உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசு 2

(பட்டினத்தார்.. அருட்பு. மு. மு. 12). அரசங்கறிகுவர்

கொல்லோ

226). (சங்கர. கோவை

11. பண்டை

12.

வேளாளர் பட்டப்பெயர். வேளெனவும் அரசெனவும் உரிமை எய்தினோரும் (தொல். பொ. 30 நச்.). புத்தன். (கயா. நி. 518) 13. இந்திரன். தந்தாவளப் பூந்தருஅரசும் (சங்கரலிங்க உலா 2). 14. பரம்பொருள். இறை அரசுநம்பி பேராளன் இயம்புகோன்...எப் பொருட்கும் இறைவன் (ஆசி.நி. 44).

அரசு" பெ. சைவ நாயன்மார்கள் அறுபத்து மூவருள் ஒருவரான திருநாவுக்கரசர். ஆரூர் வணங்கிப்போந்த அரசும் எதிர் வந்தணைய (பெரியபு. 28,494).

அரசு 3 பெ. 1. அரசமரம். அயிரிடு நெடுவழி அரசிடை இருந்துழி (பெருங். 1,36,224). மருது அரசு இருங்கோங்கு அகில்மரம் (கருவூர். திருவிசை. 7, 1). அரசிலை தருப்பை தோய்ந்த காமர் பொன் கலச நன்னீர் (பெரியபு. 28, 1224). சரவணப் பொய்கைப் பாரதத்தரசுறு பன்னம் வீழ்ந்த (திருவால.பு. 44, 23). அரசு வனசம் செழும்பாடலம் (அறப்பளீ .சத.73). அழல்தனைக் காணாது அரசு உறைந்தான் என வேழம் தெரிக்க (அரங்க. பாரதம். சுவரணோற். 10). 2. மராமரம். மராமரம் அரசே (திவா.620)

அரசு பெ. சதுரங்க விளையாட்டில் அரசுக்காய் கட்டுப் பட இருத்தலைக் குறிக்கும் குறிப்புச் சொல். (செ.ப. அக.)

அரசுக்கடன் பெ. அரசாங்கம் அளிக்கும் கடன். (வரு வாய்த்துறை.க. சொ.)

அரசுக்காரன் பெ. காவல் காத்தற்கெனக் குறிப்பிட்ட சில உரிமைகள் பெற்றவன். (செ. ப. அக. அனு.)

அரசுக்காவல் பெ. 1. நாட்டுக்காவல். (செ.ப. அக.) 2.பொதுவாகப் பாதுகாப்பு செய்வதற்காக ஏற்பட்ட மானியம். (ராட். அக.)

அரசுக்குடி நிலஉரிமையாளர் பெ. அரசாங்க நிலத்தைக் குடியிருக்க வாங்கிக்கொண்டவர். (வருவாய்த்துறை.க.

சொ.)

அரசுக்குடிநிலம் பெ. குடியிருக்கப் பயன்படும் அரசாங்க நிலம். (முன்.)

அரசுக்குடியுரிமைமுறை பெ. அரசாங்க நிலத்தைக் குடியிருக்க மேற்கொள்ளும் ஒழுங்குகள். (முன்.)

326

அரசு பேறு

அரசுக்குடியூர் பெ. அரசாங்க நிலத்திலேயே புதிதாய் அமைக்கப்பெற்ற கிராமம். (முன்.)

அரசுகட்டில் பெ. அரியணை. அரசுகட்டில்-சிங்கா தனம் (சிலப். 22, 7 அரும்.).

அரசுகாரர் பெ. அரசு அலுவலர். எட்டாந்திருநாள் மண்டகப்படி காவல் அரசுகாரர் பண்ணிவைக் கிறது (தஞ்.மரா. செப். 2,81).

அரசுகொள்கடன் பெ. அரசுக்கு ஆற்ற வேண்டிய கடமை. அரசுகொள் கடன்கள் ஆற்றி ... (பெரியபு. திருநாட். 26).

அரசுசெய்-தல் 1 வி. (நாட்டை) ஆளுதல். அரசு செய் கெனா தெரியக்கூறினான் (கம்பரா. 2,13,103).

...

அரசு செயற்குறிப்பு பெ. அரசு செயலில் ஈடுபடவேண்டி யதை முன்னரே தெரிவிக்கும் குறிப்பு. (நகராட்சித் துறை க. சொ.)

அரசுசெலுத்து-தல் 5 வி.

தரசு செலுத்திய செங்கோல் (தெ.இ.க.8,97,2).

அரசு சொல்லு-தல்

ஆட்சி செய்தல். வையத்

சதுரங்க விளையாட்டில் அரச

னாகக் கொள்ளும் காயைப் பகைக்காய்கள் மூலம் வளைத்து அரசென்று கூறுதல். (செ.ப.அக.)

அரசுடைமை பெ. சில குறிப்பிட்ட தொழில்களை அரசு தன் உரிமையாக்கிக் கொள்ளுகை. எந்தத் தொழிலையும் அரசுடைமையாக்கும் அதிகாரம் (வரலாறு 12 u. 196).

அரசுதலைபணி-த்தல்

11வி. அரசனாக முடிசூட்டப்

பெறுதல். அங்கர்கோனாய் அரசுதலை பணித்து

(ஞானா. 39).

அரசுநீழலிருந்தோன் பெ. புத்தர். அரசு

நீழலிருந்

தோன் அறிவரன் பகவன் செல்வன் (சூடா.நி.1,

17).

அரசுப்பணி பெ. அரசாங்கத்தில் செய்யும் பணிகள். (நகராட்சித்துறை க. சொ )

அரசு பேறு பெ. அரசனுக்குரிய வரி பாக்கிப்பணம். விற் பிடி அரசுபேறு காணி ஆட்சிப்பேறு பழவரி (தெ.இ.க.8,276).

...

முதலான