உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதர்'

அமுதர்' பெ. முல்லை நில மக்கள். குடவர் அமுதர் கோவலர் ஆயர்... முல்லைநில மாக்கள் (பிங். 545).

அமுதரேகை பெ. உள்ளங்கையில் உள்ள ரேகைகளில் ஒன்று. அமுதரேகை தனரேகையிற் கூறியது

(வருணா. குற.12).

அமுதல் பெ. கடுக்காய். (மரஇன.தொ.)

அமுதவட்டம் பெ. சந்திரன். வெம்மையினைக் குறித் தன்றோ அமுதவட்டம் ஆலவட்டம் எடுப்பது அம்மா (கலிங். 87).

430

அமுதவல்லி பெ. சீந்தில். அமுதவல்லி சீந்தில் (திவா.

826).

அமுதவல்லியுப்பு பெ. சீந்தில் சர்க்கரை. அமுதவல்லி உப்புடனே ஆக்கி (தேரை. வெண். 118).

அமுதவி' (அமுதை) பெ. சீந்தில். (பச்சிலை. அக.) அமுதவி' (அமுதை2) பெ. கடுமரம். (முன்.) அமுதவி' பெ. நெல்லி. (முன்.)

அமுதவிந்து பெ. 1. அமிர்தத்துளி. அமுதவிந்து ஒக்கும் என்ன (பாரதம். 1,3,66). 2. ஆகாசமாகிய பூதத்தின் குறியாகச் சொல்லும் வட்டத்துளி. (சி. சி. 2,

68)

அமுதவுந்தி பெ. பாற்கடல். உண் அமுத வுந்தியன ஒண்ணகர் (கம்பரா. 1, 14, 13 பா.பே.).

அமுதவுற்பம் பெ. சிறுகுறிஞ்சா. (வாகட அக.)

அமுதவெழுத்து (அமுதெழுத்து) பெ. (இலக் ) காவி யத்தின் முதற்செய்யுள் முதன் மொழியிலும் தசாங்கம் என்ற பிரபந்தத்திலும் வருவதற்குரிய மங்கல எழுத்து. (இலக். வி. 779)

அமுதளம் பெ. நெல்லி. (வாகட அக.)

அமுதன் பெ. (அமுதனைய) கடவுள்.

ஆரா அமு

தனைப் பாடிப்பற (பெரியாழ். தி.3,9,10).

அத்

தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறி (திரு

வாச. 7, 3).

று

அமுதனார் பெ. இராமானுச நூற்றந்தாதி பாடிய திரு வரங்கத்தமுதனார். முன்னை வினையகல மூங்கிற் குடி அமுதன் (இயற். இராமானுச. அந். தனி, 1).

28

8

அமுது

அமுதாகரம் பெ. அனு.)

ஒரு மருத்துவநூல். (செ. ப. அக.

அமுதாசனர் பெ. (அமுத + அசனர்) (அமுதத்தை உணவாகவுடைய) தேவர். பொங்கு அமுதம் அமு தாசனர்க்கு உதவினாய் (முத்துக். பிள். 7, 3). சோதி மணிமுடி அமுதாசனர் (கொலைமறு. 12). அருமாத வர் பிசிதாசனர் அமுதாசனர் (சேதுபு. இராமனருச்.

157).

அமுதாரி பெ. பூனைக்காலி,

(வைத். விரி. அக.ப.19)

அமுதாறு பெ. ( பரமபதத்துக்குச் செல்வோர் கடக்க வேண்டிய) விரசை நதி. ஆங்காரம்மான் பகுதிப் புறம்போய் அமுதாற்றில் படிந்து (திருவரங். அந்.

98).

அமுது (அமிர்தம் அமிர்து, அமிருதம், அமிழ்தம், அமிழ்து, அமுதம்', அமுர்தம்)

.

பெ. 1. உணவு.

இசையின் கொண்டான் நசையமுது உண்கென (புறநா.399, 21). அம்தீந்தண்ணீர் அமுதொடு கொணர்கேம் (மணிமே. 10,37). பொற்கலம் நிறை யவாக்கிய நெய்பயில் இன்அமுது (சீவக. 131). மறைவாணர்க்கு இன்அமுது அடுவார் (கம்பரா. 1,21, 22). ஈனா வாழையினது குருத்தை விரித்து அதன கத்தே அமுதைப் பெய்து (சிலப். 16, 43 அடியார்க்.). அரனடியார்க்கு அகம் மகிழ மாதுந் தானும் அமுது படைத்தொழுக வாடா மலரும் நல்லமுதும் கருத்தால் பாவித்து அருச்சித்து (ஞானவா. பிரகலா. 8). 2. அமிர்தம். அமுது கடைய (பரிபா. திர. 1, 68).

...

...

நாணாகி

...

(கடம்ப. 4. 525).

வெண்திரை தந்த அமுது (மணிமே. 15,51). இளை யவ ரமுதினு மினிய சொற்களே (கம்பரா. 2, 4, 176). கானவர்க்குத் தேவர் அமுதளக்க (கூளப்ப. காதல் 10). 3. கடலில் தோன்றும் முத்து, உப்பு முதலிய பொருள். கடல் படுமமுதும் (நைடத. நாட்டு. 25). 4. பழச்சாறு. தேமாம் பழம்பிதிர்ந்து சிந்தும் அமுது (திருவனந்தை விலா. 271). 5. சந்திர கிரணம். திங்களின் னமுதிறைப்ப (கூர்மபு. பூருவ. 10, 27). 6. சுபநிலை, அமுதகடிகை. பொன்னவன் கடத்துறினு மமுதெனப் போற்றுவரே (விதான. குணாகு.25), 7.சோறு. வாடா மலரும் நல்ல முதும் (ஞானவா. பிரகலா. 8). 8. நிவேதநம். பேர முதருத்தியேத்தி (கந்தபு. 2, 27, 20). 9. நீர். அமுது கொப்புளித்திடவாங்கி (தைலவ.34/சங். அக.). நதிய தாகி...அமுதளிப்பாய் (திருநெல். பு. அகத்தியரை. 91). 10.மழை. அமுதே மழையுந்தேவருணவும் (அக. நி. அம்முதல். 139). 11. பால். அமுது உததிவிடம் உமிழ (திருப்பு.43). அமுதாற் கரையடுவடி (தைலவ. 9(சங். அக.). 12. மூர்ச்சை தீர்த்துக் குற்றுயிர்