உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தாமம்

யுவமை என்பது ஒரு செய்யுளகத்து

...

உவமேயப்

பொருட் பெயரினை

...

...

அந்தாதி நிகழ்த்துவது

(மாறனலங்.101 உரை).

அந்தாமம் பெ. பரமபதம். அந்தாமத்து அன்பு செய்து (திருவாய். 2, 5, 1). அது மாசுஅறும் அந்தாமம் தருவதற்கே ஏது (மாறலைங். 214 உரை).

அந்தாயம் பெ. மாதிரி. (செ.ப. அக.)

அந்தாரம் பெ. அரும்பொருள். அரும்பொருள். அந்தார வார்பகழி ஐந்தால் அமர் கருதி (பாரத வெண். 581).

அந்தாலே வி. அ. அங்கே. அந்தாலே போ (நாட்.வ.)

அந்தாளி பெ. குறிஞ்சிப் பெரும்பண்ணின் முதல் திற மாகிய நைவளத்தின் புறநிலைப் பண்ணாக 38 என்ற எண் பெற்ற பண். நட்டபாடை அந்தாளி குறிஞ்சி யாழ்த்திற மாகக் கூறுவர் (பிங். 1382). அந்தாளிக்கு ஒன்றாக்கி (திருமுறை கண்டபு. 39).

...

அந்தாளிக்குறிஞ்சி பெ. குறிஞ்சியாழ்த்திற வகை. (தேசாட்சி என்னும் மேளத்தில் தோன்றிய இரா கம்) (யாழ்நூல் ப. 267; தேவா. 3, 124-125-ஆம் பதிகங்களின் பண்) கோலக் குறிஞ்சி அந்தாளிக் குறிஞ்சி (இரகு. அவதார. 16).

அந்தாளிபாடை பெ. பாலைப் பெரும்பண்ணின் முதல் திறமாகிய அராகத்தின் புறநிலையில் பதினெட்டாம் பண். தக்கராகம் அந்தாளிபாடை யாழ்த்திறம் (பிங்.1381)

பாலை

அந்தான் பெ. கப்பலில் உண்டாகும் சிறுதுளை வழியே தண்ணீர் உட்புகாதபடி அடைக்கும் பலகை. (ராட். அக.)

அந்தி பெ. 1. மாலைக் காலம். அந்திமாட்டிய நந்தா விளக்கின் (பட்டினப். 247). அந்திவான் மதியம் சூடும் (தேவா. 4, 56, 8). அந்தியின் வாய் எழில்

...

பரன் (திருக்கோ. 99). அந்தி வந்து அடைந்த தாயைக் கண்ட ஆன் கன்று (கம்பரா. 2, 3, 108). காலையும் நண்பகலும் கதிர்போய் வரை காணும் அந்தி மாலையும் (அம்பி. கோ. 184). அந்திப் பொழுதுவர உள்ளம் புழுங்கி (மதுரைச். உலா 302). அந்திப் பிறை நுதலாய் (சங்கர. கோவை 137). அந்தி மகம் புரிபவர் போல் (திருச்சோற்று. பு. புராண வர. 4).2. இருள்பிரியும் காலைப்போது அல்லது இர வோடு மாலை மயங்கும் நேரம். காலையந்தியும் மாலையந்தியும் (புறநா.34,8). அந்தியும் சந்தியும் ஆடவல்லார் (தேவா. 4, 17, 7). அந்தியம் போதில்

218

...

...

அந்தி-த்தல்

அரியுருஆகி அரியை அழித்தவன் (பெரியாழ். திருப்பல். 6). அழலவன் குளித்தபின்னை அந்தி என்னும் மடந்தையும் அடைந்த போழ்தில் (குளா. 1701). 3.காலைப்பொழுது. நாள் அந்தி கோல் தின்று கண் கழீஇத் தெய்வத்தை தொழுது எழுக (ஆசாரக். 9). 4. உச்சிப் பொழுது. நன்பகல் அந்தி (பொருந. 46 நச்.). 5. இரவு. அந்தி 5.இரவு. அந்தி காவ லன் (பெரியதி. 85,1). 6.காலையும் மாலை யும் செய்யும் வழிபாடு (சந்தியாவந்தனம்). அந்தி அந்தணர் அயர (குறிஞ்சிப். 225). ஓதி உருவெண் ணும் அந்தியால் (இயற். முதல்திருவந். 33). அந்தியை நோக்கினான் அறிவை நோக்கினான் (கம்பரா.

2, 9, 41).

அந்தி பெ. செவ்வானம். அந்திவண்ணர் தம் அடிய வர்க்கு அமுது செய்வித்து (பெரியபு. 7, 3). அந்தி வானத்து அணிநிறங் கவர்ந்து (ஞானா. 1). அந்தி யஞ் சடைமுடியண்ணல் (கந்தபு. 6, 4, 30).

அந்தி 3 பெ. கதிரவன். அந்தியும் வாணியும் இந்து வும் எரியும் (ஞானா. 40, 6).

அந்தி

பெ. முச்சந்தி, மூன்று தெருக்கள் சேரும் இடம். அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும் (சிலப். 14,

213).

அந்தி" பெ. (இசை) பாலைப் பெரும்பண்ணின் திற மாகிய அராகத்தின் அருகியலில் பத்தொன்பதாம் பண். அந்தி மன்றல் பாலை யாழ்த்திறம் என்ப

(பிங். 1381).

...

அந்தி பெ. செவ்வந்திப்

பூப்ப (அகநா. 71, 6).

பூ. பொன்னின் அந்தி

அந்தி பெ. ஊழிமுடிவு. படரணி யந்திப் பசுங் கண் கடவுள் (கலித். 101, 24). அந்தியில் மாநடம் ஆடும் (காரை. பதிகம் 1, 10).

அந்தி பெ. தில்லைமரம். (மலை அக.)

அந்தி பெ. அக்காள். (சங். அக.)

அந்தி-த்தல் 11 வி.

1.சந்தித்தல். யமபடையென அந்திக்குங் கட்கடையாலே (திருப்பு.964).2. பொருந்துதல். பதினாலுலகும் அந்தித்தது (கந்தரந். 4).3. கிட்டுதல். வேதம் அந்தித்தும் அறியான் (திருவிளை. பு. நகரச்.106).

அந்தி 11 -த்தல் 11 வி. 1.அடக்குதல். அந்திக்கும் மந் திரம் ஆரும் அறிகிலார் (திருமந். 869).2. (பணம்)