உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடித்தொழில்

அடித்தொழில் பெ. குற்றேவல்,

திருவடித்தொண்டு. அடித்தொழில் செய்வார் பக்கத்திலும் (தொல். பொ . 25 இளம்.). அப்பிறப்பு யான் நின் அடித் தொழில் கேட்குவன் (மணிமே.22,134).

அடித்தோழி பெ. உற்ற தோழி, முதன்மைப் பாங்கி. காவற் பெண்டும் அடித்தோழியும் கடவுட்சாத்தன் உடனுறைந்த தேவந்தி (சிலப். 29 உரைப்பாட்டு).

அடிதடி (அடிதடில்) பெ. கைகலப்பு. வாய்ச்சண்டை அடிதடியில் முடிந்தது (பே. வ.).

அடிதடில் (அடிதடி) பெ. பெ. கைகலப்பு. (செ. ப.அக.அனு.) அடிதண்டம்1 பெ. 1.தலையெடுக்க ஒட்டாத அடி. (செ. ப. அக.) 2. அடிதண்டனை. (வின்.)

அடிதண்டம்' பெ. 1. கோயிலுக்குச் செல்லும்போது வழி முழுதும் தண்டனிடுகை. (செ. ப. அக.) 2. திருவடி யிலே வீழ்ந்து வணங்குகை. (பே.வ.)

அடி தண்டம்பிடி தண்டம் பெ.

முழுவதுமாக

வசப்பட்ட

பொருள். அவன் இவனுக்கு அடிதண்டம்பிடி

தண்டம் (செ.ப. அக.).

அடிதண்டா 1 பெ. மண்வெட்டி. (செ.ப.அக.)

அடிதண்டா' பெ. கதவு திறக்காதிருக்கக்

குறுக்காக

இடும் இரும்புத்தடுப்பு. அடிதண்டாவைப் போட்டு விட்டுத் தூங்கு (திருநெல்.வ.).

அடிதலை பெ. 1. முதலும் முடிவும். அந்தமில் மறை யெல்லாம் அடிதலை தடுமாறி (கந்தபு. பாயி. 1). கீழ்மேல். (வின்.)

அடிதலை2 பெ. வரலாறு. (சங். அக.)

2.

அடிதவ்வு-தல் 5 வி. அடிதாண்டி விளையாடுதல். ( வின்.)

அடிதள்ளிப்போ-தல் 4 வி/5 வி. (மருத்.) மலக்குடல் நுனி துவாரம்விட்டு வெளிவந்து தொங்குதல்.

232)

(பைச, ப.

அடிதாளம் பெ. கைகளாற் போடுந் தாளம். அடிதாளம் போடாவிட்டால் பாட்டு வாராது எனபார்கள் (மதிமோச. ப. 72).

அடிதாறு பெ.

1. அடிச்சுவடு. நிழலும் அடிதாறும் ஆனாம் (இயற். பெரியதிருவந்.31), 2. பாதுகை. (இயற். பெரியதிருவந். 31 வியாக்.)

பெ. சொ அ.1-9 அ

1

31

அடிநிலை

அடிதிரும்பு-தல் 5 வி. (சூரியன் மேற்கே வருகையில் அடிநிழல் திரும்புதல்) பொழுதுசாய்தல். (நாட். வ.)

அடிதொடு-தல் 6 வி. இறைவன் அல்லது பெரியோரை வணங்கும்போதோ சூளுரைக்கும்போதோ பாதம் தொடுதல். ஐய சூளின் அடிதொடு குன்றொடு... மணற்சீர் சூள் கூறல் (பரிபா. 8,70). கோன் அடி தொட்டேன் (கலித். 94,36). மணிமேகலைதனை ஒழியப் போகேன் உன் அடிதொட்டேன் (மணிமே.

18, 171).

அடிதொறு (அடிதோறும்) வி.அ. அடிக்கடி. செம் பொன் மழைபோன்று அடிதொறு ஆயிரங்கள்' சிந்தி (சீவக. 106).

அடிதோறும் (அடிதொறு) வி.அ. அடிக்கடி. (செ.ப.

அக.)

அடிநகர்-தல் 4 வி. இடம் விட்டுப் பெயர்தல். (செ.ப.

அக.)

அடிநா

பெ. நாவின் அடிப்பகுதி. அடிநா அடியணம் உறயத் தோன்றும் (நன். 82).

அடிநாய் பெ. பெரியோர் முன் ஒருவன் தன்னைத் தாழ்த்திக் கூறுஞ்சொல். ஆரூரன் அடிநாயுரை வல்லார் (தேவா. 7,59,11). அடிநாயைச் சிவிகைத் தவிசேறித் திரிவித்து (நம்பியாண். திருநாவுக். 9). அடிநாயேன்

.

பெ. நாய்போலத் தாழ்ந்த அடிமையாகிய நான் என்னும் பொருளில் வரும் ஒரு வணக்கமொழி. அடிநாயேன் அரற்றுகின்றேன் (திருவாச. 33,10). உத்தம அடி நாயேன் ஓதுவதுளது (கம்பரா. 2,

7, 37).

அடிநாள்

பெ. தொடக்கநாள், ஆதிகாலம். அடிநாள் செந்தாமரை ஒதுங்கும் அன்னம் (கம்பரா. 3, 11, 30). அடிநாளில் யான்முயன்றது அறியீர்போலும் (பிரபோத. 38,20). ஆரிட்ட சாபனையோ அடி நாளைத் தீவினையோ (காத்தவரா. ப. 112).

அடிநிலம் பெ. (மதில் போன்றவற்றின்) அடியிடம். அடிநிலத்திலே படிவன விடிமுகில் அனைத்தும் (பாரதம். 5, 4, 60).

அடிநிலை பெ. 1. அடிப்படை. அடிநிலை இருப்பு எழு அமைந்த கல்மதிள் (சீவக. 81). ஆகமத்தால் அடிநிலை பாரித்து (பெரியபு. 65,6). 2. பாதக்