உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிர்தயோகம்

அமிர்தயோகம் (அமுதயோகம்) பெ. (சோதிடம்) வாரநாளும் நட்சத்திரமும் பொருந்தி வருகின்ற ஆறு சுபயோகங்களுள் ஒன்று. அன்றாய உரோணிமூலம் நின்றிடில் அமிர்தயோகம் (சூடா.உள்.20).

அமிர்தர் பெ. 1. (அமிர்தம் உண்ட) தேவர். இரைக்கும் அமிர்தர்க்கு அறிய ஒண்ணான் எங் கள் ஏகம்பனே (தேவா. 4,99,5). 2. ஒரு தேவ வகுப்பினர். சிறப்புடை ஐந்தாம் மனுவின் திரு நாமம் அமிர்தர் அறந்தருபாகர் (கூர்மபு. பூருவ.

47, 8).

...

அமிர்தவடை பெ. பணிகார வகை. (இந்துபாக. 384)

அமிர்தவல்லி பெ. சீந்தில்கொடி. (பச்சிலை. அக.)

அமிர்தவிந்து1 பெ. நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று. (அபி. சிந்.)

அமிர்தவிந்து' பெ. வாலைரசம். (சங். அக.)

அமிர்தன்1 பெ. தேவ மருத்துவனாகிய தன்வந்தரி. (முன்.)

அமிர்தன்' பெ. மரணத்தின் வசப்படாதவன். அடைந்து நீ அமிர்தன் ஆகுதி (திருக்காளத். பு. 29, 32).

அமிர்து' (அமிர்தம், அமிருதம், அமிழ்தம், அமிழ்து, அமுதம், அமுது, அமுர்தம்) பெ. 1. தேவாமிர்தம். நல்லமிர்து கலந்த நடுவுநிலை திறம்பிய (பரிபா. 3, 33-34). நாவதால் அமிர்து உண்ண நயந்தவர் இரிந்திட (தேவா. 2, 96, 2). அன்னையாய் ஆரு யிராய் அமிர்தாகி (பெரியபு. 57, 12). அமிர்து பொதி வன சில குவடு அசையவும் (தக்க. 42). அமரர்க்கு அமிர்து ஈய (சிவதரு. 2,83). 2. சோறு. உவகை அமிர்து உய்ப்ப (பரிபா. 8, 121). இரசநீர் அமிர்து கைக்கொண்டு... செய்வாய் (யசோதர. 150). அத்திரத் தால் அந்நீர் அமிர்திற் புரோக்கிக்க (சைவ. நெறி பொது 286). 3.உணவுப்பண்டம். அமிர்து இயன் றன்ன தீஞ்சேற்றுக் கடிகையும் (மதுரைக். 532). 4. நாடு காடு முதலியவற்றில் கிடைக்கும் நுகர்பொருள் கள். நாட்டகத்து அமிர்தும் நளிர்கடல் அமிர்தும் கொண்டார். (சீவக. 2110).5. இனிமை. அமிர்து உயிர்க்கும் நறும்புகையும் (முன். 2032). 6. தாய்ப் பால். கனதனத்திலூறும் அமிர் தூட்டினளால் (கந்தபு. 6, 24, 37). 7. (பாலையொத்த) நிலவின் ஒளி. இன் அமிர்து அளித்திடும் செழுமதி (திருக்

...

காளத். பு. 21,14).

2

82

அமிலம்

அமிர்து' பெ. மந்திரம். பொன் துஞ்சுமார்பன் ஞமலிக்கு அமிர்து ஈந்தவாறும் (சீவக. 14).

...

அமிர்தை1 பெ. 1. பார்வதி. கவுரி மகேச்சுரி அமிர்தை அசலை (கூர்மபு. பூருவ.12,20). 2. பன்னிரு யோகினி களுள் ஒருத்தி. அமிர்தை முதலிய தேவதைகளால் சூழப்பட்டவளாகவும் (தக்க. 433 ப. உரை).

அமிர்தை 2 பெ. அமிர்தக் கடுக்காய். (சங். அக.)

அமிர்தை 3 பெ. சீந்தில். அமிர்தை வங்கம் (தைலவ. 23/செ.ப.அக.).

அமிர்தை* பெ. நெல்லி. கரிப்பான் அமிர்தை காணி (தைலவ. தைல. 29/செ.ப. அக.).

அமிர்தை' பெ, வெள்ளைப்பூண்டு. நரி சோம்பசை அமிர்தை (தைலவ. தைல. 109/செ. ப. அக.).

அமிர்தை' பெ. திப்பிலி. (பச்சிலை. அக.)

அமிர்தை' பெ. துளசி.

(முன்.)

அமிரம் பெ. மிளகு. (முன்.)

அமிராகிதம்

பெ.

அக . அனு.)

செங்கருங்காலி, (சித். அக.செ.ப.

அமிருதம் (அமிர்தம், அமிர்து, அமிழ்தம், அமிழ்து, அமுதம் அமுது, அமுர்தம்) பெ. தேவருணவு. அமிருதபானமும் விடபானமும் சமானமா (பாரதி. வசனக்கவி. 4 சகத். 2).

அமில் (அமல்2, அமுல்) பெ. அதிகாரம். நீள்பத்தர் அமிலையும் புரியேன் (கோமதி அந். 38).

அமில்தார் பெ.

அக.)

(வரிவாங்கும்) அமல்தார். (செ.ப.

அமிலகாரகாட்டி பெ. கரைசலில் அமிலமும் காரமும் இருப்பதை நிறமாற்றத்தின் மூலம் அறிய உதவும் ஒரு வேதிப்பொருள். (வேதி. க. சொ.ப .1)

அமிலப்பாறை பெ. அரிக்கும் தன்மையுள்ள பாறை. (புவியியல் க. சொ.ப. 191)

அமிலம் பெ.

புளிப்புத் தன்மையுடையதும்

பெரும்

பாலும் அரிப்புத்தனமை வாய்ந்ததுமாய நீர்மப்பொருள்