உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதியரையன்

அதியரையன் பெ. மீன் வலைஞர் தலைவன். இலங்கு அதியரையன் நம் அன்பன் (திருவால.பு.22,9).

அதியாச்சிரமம் பெ. ஆச்சிரமங்களைக் கடந்த நிலை.

(சி.சி.8,32 சிவாக்.)

அதியாமம் பெ. அறுகு. (வைத். விரி. அக.ப. 14)

அதியால் பெ. பெரியோருக்கு இடும் காணிக்கை. (சங்.

அக.)

அதியாளர் பெ. சிறந்தவர். ஆனை கட்டிச் சூடு அடிக்கும் அதியாளர் பெற்ற கண்ணோ (தாலாட்டு.

ப. 56).

அதியுக்தம் பெ. மிகைபடக் கூறுகை. (செ.ப.அக. அனு.) அதியுச்சம் பெ. (சோதிட.) கோள் உச்ச வீட்டில் மிக உச்சமான பாகையிலிருக்கை. (சோதிட. சிந். ப.145/

செ. ப. அக. அனு.)

அதியோகம் பெ. சுபக்கிரக நிலையுள் ஒன்று. (விதான. சாதக. 23 உரை/செ. ப. அக.)

அதிர் 1-தல் 4 வி. 1. முழங்குதல். முழவு அதிர முரசு இயம்ப (பட்டினப். 157). முரசு அதிர்பவைபோல் முழங்கு இடி பயிற்றி (பரிபா. 22, 4). முரசு இயம் பின முருடு அதிர்ந்தன (சிலப். 1, 46).

முழவம்

அதிரக் கண்டேன் (தேவா. 6, 77, 1). வலம்புரி போல்... அதிர்ந்து (திருப்பா.4) மண்ணும் மணி முழவு அதிர (கம்பரா. 1, 10, 153). 2.ஒலித்தல் அதிர் இசை யருவி (கலித். 44, 3). அதிரும் அப் புனல் அருந்தினர் (செ. பாகவத. 5, 3, 27), அதிர்ந் திடும் ஓதைகளும் (திருமலை முரு.பிள்.29). அதிர் குரல் மணிநெடுந்தேர் அவனிநாரணன் (நந்திக் கலம். 14).3. துடித்தல். முழவின் மண்ணார் கண் ணின் அதிரும் (நற். 100, 10-11). 4. 4.நடுங்குதல். அதிர்குரல் ஏறொடு துளி சொரிந்தாங்கு (புறநா. 160, 3). நிலன் அதிர்பு இரங்கலவாகி (பதிற்றுப். 31,29). அதிர வருவதோர் நோய் (குறள்.429). அலகில் மலைகுலைய அமரர் தலை அதிர (கம்பரா. 6, 30, 159). 5. எதிரொலித்தல். கோழி குன்று அதிரக் கூவ (பரியா. 8,19). கல்மணி நின்று அதிர் கான் அதர் (பெரியாழ். தி.3,2,3).

அதிர் 2 - த்தல் 11 வி. 11 வி. தளர்தல். அதிரா யாணர் முதி ரத்துக் கிழவ (புறநா.158,25).

அதிர்-த்தல் 11 வி. 1. அசைத்தல். உருமுநிலன் அதிர்க் கும் (பதிற்றுப். 30,42). கயிலை நன் மலையை

ஓடி

203

அதிர்ப்பு

அதிர்த்து அவன் எடுத்திடலும் (தேவா. 4, 47, 2). 2. நடுங்கச் செய்தல். பின்னதிர்க்குஞ்செய்வினை (நான் மணி. 66). உலகினை அனந்தன் உச்சியோடு அதிர்த்தனன் (கம்பரா. 6, 15,300). 3. முழங்குதல். அதிர்க்கும் திரைக்காவிரிக் கோட்டம் (தேவா.7,77, 9). மதித்த வேலை ... வாய்விட்டதிர்த்த (கந்தபு. 6, 13,325). அதிர்த்த வேலை (தேவாங்கபு . 2, 3). 4. பிளிற்றுதல். மதநனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப (பரிபா. 8,20). அதிர்குரல் குன்றும் (கம்பரா. 6, 2, 95). 5. அதட்டுதல். அரிப்பதாகன் உரப்பதாகனை அதிர்த்து உடற்றலும் (பாரதம்.9, 1, 186).6. சொல் லுதல். பறைதல். அதிர்த்தல்... சொல்லுதல் என்ப

(பிங். 2009).

அதிர்+-த்தல் 11 வி. கலங்குதல். கற்றான் அதிர்ப்பிற் பொருள் அதிர்க்கும் (நான்மணி. 19). அதிர்த்து எழுந்த அந்தகனை (நக்கீர. திருக்கலி.33).

அதிர்" பெ. 1. நடுக்கம். (சங். அக.) 2. அச்சம். (முன்.)

அதிர்' பெ. வேகம். அதிருடன் கடியுண்டு அன்றே அருநர கடைந்தான் (விவேகசிந். 90).

அதிர் பெ. மரியாதை. அதிர் கடந்து பேசுகிறான்

.

(வட்.வ.).

அதிர்காணி பெ.

காணியாட்சி, மிராசு. தனக்கு அதிர்

காணியாக (தெ.இ.க. 156).

அதிர்ச்சி (அதிர்த்தி) பெ. 1. நடுக்கம். நிலத்தின் கம்பமும் நெடுவரை அதிர்ச்சியும் எழுவ (சூளா. 718). பூமியதிர்ச்சி உண்டாச்சு (பாரதி. பாஞ்சாலி. ஆரவாரம். (கதிரை. அக.) 3. அசைவு. வயவெம் காய்

308).

2.

(சங். அக.) 4. பிளிறல், கர்ச்சனை. சினக் களிறு அதிர்ந்திடும் அதிர்ச்சி (கோனேரி. உப தேசகா. 5,118). 5. பயம். (கதிரை. அக.)

அதிர்த்தி (அதிர்ச்சி) பெ. நடுக்கம். இவன் கன்று மரித்தோடுகிற அதிர்த்தியாலும் (பெரியாழ். தி.3,2,

3 வியாக்.).

அதிர்த்தி2 பெ. எல்லை, அத்து. இந்நான்கு அதிர்த் திக்குட்பட்ட நிலத்தில் (தெ. இ.க.23,420).

அதிர்ப்பு (அதிர்வு) பெ. 1. எதிரொலி. எதிர்குதிரா கின் று அதிர்ப்பு (பரிபா. 8,21). அலங்குதேர் ஆழி யின் அதிர்ப்போ (கம்பரா. 6, 30,19). 2.நடுக்கம்,