உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசாணிக்காய்

அரசாணிக்காய் பெ. பூசணிக்காய்வகை, பறங்கிக்காய். (நாட், வ.)

அரசாணிக்கால் பெ. அரசாணியில் முருக்குடன் நாட்டப் படும் அரசங்கொம்பு. (சங். அக.)

அரசாணித்தம்பம் பெ. அரசாணிக்கால்,

(கோவை வ.)

அரசாணிப்பானை பெ. மணமேடை முன் வைக்கப் பெறும் அடுக்குப்பானைகள். (சங். அக.)

அரசாணிமேடை பெ. அரசங்கால் நட்ட மணமேடை.

(முன்.)

அரசாணை

பெ.

அரசின் கட்டளை. குடும்பநல நிதி

உயர்விற்கு அரசாணை (செய்தி.வ.).

அரசாள் (ளு)1-தல் 2 வி. ஆட்சி செய்தல். சகுனியான் அரசாளுதல் கண்டாய (பாரதி. பாஞ்சாலி. 173).

அரசாள்' பெ. கரும்பு. (மரஇன.தொ.)

அரசாற்று-தல் 5வி. 5 வி. ஆட்சிக் கடமையை நிறைவேற்று தல். ஐய செல்வம் பெருமை இவற்றின் காதலால் அரசாற்றுவனல்லேன் (பாரதி. பாஞ்சாலி. 173).

அரசானம்1 பெ. பூவரசுமரம். (சங். அக.)

அரசானம்* பெ. அரத்தைப் பூண்டு. (முன்.)

அரசி பெ. 1. அரசன் பட்டத்துக்குரிய மனைவி. அரசர்இல் புகுந்து பேர் அரசி ஆன நீ (கம்பரா. 2,2,69). 2. தானே அரசுகட்டிலில் இருந்து ஆளும் அதிகாரமுடையவள். அரசி மங்கம்மாள் (நாட்.வ.).

அரசிகம் பெ. (அ + ரசிகம்) சுவையில்லது, இரசமில்லா தது. (சங். அக.)

அரசிதழ் பெ. அரசின் சட்டங்களையும் கருத்துக்களையும் அறிவித்து அரசே வெளியிடும் இதழ். பெயர் மாற் றம் பற்றிய அறிவிப்பு தமிழ் நாடு அரசிதழில் வெளியாயிற்று (செய்தி.வ.).

அரசிப்படு-தல் 6 வி. அரசி போன்று கற்பித்துக் கோபித்து நடந்துகொள்ளுதல். சொல்லில் அரசிப்படுதி நங் காய் (பெரியாழ். தி.2,9,10 வியாக்.).

32

24

அரசிருக்கை

அரசிமாணிக்கம் பெ. சிறந்த மாணிக்கம். திருப்பட் டிகை நாணும் அரசிமாணிக்கமும் படுகண்ணும்... (தெ.இ.க. 2, 93).

அரசியல் பெ. 1. அரசநீதி. அரசியல் பிழையாது செரு மேந்தோன்றி (பதிற்றுப். 89,12). அரசியல் பிழை யாது அறநெறிகாட்டி (மதுரைக். 191). அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று (சிலப். பதிகம் 55). 2. ஆட்சித்தத்துவம், ஆட்சிமுறை, அரசாங்கம். அல் கில் செல்வத்து அரசியல் (கம்பரா. 5, 3, 104). அர சர்க்கு உரிய ஆதலின் அரசியல் என்றும் (குறள். அதி. 39 மணக்.). 3. (இக்) ஆட்சி நடைமுறை. காந் தியின் அரசியல் வழி நல்லது என அமைச்சர் கூறி னார் (செய்தி.வ.).

அரசியல்கட்சி பெ. (இக்) சில அரசியல் கொள்கை களின்படி அமைக்கப்பட்டு இயங்கும் அமைப்பு. அரசி யல் கட்சிகள் என்பவை தற்காலத்திய மக்களாட்சி அரசுகளின் ஒரு முக்கிய வளர்ச்சியாகும் (அரசியல்

12 u. 73).

அரசியல்நூல் பெ. அரசியலை விரித்துக் கூறும் நூல். அரசியல் நூலைக் கற்பவர் மனிதச் செயலைப் பற் றிக் கற்கினறவரே யாவர் (முன். 12 ப. 1),

அரசியல்புரட்சி பெ. ஒரு நாட்டின் ஆட்சியில் ஏற்படும் அடிப்படை மாற்றங்கள். சமூகத்தை மாற்றியமைக் கின்ற அரசியல் புரட்சிகளும் சமூகத்தில் மாற்றத் தை உண்டுபண்ணுகின்றன (முன். 12 ப. 82).

அரசியல்வாதி பெ. அரசியலைப் பற்றிய அறிவும் அர சியலை முழுநேரப் பணியாகவும் கொண்டவர். காந்தி அண்ணல் நேர்மையான அரசியல்வாதி (செய்தி.வ.).

அரசியலமைப்பு பெ. அரசு இயங்குவதற்கு அமைத்துக் கொண்ட அடிப்படை நெறிகள். ஓர் அரசியலமைப்பு வரையறுக்கப்பட்டதாகவும்

திட்டமானதாகவும்

இருக்கவேண்டும் (அரசியல் 12 ப.2).

உரிமை.

...

அரசியலுரிமை பெ. நாட்டின் அரசியலில் பங்கு பெறும் அரசியலுரிமை முறைமையிலேத்தி (தெ.இ.க.5,633). இராணுவ ஆட்சியில் மக்கள் அரசியலுரிமை இழக்கின்றனர் (செய்தி.வ.).

அரசிருக்கை பெ. (அரசன் வீற்றிருக்கும்) அரியணை, அரசாளும் உரிமை. தனயனாம் குலோத்துங்கற்குத் தன்னரசிருக்கை நல்கி (திருவிளை. பு.25,2).