உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடக்கம் 3

எவ்வளவு (நாட். வ.).

விலை. (செ. ப. அக.)

அடக்கம்3

2. ஒரு பொருளின் வாங்கிய

பெ. வாணவகை. (இலங். வ.)

அடக்கம் + பெ. (சிற்ப.) குறிப்பிட்ட எல்லையிலிருந்து படிமத்தின் முன்னுறுப்புக்களும் பின்னுறுப்புக்களும் அடங்கியிருக்கும் அளவு. (சிற். செந்.ப. 184)

அடக்கம்' பெ. தோல் கருவி வகை. பேரிகை படகம்

...

சிறுபறை

...

எனத்

தகுணிச்சம் அடக்கம் கருவிகள் (சிலப். 3, 27

தோலால் செய்யப்பட்ட

அடியார்க்.).

அடக்கம்பண்ணு-தல் 5வி. 1. பிணத்தைப் புதைத்தல். இறந்தவரை அடக்கம் பண்ணிவிட்டு வீடு திரும்பி னர் (நாட்.வ.). 2. மறைந்த பெரியோர்களைக் கல்லறை யில் வைத்தல். அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து யூதர்கள் அடக்கம் பண்ணும் முறைப்படியே 19,40). 3. மறைத்துவைத்தல். நேற்று முற்றத்தில் கிடந்த பொருளை அடக்கம் பண்ணிவிட்டனர் (நாட். வ).

(விவிலி. யோவான்

அடக்கமா1(கு)-தல் 5வி. உயிர் பிரிதல், சமாதி

இன்று

தல். அவர் அடக்கமாகிவிட்டார் (பே.வ.).

அடை

அடக்கமா-(கு)-தல் 5வி. சுருங்குதல். (சாம்ப. அக.)

அடக்கமானம் பெ. (சிற்ப.) படிமக் கலையிற் கை யாளப்படும் அறுவகை அளவு அளவு மானங்களுள் ஒன்று. இவ்வளவை அடக்கமானம் என்றும் (சிற்.

செந்.ப.184).

...

...

அடக்கமெழும்பு-தல் 5வி. மூர்ச்சை தெளிதல், மயக்கந் தெளிதல்.(வின்.)

அடக்கவிலை பெ. இலாபம் வைக்காமல் செலவான தொகையின் வீதத்திற்கு விற்பதாகிய விலை. பாரதி நூல் அடக்க விலைக்கே விற்கப்படுகிறது (புதியவ.).

அடக்கி பெ. தன் திறமையை அல்லது நிலைமையை வெளியில் காட்டாதவன். (இலங்.வ.)

அடக்கியல் பெ.அடக்கியல் வாரம். அடக்கியலின்றி அடிநிமிர்ந்தொழுகியும் (தொல். பொ. 452 இளம்.).

1

16

அடக்குப்பண்ணு-தல்

சுரிதகம் எனினும் அடக்கியல் எனினும் (வீரசோ. 115 உரை).

...

ஒக்கும்

அடக்கியல்வாரம் பெ. (யாப்.) சுரிதகம் என்னும் செய் யுள் உறுப்பு. அடக்கியல் வாரமோடு அந்நிலை குறித்தே (தொல். பொ. 455 இளம்.).

அடக்கியிரு-த்தல் 12 வி. ஒன்றைப் பற்றிய செய்திகளைத் தன்னுள் கொண்டிருத்தல். திருக்குறள் உலக வாழ்க் கைக்குரிய பல செய்திகளைத் தன்னுள் அடக்கி யிருக்கிறது (நாட். வ).

அடக்கிராவி பெ. பெ. நெல்வகை. (செ. ப. அக. அனு.)

அடக்கு-தல் 5வி. 1. மனம் அடங்கச்செய்தல், கட்டுப் படுத்துதல். நன்றுந் தீதும் கண்டாய்ந்து அடக்கி (மதுரைக். 496). நின் பெண்டே யான் தன் அடக் கவும். தான் அடங்கலளே (ஐங். 68). அஞ்சும் அடக்கடக்கென்பர் அறிவிலார் (திருமந். 2033). அவா அடக்கல் முன் இனிதே (இனி. நாற்.25). எண்ணுறு காமம் முதற்பகை அடக்கார் இருள்படு கானகத்து ஏகி (செ.பாகவத. 5, 1, 6). முக்கணமும் ஐம்புலனும் அடக்கி (அண். வெண். 61). 2. புழுதி அடங்கச் செய்தல். பூமியை அடக்கும் கண்ணீர்ப் பரதன் (கம்பரா. 6, 38, 3). 3. கீழ்ப்படுத்துதல், அடக்கரும் வேழத்தடக்கை வீழவும் (பெருங். 3, 20, 46). கார் அரக்கன் தனைத் துட்டடக்கிய (தேவா. 5,45,10). தென்பகை அடக்கியபின் (தெ. இ.க. 8, 97, 6). 4. சுருக்குதல். அஞ்சினன் இவ் உரு அடக்குவாய் என்றாள் (கம்பரா. 5, 4, 106). 5.உள்ளடக்குதல். மூன்றுறுப்பு அடக்கிய தன்மைத் தாயின் (தொல். பொ. 474 இளம்.). தன்னுள் அடக் கிக் கரக்கினும் கரக்கும் (புறநா. 1,8). வையம் முற்றும் வயிற்றின் அடக்கிய ஐயன் (கம்பரா. 1, 20, 20). 6. உள்ளடக்கமாக வைத்தல். ஆர்த்த கங்கை அடக்கும் வாட்போக்கியார் (தேவா.5, 86, 7). அருங்கணை அடக்கிய ஆவநாழிகை (சீவக. 2224). 7. மறைத்தல். காதலை அயலார் அறியாமல் அடங்கின காலத்து (குறள். அதி. 124 மணக்.). 8. (உட லைப்) புதைத்தல். வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ (புறநா. 93,11). நடுக்கமில் வேந்தனை நாமும் முன்னின்று அடக்கற்பாலம் (பெருங். 3, 27, 187-188). மன்னரை எழில்பெற மணத்துடன் அடக்கி (சீறாப்பு. 1 நபியவ. 43).

அடக்குப்பண்ணு-தல் 5 வி. தடைசெய்தல். (செ.ப.அக.

அனு.)