உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்திகிரி

அத்திகிரி பெ. காஞ்சியில் திருமால் கோயில் கொண் டுள்ள தலம். அத்திகிரி அருளாளப் பெருமாள் வந் தார் (தேசிகப். 224). அயனை உந்தியினில் அளித்த பரன் மேவுவதும் அத்திகிரியே (வீரசோ. 120 மேற்.). நம்புமக்கிரியை அத்திகிரியென நவிலுவரால்

(கச்சி. காஞ்சி. அந்தரு. 32).

அத்திகூடம் பெ.

யானைக்கூடம், ஆயிடை அத்தி

கூடத்து அயலெழுந்து (யசோதர. 94).

அத்திகோசத்தார் பெ. யானைச் சுமையளவு பொருள் படைத்த வணிகர் குழு. (தொல். சொல். 162 இளம்.)

அத்திகோசம் பெ. யானை சுமந்து செல்லக்கூ அளவு பொருள் படைத்த வணிகர் குழு. ஐம்பெருங் குழுவும் அத்திகோசமும் (பெருங்.4, 9, 5).

அத்திகோபம் பெ. கண்ணோய் வகை. (வின்.)

அத்திகோலம் பெ. அழிஞ்சில் மரம். (முன்.)

அத்திசம் பெ. நீர்முள்ளி. (வைத். விரி. அக. ப.15)

அத்திசா பெ. கொடிமுந்திரிகை. (சாம்ப. அக.)

அத்தித்திப்பிலி

பெ.

அக. ப. 15)

ஆனைத்திப்பிலி. (வைத். விரி.

அத்தித்தேக்கி பெ. சிறுகொத்தவரை. (சாம்ப. அக.)

அத்திதந்தம் பெ. முள்ளங்கி. விடமரக்கனி முருக்கு அத்திதந்தம் (தைலவ. தைல.73/செ .ப. அக.).

அத்திநகம் பெ. நகர வாயிலின் படிச்சுருள். சிறந்த வாயில்... படிச்சுருளுக்கு... அத்திநகமே நாமம் (சூடா. . 5,45).

அத்திநகர் பெ. (கௌரவர்களின் தலைநகரான) அத்தினாபுரம். அத்திநகர் எய்தினான் ஆங்கு (பாரத வெண். 147). இருதினத்தில் மைப்பொழில் அத்திநகர் செல்லும் (பாரதி. பாஞ்சாலி. 132).

அத்திப்பதி பெ. 1. அத்தினாபுரம். அத்திப்பதிக்கே அடிப்படையைத் தான் ஏவி (பாரத வெண். 23). 2. (அத்தினபுரத்தின் அரசனான ) துரியோதனன். அத்திப்பதிக்கே அருள்செய்வோய்

(முன். 142).

அத்திப்புரசாதனி பெ. அவுரி. (வைத். விரி. அக.ப.15)

அத்திபஞ்சரம் பெ. எலும்புக் கூடு. (கதிரை. அக.)

1

81

அத்தியயனம்

அத்திபேதி பெ. யானையின் பேதிமருந்து. (செ. ப. அக.)

அத்திம்பேர் பெ. அத்தை கணவன், தமக்கை கணவன். (அந். வ.)

அத்திமண்டூகி பெ. முத்துச்சிப்பி. (கதிரை. அக.)

அத்திமானம் பெ. ஆமணக்கு.(சாம்ப. அக.)

அத்திமேற்புல்லுருவி பெ. அத்திமரத்தின் மேல் வளரும் புல்லுருவி. (சாம்ப. அக.)

அத்தியக்கம் பெ. தருக்க அளவையுள் காண்டல் என்னும் அளவை. ஆக்கை விதம் பேதமென அத் தியக்கம் அறிவிக்கும் (சிவதரு.10,19). சுடர் அத் தியக்கவிடயத்துவம் எய்துறலால்

வேண்டாம் (சிவப்பிர. விகா. 217).

உத்திகள்

அத்தியக்கன் பெ. தலைவன். காண் அத்தியக்கரை (விநாய. பு. 80,792).

அத்தியக்கினி பெ. கல்யாண காலத்து நெருப்பு சாட் சியாகப் பெண்ணுக்குக் கொடுக்குஞ் சீதனப் பொருள். (கதிரை. அக.)

அத்தியட்சர் பெ. (முன்னர்ப் பல்கலைக் கழகத்தலை வருக்கு வழங்கிய பெயர்) தலைவர். (அருகிய வ.)

அத்தியந்தம்

வி. அ. 1. முற்றும், முழுமையாக. பாவங்களை அத்தியந்தம் போக்கடிக்கிறவர்களா யும் (வேதாந்தசாரம் 13). 2. மிகவும்.( கதிரை. அக).

...

அத்தியந்தாபாவம் பெ. (தருக்கம்) என்றும் இன்மை என்னும் அபாவப் பிரமாணம். பேசும் அத்(தி) யந்தாபாவம் என நால்வகையாம் (பிரபோத. 42, 4). முக்காலத்தினுமின்மை அத்தியந்தாபாவம் (தர்க்கபரி.109).

...

அத்தியம் பெ. அன்பு. அத்தியம் அருந்தும் வாய் வெட்கத் தமிழ் பாலிப்பளே (கோமதியந். 28). அத்தியயம் பெ. சாவு. (சாம்ப. அக.)

அத்தியயனபட்டர் பெ. (6040.) வழிபாட்டின்போது இறைவன் திருப்பெயரை ஓதுபவர். (செ.ப.அக.)

அத்தியயனம் பெ. வேதம் ஓதுகை. தண்டகாரண்யத் தில் அத்தியயன அனுவாகங்கள் மாற 2,10, 5 வியாக்.). ககனத்துநெறி அத்தியயனத்தொடு

(பெரியதி.