உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுக்கு3

அடுக்கு பெ. உருளைவடிவில் அமைந்த பித்தளை முதலிய உலோகத்தாலான பெரிய பாத்திரம். சீர் வரிசையாகப் பித்தளைப் பதினோரடுக்கு (நாட். வ ).

அடுக்கு

பெ. செழிப்பு. அவள் அடுக்காய் வாழ் பவள் (முன்)

அடுக்குக்குலை - தல் 4 வி. வரிசை கெடுதல், நிலை கெடுதல். (வின்.)

அடுக்குச்சட்டி பெ. 1. பித்தளை முதலிய உலோகத் தாலான ஆழமில்லாத வாயகன்ற பாத்திரம். (தஞ். வ.) 2. ஒன்றினுள் ஒன்றாகப் பொருந்தும் படியான சட்டிகளின் அடுக்கு. (பே.வ.)

அடுக்குச்சாத்து-தல் 5 வி. ஆடையைக் கொய்சகமாக்கி அணிதல். அடுக்குச். சாத்திக்கொண்டு அந்தத் திருக்கோலத்துடனே (கோயிலொ.

38).

அடுக்குச்செம்பரத்தை (அடுக்குச் செவ்வரத்தை) பெ. பல அடுக்கான இதழுடைய செம்பரத்தம் பூ. (சாம்ப.

அக.)

அடுக்குச்செவ்வரத்தை (அடுக்குச்செம்பரத்தை) பெ. பல அடுக்கான இதழுடைய செம்பரத்தம் பூ. (முன்.)

அடுக்குத்தீபம் பெ. ஒன்றன்மேல் ஒன்றாக வட்ட வரிசை யாக அமைக்கப்பட்ட கோயில் அலங்கார விளக்கு. (தமிழ்விடு. 231 அடிக்.)

அடுக்குத்தும்பை பெ. அடுக்கான

காசித்தும்பை வகை. (சாம்ப. அக.)

இதழ்களையுடைய

அடுக்குத்தொடர் பெ. (இலக்.) அசை நிலைக்காகவும் விரைவு, துணிவு, வெகுளி, உவகை முதலிய பொருள் நிலைக்காகவும் இசைநிறைக்காகவும் ஒரு சொல் ஒரு முறைக்கு மேல் அடுக்கி வருவது. அடுக்குத்தொடர் பாம்பு பாம்பு (நன். 152 சடகோப. மேற்கோள்).

அடுக்குநந்தியாவட்டம் பெ. பல அடுக்கிதழ்கொண்ட நந்தியாவட்டப்பூ. (சாம்ப. அக.)

அடுக்குநிகழ்வு பெ. ஒரு குறிப்பிட்ட செயல் மீண்டும் மீண்டும் நிகழ்தல். (உளவியல் 12 ப. 32 )

அடுக்குப்பணியாரம் பெ. கோதுமை மாவால் செய்யப் படும் பலகாரம். (சாம்ப. அக.)

144

அடுக்குவட்டா

அடுக்குப்பருத்தி பெ. உயர்ந்த பருத்தி வகை. (சாம்ப.

அக.)

அடுக்குப்பற்சுறா பெ. ஒருவகைச்சாம்பல் நிறச் சுறா மீன். (செ. ப. அக.)

அடுக்குப்பாத்திரம் பெ. ஒன்றனுள் ஒன்றாக வைக்கத் தக்க கலங்கள். (பே.வ.)

அடுக்குப்பார்' -த்தல் 11 வி. ஒத்திகை பார்த்தல்.

(இலங்.வ.)

அடுக்குப்பார்' -த்தல் 11 வி. தக்க துணை தேடுதல். (செ.ப. அக.)

அடுக்குப்பாளம் பெ. தெய்வ உருவத்துக்குப் பின்புறத் தில் சாத்தும் கொய் (மடிப்பு) ஆடை. (செ. ப. அக.)

அடுக்குப்பாற்சொற்றி

பெ. அடுக்கிலையுடைய பாற் சொற்றி என்னும் பூண்டு வகை. (செ.ப.அக. அனு.)

அடுக்குப்பாறை பெ. நிலத்தில் ஒன்றின்மேல் ஒன்றாய் அமைந்த கற்பாறை. (சாம்ப. அக.)

அடுக்குப்பானை பெ.

வீட்டில் சமையற்பொருள்களை இடுவதற்கான மண்கல அடுக்கு அல்லது திருமணத் தின்போது மணவறைமேடையில் குயவர் கொண்டுவந்து அடுக்கி வைக்கும் ஏழு புதிய மட்கலம். (நாட். வ.)

அடுக்குப்பூண்டு பெ. பூடுவகை. (சாம்ப. அக.)

அடுக்குமல்லிகை பெ. அதிகமான இதழ்கள் நெருங் கிப் பூக்கும் மல்லிகை வகை. (வைத். விரி. அக, ப. 6 )

அடுக்குமாடி பெ. பலநிலையுள்ள கட்டடம் அல்லது வீடு. ஏழடுக்கு மாடி வீடு (நாட்.வ.).

அடுக்குமுள்ளி பெ. பூடுவகை. (வைத். விரி. அக. ப. 6)

அடுக்குமெத்தை! பெ. பூளை, செம்பஞ்சு, வெண்பஞ்சு, தூவி, சேணம் ஆகியவற்றால் அமைந்து அடுக்கிவைக் கப்பட்ட பஞ்சணைப் படுக்கை. (செ.ப.அக.)

அடுக்குமெத்தை' பெ. பல அடுக்கு மாடிவீடு. (பே.வ.)

அடுக்குவட்டா பெ. காய்கறி, கூட்டு, சாப்பாடு முதலிய வற்றை எடுத்துச்செல்வதற்கு நான்கைந்து வட்டக்கிண் ணங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக அமைந்த தூக்குக் கலம். (முன்.)