உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அராமை

அராமை பெ. கீழ்மகள். (சங். அக.)

அராலை பெ. நாட்டியப்பெண், வேசி. (முன்.)

அராவடம் பெ. 1. அராவுதொழில். (செ.ப. அக. அனு.) 2. சாணைபிடிக்கை. (முன்.) 3. மெருகிடுகை. (முன்.)

அராவணம் பெ. புலம்பாமை. ஞாலம் - அராவணம் அதாவவதரித்திடும் அருட்சீதரா (சேதுபு. இரா

மனருச். 59).

அராவணல் பெ. ஆதிசேடன். அராவணல் முடித்

தலை (முன்.)

அராவணை பெ. பாம்புப் படுக்கை. அராவணையில் துயில்வோய் (கம்பரா. 1, 5, [17).

அராவணை

துறந்து போந்து வெண்ணெய்ததாழி சூழ்தர நின்றாடி (பாரதம். 5, 2, 1).

அராவணையான் பெ. (பாம்பில் பள்ளிகொள்ளும்) திருமால். பிறைப்பல் பேழ்வாய் நச்சு அராவணை யான் (செ. பாகவத. 1, 3, 28).

அராவரசர்கோன்

பெ. (பாம்பினங்களின்

பேரரச

னான) ஆதிசேடன். அணங்கு அராவரசர்கோன் (கம்பரா. 5, 2, 45).

அராவாரம் பெ.

66/செ.ப.அக.)

கொடிமுந்திரி. (தைலவ. 135 வரி

அராவான் பெ. (காப்.) அருச்சுனனுக்கு உலூபியிடம் பிறந்த மகன். பணிதலைமேற் கொண்டு யாது சொன் னான் அராவான் (பாரத வெண். 427 உரை). அம் மென்கொடியனையாளும் அராவானை அளித்

தாள் (பாரதம் 1, 7, 9).

அராவு1-தல் 5 வி. 1. அரத்தால் தேய்த்தல். அராவி வளைத்தனைய அம் குழவித்திங்கள் (காரை. அந். 49). வலியற அராவும் வைவாள் போலும் (பெருங். 3, 7, 105). வை அராவிய மாரன் வாளியும் (கம்பரா. 2, 3, 58). 2. உரசுதல். பொருப்பு அராவி இழிபுனல் (தேவா. 5, 30, 7). 3. மாறுபடுதல். பழமுத்தும் இப்பியற்று அராவினவும் சிவந்தநீரும் குளிர்ந்த நீரும் (தெ.இ.க. 2, 7).

அராவு' (அர', அரவம்', அரவு', அரா') பெ. பாம்பு. அராவின் வேகம் அடங்கிய வேழம்என்ன வீழ்ந் (கம்பரா. 2,3,15), கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர்மா தர் (திருமழிசை. திருச்சந். 35).

தான்

342

அரி-தல்

அராவைரி பெ. (பாம்பின்

(பாம்பின் பகையாம்) 1. கருடன்.

(வின்.) 2. மயில். (முன்.) 3. கீரி. (முன்.)

அராள கடகாமுகம்

பெ.

ஒன்று. (சிலப். 3, 13 உ. வே. சா. அடிக்குறிப்பு)

அராளகி

பெ.

நிருத்தக்கை முப்பதனுள்

வால்நட்சத்திரம்,

விண்வீழ்கொள்ளி

போன்று தீமை வருவதைக்காட்டும் தீக்கொடி. அவை அவீசி, கூர்மி, அவ்வியக்தி ... அராளகி மிசிரகேசி தூமகேது (தக்க. 457 உரை).

அராளம்1 பெ. இருவாட்சி. (கதிரை. அக.)

அராளம் 2 பெ. குங்கிலியம். (முன்.)

அராளம்3 பெ. அபிநயம் காட்டும்பொழுது அமையும் கை வகை, இணையா வினைக்கை வகை. ஒரு கை பிறைக் கை யொருகை அராளம், தெரியமணிக்கட்டில் ஏற்றி வைப்பதுவே (சிலப். 3, 18 அடியார்க்.).

அராளம் ' பெ. மதயானை. (நாநார்த்த. 738)

அராளம்' பெ. நறும்பிசின். (முன்.)

அராளம்' பெ. வளைவு. (முன்.)

...

அரி 1 - தல் 4 வி. 1. அறுத்தல். அருவி ஆம்பல் நெய் தலொடு அரிந்து (பதிற்றுப். 71,2). கூனிக் குயத் தின் வாய் நெல் அரிந்து (பொருந. 242). நெய்தலங் கழனி நெல் அரிதொழுவர் (புறநா. 209, 2). சதுர் முகனைத் தலை அரிந்ததன்மை தோன்றும் (தேவா. 6, 18, 7). வெய்ய வேட்கைவேர் அரிந்து இன் பம் பெறுதி (சீவக. 1534). எச்சன்தலை அரிந்து (திருவாச. 8,15). நாக்கரியும் தயமுகனார் (கம்பரா. 3,5,125). அரிதலால் அரிவாட்டாயர் ஆயினார் தூய நாமம் (பெரியபு. 13,22). ஆர்வவேர் அரிந்து முழுதுணர் சுகன்தன் அஞ்செவி நிறைத்தனன் (செ. பாகவத. 1, 2, 15). 2. கிள்ளுதல். உகிரால் அரிந்ததென்று உந்தீ பற (திருவாச. 14, 18). 3. (முற்றும் அறுத்து) இல்லாது செய்தல். அன்பு அரிந்து இடுகலா உலகம் (சீவக. 2996). 4. செங்கல் அறுத்தல். (இலங். வ.)

அரி -தல் 4 வி . 1. (குரல்) தழுதழுத்தல். அழுதலாலே அரிகுரல் கொண்ட பூசல் (சீவக.1533). 2.(பாடு தலால் குரல்) கம்முதல். துதித்து... அரிந்தது மணி மிடறு (சீவக. 3009).