உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடு *-த்தல்

அடு-த்தல் 11 வி. கூத்தாடுதல். அடுத்தல் கூத்தா

டல் (பிங். 1464).

அடு-த்தல் 11 வி.

1.

கொடுத்தல். யானே முன் னின்று அடுப்ப (பெருங். 4, 15, 77). வளைக்கரத் தார்க்கு அடுத்தோம் மன் உறாவரையே (திருக்கோ. 357). 2. ஒப்புவித்தல். (தெ. இ. க. 2, 250)

அடு -த்தல் 11 வி. அமைத்தல். பளிங்கு விளிம்பு அடுத்த மண்டபத்து (இயற். பெரிய திருமடல் 53).

அடு-த்தல் 11வி. ஆதாரமாகப் பற்றுதல். அடுத்த வனைக் கெடுக்கலாமா (நாட். வ.).

அடுs-த்தல் 11 வி.

மால் உண்டாதல்.

யானை

இடர் அடுக்க (இயற். இரண்டாம்திருவந். 13).

அடு-த்தல் 11 வி, 1.மோதுதல், அடித்தல். அசுண நன்மாச்செவி பறை அடுத்தது போலும் (கம்பரா. பாயி. 7). 2. அமுக்குதல். எடுத்தான் தன்னை அடுத்தார் (தேவா. 1,95, 8).

புயந்

அடு10-தல் 6 வி. 1. கொல்லுதல். அடுத்தூர்ந்து அட்ட கொற்றத்தானும் (தொல். பொ. 65, 4 இளம்.). அடு நையாயினும் விடுநையாயினும் (புறநா. 36, 1). அட்டு உயிர் பருகும் கூற்றம் (சீவக. 767). தெவ் அடு சிலைக்கை என் சிறுவர் (கம்பரா. 2, 2, 54). அடு சமரில் கனன்று (சிலையெழு. 19). வேழம் அட்டான் (திருவரங். அந். 19). 2. அழித்தல். மன்னெயில் ஓம் பாது கடந்தட்டு (புறநா. 40,2). உயிர் அடும் அந்த கன் (தேவா. 4. 16, 5). அழற்போல் அடும் சக்கரத்து அண்ணல் (நம். திருவிருத். 3).3. பொருதல். வென் றடுதானை வேந்தன் (ஐங். 482). அடுதிரைச்சங்க மார்ப்ப (சீவக. 701). அடுபுலி துரந்த ஆடுபட்டது பட்டனர் (கம்பரா. 6, 5, 60). அடுவார் அடலுளோர் (சேதுபு. தனுக்கோ. 34). 4. வெல்லுதல். போரடு தானையான் (பரிபா. 12,86). அடு முரண் தேய்க்கும் அரம் (குறள். 567). ஐம்பொறியும் அட்டு உயர்ந் தோர் (சீவக. 1468). விறல் அடும் மறவோன் (கம்பரா.3,2,39). மண்டு அமர் அட்ட வலிகெழு திணிதோள் (ஞானா. 43, 19), முரண் அடுபடையான் (திருவால. பு. 58,1), 5. வருத்துதல். பசியட நிற்றல் பசலை பாய்தல் (தொல். பொ. 266 இளம்.). பசியட முடங்கிய பைங்கண் செந்நாய் (நற். 103,6). நோய் அட இவள் அணி வாட (கலித். 17, 9). அடு நோயால் கருத்தழிந்து (தேவா. 7, 70, 2). அடு துயரம் ஊர்ந்து அலைப்ப (சீவக. 2782). கழிபசி நோயடக் கவலும் பூதரும் (கந்தபு. 3, 21, 59).

14

2

அடுக்கம் 3

அடு11-தல் 6 வி. 1. சமைத்தல். உண்மின் சோறே (பதிற்றுப். 18, 1).

கள்ளே அடுமின்

தெண்ணீர் அடு புற்கையாயினும் (குறள். 1065). பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் (தேவா. 4,28,1).நாற்குறுணி அரிசிச்சோறு அடும் (இறை. அக. 18 உரை). அக்களத்தடு கூழினுக்கு (கலிங். 147) மாதர் அட்டு ஊட்டுஞ்செல்வம் (திருவரங். அந்.25). 2. காய்ச்சுதல். அடுபால் அன்ன என் பசலை (நற். 175, 9). அட்டரக்கு அனைய செவ்வாய் (சீவக. 468). அட்டாலும் பால்சுவையிற் குன்றாது (மூதுரை 4). அடப்பட்ட நறவு (குறள். 1090 மணக்.). 3, குற்றிச்சமைத்தல். விரகின்மையின் வித்து அட்டு உண்டனை (புறநா. 227, 2).

அடு12-தல் 6வி. இடுதல். வல்வினையின் வாயில் பொடி அட்டி (திருவாச. 13, 3),

பொரி முகந்து

அட்டக் கனாக் கண்டேன் (நாச்சி. தி.6,9),

அடு13-தல் 6 வி. உருக்குதல். வாய்க்கணிகை (சீவக. 98).

அட்டொளி அரத்த

அடுக்கடுக்காய் வி. அ.

கட்டுக்கட்டாய், கோப்புக்

கோப்பாய், வரிசைவரிசையாய். அண்டமவை அடுக் கடுக்காய் அந்தரத்தில் நிறுத்தும் (தாயுமா. 26, 1). ஆரைக் கேட்டு நீர் ஐந்து கல்யாணம் அடுக்கடுக் காகச் செய்தீர் (நாஞ். மரு.மான். 6, 55). கட்டைகளை அடுக்கடுக்காய் வை (நாட்.வ.).

அடுக்கணி பெ. (அணி.) ஒருபொருளின் சிறப்பைக் காட்ட ஒருபொருட் பல சொற்களை அடுக்கி வைப்பது. அடுக்கி வைப்பது அடுக்கணி எனப்படும் (தொன்.

வி. ப. 317).

அடுக்கம்! பெ. 1. 1. மலைச்சாரல், சரிவு. கறிவளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள் (புறநா. 168,2). இறும்பமல் அடுக்கத்து இன்தேன் பொழிக (பெருங். 1, 50, 49). 2. பக்கமலை. ஆடுமழை அணங்குசால் அடுக்கம் பொழியும் (புறநா. 151, 10). மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்து (முருகு. 42). 3. பாறை. மால்வரை அடுக்கத்து (கலித். 44,2). கற் பிறங்கு அடுக்கத்து (பெருங். 1, 46,270).

அடுக்கம் 2 பெ. 1. வரிசை. நீடுவரை அடுக்கத்த நாடு கைக்கொண்டு (பதிற்றுப். 55, 18), பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து (சிலப். 11,19). 2. கட்டட மாடி, அடுக்கு. விஞ்சு மேல்நில அடுக்க மும் (கந்தபு.3,8,82).

அடுக்கம்' பெ. படுக்கை. நறுவீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் (அகநா. 2, 7).