உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடங்கலாமிசம்

என மெல்லிதால் (கம்பரா. 2,10,37). அடங்கலர் முப்புரம் எரித்தார் (பெரியபு. 54, 4). அடங்கலர்ச் செகுத்த கூர்வாள் அரசன் (செ. பாகவத. 8, 2, 36). அடங்கலர் சிங்கம் அன்னான் (திருவிளை. பு. 3, 13). 2. ஐம்பொறிகள் அடங்காதவன். அடங்கலர்க்கு ஈந்த தானப் பயத்தினால் (சீவக. 2842).

அடங்கலாமிசம் பெ. நிலத்தின் ஓராண்டு விளைவு மதிப்பு. (செ. ப. அக.)

அடங்கலாமிசம்டாப்பு ப. அக. அனு.)

பெ.

அடங்கலாமிசம். (செ.

அடங்கன்முறை பெ. 1.சம்பந்தர், அப்பர், சுந்தரர் என்னும் மூவர் பாடிய தேவாரத்தின் முறைப்படுத்தப் பட்ட ஏழு திருமுறைத் தொகுதிகள். (தொகுதிப்பெயர்) 2. வேதாந்த நூல்களின் தொகுதி. தத்துவராயர் அடங்கன் முறை (தொகுதிப்பெயர்)

அடங்காப்பற்று பெ. அரசாணை மீறுவோர் வசிக்கும் ஊர், அடங்காதவர்கள் இருக்கும் ஊர். (யாழ். அக.)

அடங்காப்பிடாரி பெ. எவர்க்கும் அடங்காதவள். அடங் காப்பிடாரியைக் கொண்டவனும் கெட்டான், அறு கங்காட்டை உழுதவனுங் கெட்டான் (பழமொழி). அடங்காமாரி பெ. அடங்காப்பிடாரி. (பே.வ.)

அடங்கார் பெ. பகைவர். அடங்கார் ஆர் அரண் வாடச் செல்லும் (பதிற்றுப். 39,7). அடங்கார் அண்ணல் (பெருங். 219,15). அடங் காரை யெரியழலம் புகவூதி (திருவாய். 4, 8, 8).

அடக்கிய

அடங்காவாரிதி பெ.கடலுப்பு. (வின்.)

அடங்காவாரிதி2 பெ. சிறுநீர், (சித். பரி. அக, ப. 154)

...

அடங்கு-தல் 5வி. 1. கீழ்ப்படிதல், பணிதல். நின் பெண்டே யான் தன் அடக்கவும் தான் அடங் கலளே (ஐங். 68). புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க (புறநா. 76, 12). அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் (குறள்.121). ஞானம் அடங்கா தார் என்றும் அடங்கார் (நாலடி. 16). (நாலடி. 16). ஊருக்கு அடங்கல் இலர் காலற்கு அடங்க (திருப்பு. 173). 2. (ஒன்றின்) உள்ளாகுதல். புணர்தலும் புணர் தல் நிமித்தமுமாய் அடங்கும் (இறை. அக. 2 உரை). சில்லெழுத்தினானே பொருளடங்க (ஆசாரக். 76). அளவை என்றிம் மூன்றின் அடங்கிடுமே (சி.சி. சுபக். அளவை. 1). கை அடங்கிய செந்தீ (தக்க. 576).

...

118

4.

அடசு1-தல்

3. (பசி, தாகம், சினம் முதலாயின) குறைதல், சுருங்குதல். வெம்மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க (கம்பரா. 6, 36, 199). மாருதமும் அடங்கி (சிலையெழு. 2). உண்டும் தழற்பசி அடங்கிடாது (சூத. எக்கிய. பூருவ. 20, 6). அடங்கா இன்பத்து ஓருரு வாய் (சீறாப்பு. 1காப்பு). இல்லையாகுதல், நின்றுவிடுதல். பணிலம் கலி கலி அவிந்து அடங்க (மதுரைக். 621). ஊற்றுநீர் அடங்கலின் உண்கயங் காணாது (கலித். 13, 7). பொன்னணி மார்பன் போர்த்தொழில் அடங்க (பெருங். 1, 56,51). மூச்சு அடங்கிவிட்டது (நாட். வ.).

கின

அடங்கு-தல் 5வி. 1. நெருங்குதல். அடங்கிய புடை யல் (பதிற்றுப். 31, 31). அலவன் கண்பெற அடங் கச் சுற்றிய பலவுறு கண்ணுள் ... தொடி (கலித். 85,6). 2. (தூசி முதலியன) படிதல். அகிலார் நறும்புகை ஐதுசென்று அடங்கிய (புறநா.337,10). தூசியடங்கத் தண்ணீர் தெளி (நாட். வ.).3. (பறவை கூட்டில்) அடைதல். நா அவிந்து அடங் பறவையும் (கம்பரா. 3, 9,35). 4. ஒட்டிக் கிடத்தல். வெள்ளேற்று எருத்து அடங்குவான் (கலித். 104, 19).5. ஒடுங்குதல். நின்மாட்டு அடங் கியநெஞ்சம் (பதிற்றுப். 89, 14). நேர்ந்தொருத்தி ஒரு பாகத்து அடங்கக் கண்டு (தேவா. 6,93,1). 6. புலன் ஒடுங்குதல். ஒன்று மொழிந்து அடங்கிய கொள்கை (பதிற்றுப். 15,29). நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் (குறள். 124). சிந்தையும் என்போலச் செயலற்று அடங்கிவிட்டால் (தாயுமா.

43, 325),

அடங்கு-தல் 5 வி. 5வி. 1. உறங்குதல். அல்கு உண்டு அடங்கல் வழி (ஆசாரக், 29). விழித்துழி விழித்தும் அடங்குழி அடங்கியும் (கல்லாடம் 7). ஊர் அடங்கி விட்டது (நாட். வ.). 2. மறைதல். அடங்கிய சிந்தை யாள் (கம்பரா. 2, 3, 57). வெளியடங்கவே (கலிங். 103). ஆதித்தன் அடங்குமளவில் (கலித். 78, 15 நச்.). 3.இறத்தல். ஆர்த்தலின் யாரும் பார்வீழ்ந்து அடங் கினர் (கம்பரா. 6,36, 5).

அடங்கு-தல் 5 வி. சினையாதல். மாடு பயிர் அடங்கி யிருக்கிறது (நாட்.வ.).

அடசட்டா பெ. சாகுபடி மதிப்பு. (செ.ப. அக. அனு.)

அடசு-தல் 5வி. 1.அடையச்செய்தல். அழுந்தவாளி யொன்று பத்து நூறு வன்பொடு அடசினான் (பாரதம். 7,4,30). 2. செறிதல். செடி அடசிக்கிடக்