உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்திமான்

மாலைச் சிறப்புச் செய்காதையும் (சிலப். பதி. 66). மடல் சேர் அசுரர் நிறம் போலும் அந்திமாலை (கம்பரா. 1, 10, 65). மருமாலை வாங்கி வம்மின் அந்திமாலை வருமுன்னமே (திருவரங். கலம். 76). 2. மாலையில் கண்தெரியாமை. (வட்.வ.) 3. கண் பார்வை குன்றச் செய்யும் நோய். (சாம்ப. அக.)

...

...

அந்திமான் பெ. ஓர் இடைவள்ளல். அந்திமான் சிசு பாலன் இடைவள்ளல் (பிங். 756). அந்திமானே சந்திமான் என்று பேராய் புரந்தார் (கந்தபு. 6, 23, 18). செகதலத்தில், விள்ளும் அந்திமான் என்றும் மிக்கசந்திமான் என்றும், வள்ளல் கட்குப் பேர் கொடுத்த வச்சயமே (மான். தூது 19).

அந்திமிரியன் பெ. மரவகை. (சாம்ப. அக.)

அந்தியகருமம் பெ. இறுதிச்சடங்கு. (செ.ப.அக.)

அந்தியகாலம் பெ. சாகும்வேளை. கணவர்க்கு அந்திய காலம் (நாஞ். மரு. மான். 10, 107).

அந்தியசன் பெ. புலையன்.

பெ. புலையன்.

முதலோர் மனை (சைவ. நெறி பொது 243).

அந்தியசர் வண்ணார்

பிரதிலோமர்.

அந்தியசைவர் பெ. சிவதீட்சை பெற்ற

(சைவ. நெறி பொது. 435 உரை)

அந்தியதீபம் பெ. (அணி.) கடைநிலை விளக்கு என் னும் அணி. (செ.ப.அக.அனு.)

அந்தியம்' பெ. 1. இறக்கும் வேளை. அடல்வாலிஅந்தி யத்தில் அறைந்த வார்த்தை ( உத்தர. 11, 66). 11,66). 2. கடைப்பட்டது. (செ. ப. அக.)

அந்தியம்' பெ. ஒரு பேரெண். சமுத்திரம் பத்தே அந்தியமாகும் (பிங். 2277).

அந்தியன் பெ. கடைக்குலத்தவன். அந்தணர் அந்தி யர் எல்லையினின்ற அனைத்துலகும் (தேசிகப்.

17, 17).

அந்தியுழவு பெ. கோடையில் அந்திநேரத்தில் உழுகை.

(நாஞ்.வ.)

அந்தியேட்டி பெ. இறந்தோர்க்குச் செய்யும் இறுதிச் சடங்கு. சிவனோடு ஒன்றுபட்ட சிவஞானிகளுக்கு முன்னூலில் அந்தியேட்டி உண்டு என்று சொன்னதில்லை (தத்து. பிர. 145 உரை).

...

220

அந்திவண்ணன்

அந்தியேட்டிக்குருக்கள் பெ. கருமாதி செய்விக்குங் குருக்கள். (செ. ப. அக.)

அந்திரக்கண்மணி பெ.நீலக்கல். (வைத். விரி. அக.ப.17) அந்திரக்கொடிச்சி பெ கந்தகம். (முன்.)

அந்திரட்டை பெ. அந்தியேட்டி. (செ.ப.அக. அனு.) அந்திரத்தியானி பெ. ஆமை. (போகர் நி.19)

அந்திரம் பெ. சிறுகுடல். (செ. ப.அக.)

அந்திரர் ப. ஆந்திரர். அந்திரர் முதலிய அரைசர் இடு திறைகள் (பெருந். 783).

அந்திரவசனம் பெ. 1. கொட்டைப்பாக்கு. (வைத். விரி. அக. ப. 17) 2. கொட்டையரசி. (வாகட அக.)

அந்திரன்' பெ. தேவனாம் சிவன். அந்திரனை ஆரூ ரில் அம்மான் தன்னை (தேவா. 6,29,4).

அந்திரன் 2 பெ. பெ. வேடன். (யாழ். அக. அனு.)

அந்திரி (அந்தரி3) பெ. 1. பார்வதி. (செ. ப. அக. அனு.) 2. காளி. (முன்.)

அந்தில் பெ. அவ்விடம். வருமே சேயிழை அந்தில் (குறுந்.293). அந்தில் எழுதிய அற்புதப் பாவை (மணிமே.7,95). கலிங்கம்... நனைப்ப அந்தில் இருந் தாள் (சீவக. 1785). நியமம் முற்றி அந்தில் ஆசனங் கொண்டு (யசோதர 24). உள்சாம்பி அந்தில் நின்று (குசே.309).

அந்தில்' பெ. வெண்கடுகு. அந்தில். வெண்சிறு கடுகென விளம்பலாகும் (பிங்.2939).

...

அந்தில்' இ. சொ. ஓர் அசைச்சொல். அந்தில் அசைநிலைக் கிளவி (தொல். சொல். 267 சேனா.). அந் தில் கச்சினன் கழலினன் (அகநா. 76, 6-7). அந்தில் அரங்கத் தகன் பொழில் (சிலப். 11, 6). காலமோ என் வந்தது அந்தில் கணிச்சியும் கனல் காலவே (தக்க. 632).

அந்திவட்டம் பெ. மாலை நேரத்து வானம். அந்தி வட்டத் திங்கட்கண்ணியன் (தேவா. 4,98,1).

அந்திவண்ணன் பெ. (செவ்வானம் போல் நிறமுள்ள)

சிவன். தேவூர் அந்திவண்ணனை அடைந்தனம்