உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரதனமாலையணி

அணையும் அரதனம்போல் (சிலையெழு. 57). அரத னக் கலசவியன்கரம் (தணிகைப்பு. கடவுள். 3). அரத னத்தொடி (குசே.619). 2. உயர்ந்த மணி, அகன் மணி. ஒளிவிடும் வயிர அரதனங்களையும் முத்து அரதனத்தினையும் (புற. வெண். 50 உரை). அரத னஞ் சலாகை அகன்மணியாகும் (பிங். 1231). மாணிக்கம். அரதன குண்டலம் ஆகி (குசே. 524). 4. மாநிதி. ஈங்கிவை நெதிகளாக ஏழ் அரதனங் கள் எய்தி (சூளா.1558). 5. மிருத பாடாணம்.

(வின்.)

அரதனமாலையணி

பெ.

3.

(2001.) கூறவேண்டிய பொருளை மாணிக்கம் பதித்த மாலைபோல நிரல்படக் கூறும் ஓர் அலங்காரம். (அணி. 74)

அரதனாகரம் பெ. தனுக்கோடிக்குக் கிழக்கே இருந்த

தாகக் கூறப்படும்

(அருணா. பு. 4, 14)

இரத்தினம் விளையும் கடல்.

இரத்தினம்

அரதி பெ. 1. வேண்டாமை. அரதி கைவிஞ்சு மோகம் (திருவாய். அந்.62). 2. துன்பம். (மேருமந்.

4. 1379)

அரதேசி பெ. உள்நாட்டுப் பிச்சைக்காரன். (வின்.) அரதேசிபரதேசி பெ. பிச்சைக்காரன். (பே.வ.)

அரதேவர் பெ. (சைனம்) அரர் என்ற பதினெட்டா வது தீர்த்தங்கரர். இருபத்துநாலு தீர்த்தங்கரர் ... அரதேவர் பார்சுவநாதர் (தக்க. 375).

அரதைப்பெரும்பாழி பெ. காவிரியின் தென்கரையிலுள்ள பாடல் பெற்ற சைவத்திருத்தலம் (அரித்துவார மங்கலம்). பிறையர் கோயில் அரதைப் பெரும் பாழியே (தேவா.3,30,5).

அரந்தம் பெ. கடுக்காய். (மரஇன. தொ.)

அரந்தளி பெ. மரவுரி என்னும் மரம். அனு.)

(செ. ப. அக.

அரந்தி பெ. முதுகெலும்புள்ளவைகளின் முன்கையில் உள்ள இரண்டு எலும்புகளில் பெரியது. (மருத். க.சொ.

ப. 286

அரந்தின்னு-தல் 8 வி. அரத்தால் அறுத்துக் கூர்மை யாக்குதல். அரந்தின் வாய் போன்ம் (பரிபா. 10, 98). வெவ்வரந்தின்று அயில் படைக்கும் சுடர் வேலோன் (கம்பரா. 1, 5, 65).

அரந்தை பெ. 1

1. துன்பம். அரந்தைப்பெண்டிர் இனைந்தனர் அகவ (மதுரைக். 166). நனந்தலை உலகம் அரந்தை தூங்க (புறநா. 221,11). அரந்தை

332

அரப்பொடி 1

கெடுத்து வரம்தரும் இவள் என (சிலப். உரைபெறு. 3, 2). அரந்தை கெடும் இவள் அருந்துயர் இது என (மணிமே. 6, 185). ஒரு தனி வேழத்தரந்தையை

...

தீர்த்தனை (இயற். திருவெழு. 12). அரந்தை வெம் பிறவி நோய்க்கும் அருமருந்து அனைய ஐயா (கம்பரா 4, 7, 138). அரந்தை வல்லிருள் அகலவந்து அவதரித்தாற்போல் (பெரியபு. 28,1189). அரந்தை கெடப் சுரந்தளித்த சிவகாம சுந்தரி (சேக்கிழார்பு. பாயி. 3). 2. கவலை. துன்பத்து அரந்தையில் கன்றுபு கனலும் (ஞானா. 34,12).

...

அரந்தை' பெ. குறிஞ்சிப்பண். குறிஞ்சியாழிசையும் துன்பமும் அரந்தை (பிங். 3079).

அரந்தை' பெ. நீர்நிலை. அரந்தையே நீர்நிலையும் துன்பமும் (அக நி. அம்முதல். 86).

அரந்தையன் பெ. (துன்புறும்) ஏழை. (சங். அக./செ. ப. அக.)

அரநிசி பெ. சிவராத்திரி. அரநிசி ஆநிலை இறையாதி லிங்கங்கள் (கருவூர்ப்பு. 15,66).

அரநெல்லி (அரிநெல்லி, அருநெல்லி) பெ. புளிப்புக் காய் தரும் நெல்லி மரவகை. (மரஇன. தொ.)

அரப்பதுமம் பெ. துளசி . பரி. அக.செ. ப. அக. அனு.)

அரப்பிரியை பெ. (சிவனுக்குப் பிரியமான) உமை. அம்பிகை ... பவானி அரப்பிரியை எனும் பெயர்

...

(ஆனைக்காப்பு. கோச்செங்.81).

.

...

அரப்பு 1 பெ. 1. இருப்பைப் பிண்ணாக்கு. (நாட்.வ.) 2. (சென்னை போன்ற சில பகுதிகளில்) சீயக்காய்த் தூள். (வட்.வ.)

அரப்பு' (அரம்பு) பெ. குறும்பு. இளமதிசூடிய அரப்பு

ஒப்பானை (தேவா. 5, 3, 4).

அரப்பு' பெ. 1.உசில் மரம். (மரஇன. தொ.) 2. உசில இலைத்தூள். (வட். வ.)

அரப்புப்பொடி பெ.

இருப்பைப்

பிண்ணாக்குத்தூள்.

அவர்களுக்கு எண்ணெயும்

அரப்புப்பொடியும்

எடுத்துக்கொடு (நாட்.வ.).

அரப்பொடி 1 பெ. இரும்புத்தூள். கருவாப்

அரப்

பொடிதான் சமனாய்ச் சேர்த்து (போக. செனன. 441).