உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடைகுறடு

அடைகுறடு பெ. 1. பற்றுக் குறடு. 1. பற்றுக் குறடு. ஊனம் இறைச்சி கொத்தும் அடைகுறடு (பதிற்றுப். 21, 10 ப. உரை). பட்டடை. அடைகுறட்டின்

2. கம்மியர்

பட்டடையாகும் (பிங். 1634).

பெயர்

அடைகொடு-த்தல் 11 வி. நில விளைவில் அரசுக் குரிய பங்கைச் செலுத்துதல். (வின்.)

அடைகொள்ளு-தல் 2 வி. 1. அடைக்கலம் புகுந்த பொருளைக் காக்குமாறு ஏற்றுக்கொள்ளுதல். அடை கொண்டு பாழ்போக்குவான் ஒருவனன்றே (திரு வாய். 5, 10, 5 ஈடு). 2. ஒற்றியாகப் பெறுதல், போக் கியமாகப் பெறுதல். இலட்சுமண நம்பி அடை கொண்ட நிலமும் (தெ. இ.க.4,81).

அடைகொளி பெ. (இலக்.) அடைகொடுக்கப்பட்டது, விசேடியம். (தண்டி. 26 சடகோப. குறிப்.)

அடைகோட்டை

பெ.

(செ.ப.அக.)

முற்றுகையிடப்பட்ட

கோட்டை.

அடைகோழி பெ. அடைகாக்கும் கோழி. (முன்.)

அடைச்சீட்டு பெ. வரிப்பற்றுச் சீட்டு. (இலங்.வ.)

அடைச்சு-தல் 5 வி.

1.

அலங்

சேர்ப்பித்தல். அடைச்சிய கோதை பரிந்து (கலித். 51, 2). அவிழ்ந்த கூந்தல் அங்கையின் அடைச்சி (பெருங்.1,38,35). கலும் குழலும் தோழி அங்கையின் அடைச்சி (சீவக. 1397). 2. செருகுதல். குவளைத் தூநெறி அடைச்சி (பதிற்றுப். 27,2). கண்ணவிழ் நெய்த லும் கதுப்புற அடைச்சி (சிலப். 14, 77). அஞ் செங் கத்திகை அணிபெற அடைச்சி (பெருங். 2,15, 144). 3. உடுத்துக்கொள்ளுதல். குவளை வடிம்புற அடைச்சி

நெடுந்தொடர்க் (மதுரைக்.

588).

4. பொத்துதல். கையாற் செவிமுதல் அடைச்சிச் சொன்னாள் (சீவக.1048).

அடைசல் பெ. பொருள் நெருக்கம். வீட்டில் சாமான் கள் அடைசலாய் உள்ளன (நாட்.வ.).

அடைசாரல் பெ. பெ. பருவக்காலத்து அடைமழை. ஆடி அடைசாரல் (பழமொழி).

அடைசீலை பெ. மருந்தில்

தோய்க்கப்பெற்றுத்

தொண்டை நோய்தீர வாயில் வைப்பதற்கேற்ற துணி. (வின்.)

அடைசு1-தல் 5வி. 1.நெருங்குதல், அளவுக்கு அதிக மாகச் சேர்தல். அஞ்சுபூதம் அடைசிய சவடனை

1

51

...

அடைந்தோர்

(திருப்பு. 85). வீட்டில் பூசப்பட்ட வண்ணம் அடைசியிருக்கிறது (பே.வ.). 2. பொருந்துதல். உள்ளே சீலை அடைசின சட்டை (சீவக. 819 நச் ). விடம் அடைசுவேலை (திருப்பு. விநா. 4). 3. நெருங்கவிடுதல். அழுந்த வாளியொன்று பத்து நூறு வன்பொடு அடைசினான் (பாரதம். 7,4,30). 4.நிறைவாதல். பாவு அடைசியாயிற்று (தொ.வ.). அடைசு-தல் 5 வி. ஒதுங்குதல். அடைசி நில் (நாட்.வ).

அடைசுபலகை பெ. 1. செருகு பலகை. (வின்.) 2. கதவு நிலைகளின்மேல் வைக்குஞ் சூரிப்பலகை. (முன்.)

அடைசுபொட்டணம் பெ. அடைசீலை. (முன்.)

அடைசுவலை பெ. வலைவகை. (செ. ப. அக.)

அடைசொல்1 பெ. அடைமொழி. (முன்.)

அடைசொல்' பெ. (இலக்.) விகுதி. விட்டுணுக்கள் என் பாருமுளர்; கள் என்பது பன்மை அடைசொல் (தக்க. 463 ப. உரை).

அடைத்தகுரல் பெ. கம்மிய குரல். (வின்)

அடைத்து வி. அ. (வீடு) முழுவதும்.

நூல்கள் உள்ளன (நாட். வ.).

அடைத்துப்பெய்-தல்

வீடடைத்து

1வி. மேகமூட்டம் அமைந்து

மழை விடாது பெய்தல். (பே.வ.)

அடைத்தேற்று-தல் 5 வி. வருந்திக் காரியம் முடித்தல். அடிமைக்கு அடைத்தேற்றலாயிறே இவ்விடந்தான் இருப்பது (திருவாய். 6,8,1 ஈடு).

அடைதடையம்

பெ. பொய்யாய்

பொருள். (பே.வ.)

அடைதா (தரு)-தல்

உரிமைப்படுத்திய

13வி. வந்துசேருதல். நாணும் உட்கும் நண்ணுவழி அடைதர ஒய்யெனப் பிரிய வும் விடாஅன் (குறிஞ்சிப். 184). அடைதர்க வல் விரைந்து அமரார் பெரும்படை (பெருங். 3,20,98).

அடைதூண் பெ. தயிர்கடை தறி. வாசுகி கடைகயிறு அடைதூண் மெத்து சந்திரன் (கம்பரா. 1, 9

3, 19).

மிகை.

அடைந்தோர் பெ. 1. அடைக்கலம் புகுந்தவர். அடைந்தவர்கட்கு எல்லாம் அன்பன் (மதுரகவி.