உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தூரம்

அத்தூரம் பெ. மரமஞ்சள். (வைத். விரி. அக. ப. 15)

அத்தேயம் பெ: திருடாமை. ஏதிலார்தம் பொருள் களில் ஏதேனும் கவர எண்ணாமை தீதிலாவத் தேயம் (சூத. ஞான. 14, 7).

அத்தை1 பெ. 1. கணவன் தாய். அரசர்க்கு அத்தை யர்க்கு என்னுடைய வணக்கம் (கம்பரா. 2, 5,39). அத்தை திருவிளையாடலை எல்லாம் (நாஞ். மரு. மான். 2, 43). 2. மனைவியின் தாய். மாமியை அத்தை யைத்தோயின் (கூர்மபு. உத்தர. 32, 1). 3. தந்தை யுடன் பிறந்தவள். கானிடை அத்தைக்குற்ற குற்ற மும் (கம்பரா. 5, 11, 44). அத்தைக்கு மீசை முளைத்தால் சிற்றப்பா ( பழ. அக. 325). அத்தை தனைப்போல ஆர் எனக்குச் செய்வாரோ (வட்.வ.).

4.

மாமனின் மனைவி. அத்தை என்னை அடிக்

காதே அடிபணிவேன் (மலைய. ப. 209).

அத்தை ' பெ. 1. தலைவி. அத்தை தலைமைப் பெண் (பிங். 930). 2. அன்னை. (சேந். செந்.80) 3. குருபத்தினி. (நாநார்த்த. 368)

அத்தை' பெ. கற்றாழை. (இராசவைத். /செ. ப. அக.)

அத்தை பெ. இரண்டாம் வேற்றுமையுருபு ஏற்ற அது என்னும் சுட்டு. (அதனை). அத்தைத் தின்று அங்கே கிடக்கும் (குருபரம். ஆறா. ப. 97). எழுதியபின் அத்தைப் பழுதற வாசிப்பரிது (பெருந். 352). அத்தைநாயகன் திருவுருக் கொள்கென அறைந் தார் (திருவிளை. பு. 36, 24). அத்தைத்தான் சொல் வானேன் வாயைத்தான் வலிப்பானேன் (பழ. அக.

327).

அத்தை" இ. சொ.

முன்னிலை அசைச்சொல். நடுக் கின்றி நிலியரோ அத்தை (புறநா. 2,20). ஆர்பதம் பெறுக தோழி அத்தை (குறுந்.389). அலவலை நீர்த்தால் அத்தை (பெருங். 1,36,286). அத்தை காதல் (சீவக. 2618).

ஒழிமதி

அத்தைசார் பெ. தந்தையுடன் பிறந்தவன். (வட்.வ.)

அத்தைதாளி பெ. காட்டுப்பூவரசு. (முன்.)

அத்தைநாறி பெ. காட்டுக்கோங்கு. (முன்.)

அத்தைப்பாட்டி பெ. பாட்டனுடன் பிறந்தவள். அத்தைப் பாட்டிபோல அளந்து கொட்டுகிறாள் பெரிதாக (பழமொழி).

187

அத்தைபிள்ளை பெ.

தந்தையின்

அத்விதீயம்

உடன்பிறந்தாள்

மகன். அத்தை பிள்ளைகளும் மாமா பிள்ளை களும் (பே.வ.).

அத்தைமகன் பெ. தந்தையின் உடன்பிறந்தாள் மகன். சுத்துறான் உன் அத்தைமகன் (மலைய. ப.23).

உள்

அத்தொய்தம் (அத்துவைதம், அத்வைதம்) பெ. பொருள் இரண்டல்ல என்னும் கொள்கை. அத்தொய்

தமாய்,

சச்சிதானந்தலட்சணமாயிருக்கிற

பிரமம் (அத்தொய்த. தீபி. ப. 7).

அத்தொய்தன் பெ. ஒப்பற்றவன்.

பரப்

அத்தொய்தனாக

இருக்கிற உனக்குப் பயமென்ன (வேதாந்தசாரம் 85/ செ.ப. அக. அனு.).

அத்தோ இ. சொ. 1. ஒரு வியப்புச் சொல். அத்தோ... அதிசயமொழி (பிங். 2104). அத்தோ ஈது அதிச யம் ... என் புகல்வேன் (திருவருட்பா 3204). 2. ஓர் இரக்கச் சொல்.

(சங். அக.)

அத்தோரியாமம் பெ. சோம யாக வகை. (திவா. 2712)

அத்யகாதம் பெ. மிகவும் ஆழம். அத்யகாதமான ஆறு பாங்காக வற்றிக் கொடுத்தது (திருப்பா.5

மூவா.).

அத்யயனப்பட்டர் பெ. வேதம் ஓதும் அந்தணர். வேறு பிரிந்த அத்யயனப்பட்டர்கள் அகரப்பற்று (தெ. இ.க. 8, 49, 2).

அத்யயனம் பெ. வேதம் ஓதுகை.

காலத்து அத்ய யனம் பண்ணிச் சேவித்தும் (தெ.இ.க. 8,43,3).

அத்யாத்மிகம் பெ. மக்கள் அல்லது விலங்கால் வரும்

துன்பம். (சிவதரு. 12, 62 உரை).

அத்யாபி வி. அ. இப்போதும். அத்யாபி அப்படியே நடந்து வருகிறது (செ. ப. அக.).

அத்வர்யு பெ. வேள்விச் சாலையில் கிரியைகளுக்கு வேண்டியவற்றைக் கவனிக்கும் அத்வர்யு ஓதா உத்காதா பிரமன் என்னும் நால்வருள் ஒரு பிரிவினர். அங் குள்ள அத்வர்யு தொடக்கமான தொடக்கமான சடங்கிகள் (குரு

பரம். ஆறா. ப.29).

அத்விதீயம் பெ. இணையற்றது. மேன்மையால் உண் டான அத்விதீயமான அழகையுடையதாய்த்து (அமலனாதி. 3. வியாக்.)