனாதி வாத்திய ரஞ்சகம்)

அட்டாதுட்டம் (அட்டாதுட்டி) பெ. அடாவடித்தனம்.

(வின்.)

அட்டாதுட்டி (அட்டாதுட்டம்) பெ.அட்டாதுட்டம். அட்டாதுட்டிகள் பேசி (இராமநா. 3, 4 தரு 16).

அட்டாமுகம் பெ. இகழ்ச்சி, கவலை, ஐயம் இவற்றால் கோணிய முகம், சுளித்தமுகம். (ராட். அக.)

1.

12

அட்டாவதானன்

அட்டாரி (அட்டாலி)

பெ. வீட்டுக்கூரையின் கீழ்

அமைக்கப்படும் பரண். அந்தக் கலப்பைக்கொழு அட்டாரியில் கிடக்கிறது (கோவை வ.).

அட்டாலகம் (அட்டாலம், அட்டாலை', அட்டாளை) பெ. கோட்டை மதில் மேலுள்ள காவற் கூடம். அட் டாலகமும் மதிற்பொறியும் முதலாயின (குறள்.

744 மணக்.).

அட்டாலம் (அட்டாலகம், அட்டாலை, அட்டாளை) பெ. கோட்டை மதில் மேலுள்ள காவற்கூடம்.(கதிரை.

அக.)

அட்டாலி (அட்டாரி) பெ. வீட்டுக் கூரையின் கீழ் அமைக்கப்படும் பரண். அவை இப்போது வேண்டிய தில்லை அட்டாலியில் போடு (கோவை வ.).

அட்டாலை (அட்டாலகம், அட்டாலம், அட்டாளை) பெ. 1. கோட்டை மதில் மேலுள்ள பரண்வடிவாக இயற்றப்பட்ட காவற்கூடம். கதனவாயிலும் கட்டும் அட்டாலையும்...முற்றின (கம்பரா. 6, 14, 32). கீழ்ப் பால் இஞ்சியணைய அட்டாலை கட்டு (திருவால். பு.26,10). அட்டாலை மண்டபம் செய்யென அது கேட்டு எழுந்தான் (திருவிளை. பு.22, 23). அட் டாலைச் சேவகனை (மதுரைச். உலா 276). 2. காவற்பரண். நாஞ்சில் மருங்கணைய அட்டாலை (நம்பியாண். திருவுலா 28). 3. காவல். (செ.ப. அக. அனு.) 4. மேல் வீடு. (வின்.)

அட்டாலை' பெ. மரவகை. (வைத். விரி. அக. ப. 13) அட்டாலைச்செட்டி பெ. பழைய நாணய வகை. நெடிய புகழ் அட்டாலைச்செட்டி (சரவண.பண விடு. 59).

அடாலைச்சேவகன் பெ. கோட்டை மதில் மேலுள்ள மண்டபத்திலிருந்து காவல்புரியும் சேவகன். செல்ல மர் எயில் அட்டாலைச்சேவகன் (திருவால. பு. 26, 17).அட்டாலைச் சேவகரை நினைத்து (தக்க.

172 ப. உரை).

காரியங்

அட்டாவதானம் பெ. ஒரேகாலத்தில் எட்டுக் களில் கவனஞ் செலுத்துகை. அட்டாவதானமும் தொல்காப்பியமும் அகப்பொருளும் (தனிப்பா. 1 சொக்க. 13), ஆசு முதல் நாற்கவியும் அட்டாவதா னமும் ... பாலித்து (கந்தர்கலி.118).

அட்டாவதானன் பெ. அட்டாவதானம் கெய்வோன், கங்குலன் சொக்கநாதன் அட்டாவதானன் (திரு வெள்ளூர்ப்பு. பாயிரம்).