உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதவம்2

2. யாகத்தில் நெய் ஊற்றும் (அத்திமரத்) துடுப்பு. அதவமாய் நறு நெய்யுண்டு (கம்பரா. 3, 1, 44).

அதவம்' பெ. பின்பு. (யாழ். அக. அனு.)

அதவல்குதவல் பெ. தீனி செரிக்காத மாட்டின் சாணம். சாணி அதவல்குதவலாகப் போடும்

104).

(பெரியமாட்.

அதவா இ. சொ. அல்லது. அதவா முரட் போர் தனக் கஞ்சுமோ (பாரதம. 8, 2, 232). காசுகொடு அதவா. சோறு போடு (வட்.வ.).

அதவிடம்

(அதிவிடம், அதிவிடை, அதிவிடையம்)

பெ. ஒரு மருந்துச் செடி. (சங். அக.)

அதவு1

பெ. அத்திமரம். அதவுதிர் அரிசியன்ன

(கல்லாடம் 99, 18).

அதவு? பெ.

கோபுர வாயிற் கதவினிற் புகும் திட்டி வழி. கதவினிற் புகும் வழி...அதவு (ஆசி. நி. 163).

அதவு3

...

பெ. இடம். அதவு... உளி... இடத்தின் பெயர் (ஆசி.நி. 165)

அதவு*

பெ.

பள்ளம். (வைத். விரி. அக. ப. 14)

அதவு-தல் 5 வி. 1. எதிர்த்து நெருக்குதல். அதவிப் போர் யானை ஒசித்து (இயற். இரண்டாம்திருவந். 89). 2.கொல்லுதல். முதலை மடுவினில் அதவிய புயலென (திருப்பு. 1169).

அதவுநெய் பெ. அத்திப் பிசின்.

(சாம்ப. அக.)

அதவை பெ. கீழ்மகன். (சங். அக.)

அதழ் பெ. பூவிதழ். ஞெகிழ் அதழ்க் கோடலும்

(கலித். 101, 4 பா. பே.).

அதள் பெ. 1. தோல். மெய்யுரித்து இயற்றிய மிதி அதள் பள்ளி (மலைபடு. 419). பொங்கு அதளின் நாண் ஆக (காரை. அந். 28). அரவொடு வேங்கை அதள் கொண்டு (தேவா. 4.84, 4). அழல்கட் பாய் புலி அதளுடை நெகிழ்தர (செ. பாகவத. 8, 5, 12). வேங்கை அதள்மேல் இருந்தனன் (திருவிளை. பு. புராண வர. 4). குயவரியின் அதள்ஆடை உடுத்த (திருமயிலைப்பிள். 1, 9). 2. தோற்பை. ஞெலிகோல் கலப்பை அதளொடு சுருக்கி (நற்.

காபாலீசர்

19.

1

அதன்மர்

142, 3). 3. 3. கேடயம். குரப்பிரங்கொடு வாள் அதள் அறுத்தாள் (தேவிமான். 9, 5). 4. மரப்பட்டை. வேங்கையதள் (தைலவ. தைல. 46/செ. ப. அக.).

அதள்புனையரணம் பெ. தோற் கைத்தளம் என்னுங் கருவி. மெய்புகு கவசமும் அதள்புனையரணமும்

(சிலப். 14, 170).

அதளப்பிச்சி 1 பெ. சிறிது செந்நிறமான சீமைப்பிச்சி

மலர். (சாம்ப. அக.)

'அதளப்பிச்சி' பெ.

வாதுமையைப் போன்ற பாரசீக

நாட்டு மர வகை. (முன்.)

அதளம் பெ. ஆழத்துள் முதல் நிலை. அதள பாதா ளமான கிணறு (பே.வ.).

அதளமேலிச்சாரணை

பெ. சிவப்புச் சத்திச்சாரணை

(சாம்ப. அக.)

அதளி பெ. குழப்பம். (செ. ப. அக.)

அதளி' பெ. ஆரவாரம். (சங். அக.)

1

அதளை 1 பெ. 1. நிலப்பீர்க்கு. (வைத். விரி. அக. ப. 14) 2. நீர்ப்பீர்க்கு. அதளைக்காய் வாய்க்கு ருசி யாய் இருக்கும் தின்றால் (பதார்த்த. 750).

அதளை" பெ. புளியதளை. (சாம்ப. அக.)

அதளை 3 பெ. பாகல். (முன்.)

அதளை +

பெ. பெரும்பாண்டம். (வின்.)

அதளை' பெ. காவற் குடிசை. (முன்.)

அதளைவற்றல் பெ. நிலப்பீர்க்கு வற்றல். (முன்.)

அதற்றி பெ.

மாவிலிங்க மரம். (சாம்ப. அக.)

அதறஞ்சி பெ.

காட்டு முருங்கை. (மரஇன. தொ.)

அதறு-தல்

5 வி.

1. பதறுதல். (வட்.வ.) 2. உதறு தல், அதிர்தல். சக்கரத்தில் காற்று அதிகமாய் அடித்ததால் அதறுகிறது (பே.வ.).

அதன்மம் பெ. (அ + தன்மம்) அதருமம். அருளி னால் உரைத்த நூலின் வழிவாராது அதன்மஞ்

செய்யின் (சி. சி. 2, 33).

அதன்மர்

பெ.

கீழ்மக்கள்.

பெயரே (பிங்.872).

அதன்மர்

...

கீழோர்