உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அட்டு'-தல்

...

மொய்

3.

இந்திர நீலம் (ஆனந்த வண்டு.29). 2. வார்த்தல். யாப்பினுள் அட்டிய நீர் (குறள்.1093). புனல் அட்டி (பரிபா. 20, 52). ஓடு நீரினை ஓட்டைக் குடத்து அட்டி (தேவா. 5,99,9). ஊற்றுதல். வாயில் அட்டிய கஞ்சியும் கடைவழி வார (பெரியாழ். தி. 4, 5, 5). 4. இடுதல். அவரை வான் புழுக்கு அட்டி (பெரும்பாண். 195). அட்டு மின் சில்பலிக்கு (தேவா. 7, 43,9). மெய்யெனும் மஞ்சள் நிறைய அட்டி (திருவாச. 9, 9). தூளியின் பூழி அட்டிச் செம்மிய நிறைகுடம் (கம்பரா. 4, 11, 32). புகரில் வெண்பொரிகை அட்டி இறைவரை ஏத்தும் (பெரியபு. 28, 1240). நளினமிசை அட்டிய இடப்பதமும் (திருக்காளத். பு. 7, 116). 5. (கூந்த லில் எண்ணெய் முதலியன) தேய்த்தல், பூசுதல். குழலைக் குறந்து புளி அட்டி (பெரியாழ். தி. 2, 5, 8). அளகத்தின் அட்டிய தாதும் (திருக்கோ. 152).

அட்டு-தல் 5 வி. சமைத்தல். பண்ணியம் அட்டியும் பசுபதங்கொடுத்தும் (பட்டினப். 203). அட்டு ஊண் கம்பலும் (பெருங். 2, 2, 87).

அட்டு-தல் 5வி. கொடையைக் கல்லிலோ செம்பிலோ வெட்டி அளித்தல். கோக்கருநந்தடக்கண் டின பூமி (திருவாங். கல். 1, 6).

...

அட்

அட்டு + - தல் 5வி. 1. பிணைத்தல். என்பு அட்டிக் கட்டிய இந்தப்பைக் குரம்பையை (நம்பியாண். திரு நாவுக். 5).2. ஒட்டுதல். (செ. ப. அக.)

அட்டு-தல் 5 வி. உருக்குதல். அட்டொளி அரத்த வாய்க் கணிகை (சீவக. 98 உரை).

அட்டு' பெ. வெல்லம், கருப்பட்டி. பனாஅட்டு (தொல். எழுத். 284 இளம்.).

அட்டு' பெ. வறுமையாலாகிய தாழ்நிலை. அவன் அட்டுப் பிடித்தவன். (ரா. வட். அக.).

அட்டு (அட்டும்) இ. சொ. ஒரு வியங்கோள் விகுதி. அவன்வரட்டு (இலங். வ.).

அட்டுக்கிறை பெ. வரிவகை.

அட்டுக்கிறையும்

இடைப்பாட்டமும்

(தெ.இ.க. 3,151).

அட்டுணவு பெ. சமைத்த உணவு. (செ. ப. அக. அனு.)

அட்டுப்பாய்ச்சல் பெ. திரவத்தின் அனைத்துத் துகள் களும் வெவ்வேறு திசையிலும் கோணத்திலும் செல் லுகை. (மருத். க. சொ. ப. 147)

114

அட்டைக்குழி

அட்டுப்பிடித்தல் 11 வி. அழுக்கடைதல். துணி அட் டுப்பிடித்துக் கிடக்கிறது (நாட்.வ.).

அட்டுப்பு பெ. உவர் நீரை ஆவியாக்கி எடுத்த உப்பு. அமிர்தையிங்கு அட்டுப்பு (தைலவ. தைல. 1291செ. ப. அக.). அட்டுப்பு வெடியுப்பாம் ஒன்பதுப்பும் விரவிப் பொடித்து (போகர் 700, 466). பித்தம் குடி விலகும் அட்டுப்பின் பேரை அறை (பதார்த்த. 1124).

+000

அட்டும் (அட்டு) இ. சொ. வினையின் ஈறாகிப் பெரி

தும் ஒப்புதல் அனுமதிப்பொருளும் வாழ்த்தற் பொரு ளும் தரும் வடிவம். அவர் தரையில் கெட்ட பேர் எடுக்கட்டும் தம்பிமார்களை முடுக்கட்டும் (சர்வ. கீர்த். 167). வாங்கட்டும் வாங்கட்டும், வட்டி முடையட்டும் நாஞ்சினாட்டுக்கு நன்மை உண்டா கட்டும் (நாஞ். மரு. மான். 7,168-169).

அட்டூண் பெ. சமைத்த உணவு. அயலறியா அட் டூணோ இல் (பழமொ. நா. 237).

அட்டூழியம் பெ. கொடிய தீமை. அவன் செய்கிற அட்டூழியம் தாங்க முடியவில்லை (பே.வ.).

அட்டை1 பெ. 1. உடலோடு ஒட்டி இரத்தத்தை உறிஞ்சும் நீர்ப்புழு. ஆக்கமுண்டேல் அட்டைகள் போற் சுவைப்பர் (திருவாய். 9, 1, 2). அட்டை ஊன் உள்ள இடத்தைப் பற்றினாற் போல (சீவசம். 36 உரை). அட்டை கடிக்குதோடி (மலைய். ப. 12). 2. இரத்தத்தை உறிஞ்சும் உண்ணி வகை. (ரா. வட். அக.) 3. மழைக்காலத்தில் மனைப்புறத்தில் ஊரும் சிவப்பு அல்லது கருப்பு நிறத்தில் உள்ளதும், எண் ணற்ற கால்களை உடைய மெலிந்து நீண்டதும் ஆகிய சிறிய மரவட்டை. (நாட். வ.) 4. மழைக்காலத்தைத் தொடர்ந்து எங்கும் மண்ணில் ஊர்கின்ற முழுதும் சதைப்பற்றாகத் தெரியும் கருநிறச் சிற்றுயிர் வகை,

(முன்.)

அட்டை2 பெ. 1. செருப்பின் தோலட்டை. இந்தச் செருப்பின் குதியில் ஓர் அட்டை வைத்துத் தை (பே.வ.). 2.காகித அட்டை. அட்டைப் பெட்டி யில் வை (பே.வ.). 3. புத்தக மேலுறை. புத்த கத்துக்கு அட்டை போட்டுக் கொடு (நாட்.வ.). 4. உத்திரம், விட்டம், திராவி. (செ. ப. அக.) 5. (இக்.) வீட்டுமேற்கூரையில் சாத்தின்மீது பரப்பும் சிமிட் டித் தகடு.

அட்டைக்கடி பெ. அட்டைக்கடித் தழும்பு. (சாம்ப. அக.) அட்டைக்குழி பெ. அட்டைகள் சூழ்ந்திருப்பதாகக் கரு தப்படும் நரகம். (செ.ப. அக.)