உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிட்டம்13

அரிட்டம் 13 பெ. 1.

நன்மை.

(நாநார்த்த.705) 2.

நல்ல திட்டம். (சங். அக.)

அரிட்டம் 14 பெ. வெப்பு. அரிட்டம் என்பது...காக்கை யும் வெப்பும் (அக. நி. அம்முதல். 147).

அரிட்டம்15 பெ. முட்டை. அண்டம்

முட்டை (பிங்.2396).

அரிட்டி-த்தல் 11 வி. கொல்லுதல். (சதுரக.)

அரிட்டம்

அரிட்டை (அரிட்டம், அரிடம்) பெ. தீங்கு. நம் துயராம் அரிட்டை ஓதுதும்... அருள்பெறல் ஆமே

(திருவருட்பா 807).

அரிட்டை" (அரிட்டம்", அரிடம்2)

பெ. கடுகுரோகிE.

(தைலவ.23/ செ. ப. அக.)

அரிடம்' (அரிட்டம், அரிட்டை1) பெ. தீங்கு. அரி டமான தன்விதியினால் (பாரதம். 4, 4, 43).

அரிடம்"

(அரிட்டம்,

அரிட்டை 2) பெ. கடுகு

ரோகிணி. (பச்சிலை. அக.)

அரிடம்' (அரிட்டம்) பெ. வேம்பு. (முன்.)

அரிடரோகணி பெ. கடுகுரோகிணி. (மரஇன. தொ.)

அரிடிகம் பெ. ஒரு சிற்பநூல். (வின்.)

அரிணம்1 பெ. மான். வெங்கோட்டு அரிணத் தொக்கு (பாரதம். 2, 1, 105). புலக்கண் அரிணம் புகுங்காண் (திருக்கழுக்உலா 201). அரிணம் சூரல்... பரித்து (சேதுபு. கடவுள். 7).

அரிணம்' பெ. சந்தனம். (சங். அக.)

அரிணம்' பெ. பொன். (ராட். அக.)

அரிணம்* பெ. எலுமிச்சை. (மரஇன. தொ.)

அரிணம்' பெ. வெண்ணெய். (மதுரை. அக.)

அரிணம்' பெ. சூரியஒளி. (முன்.)

அரிணம்' பெ. வெயில். (முன்)

அரிணி பெ. 1. பெண்மான். (செ.ப.அக. அனு.) 2. (மான்போன்ற) பெண். (செ. ப. அக.) 3. அழகி.

3.

52

அரிதம் 1

(செ.ப.அக.அனு.) 4. தேவமகளிருள் ஒரு பிரிவி னள். (முன்.) 5. பச்சைநிறத்தினள். (முன்.)

அரிணி' பெ. வஞ்சிக்கொடி. (ராட். அக.)

அரிணை பெ. கள். (வைத். விரி. அக.ப. 28)

அரித்தட்டு பெ. மா அரிக்கும் தட்டு. (இலங். வ.)

அரித்திரம்' (அரித்திராபம்) பெ. 1. மஞ்சள். ஏலம் தகரம் இலவங்கம் அரித்திரம் (அரிச். பு. நாட்டுச். 9). 2. பொன்னிறம். (உரி. நி.8,3)

அரித்திரம்'

விரி. அக. ப.5)

பெ. கந்தம். (வைத்..

அரித்திராபம் (அரித்திரம்) பெ. 1. மஞ்சள். ஒதும் அரித்திராபமும்

மஞ்சட்குறு பெயர் (பிங். 2938).

2. பொன்னிறம்.(உரி. நி.8,3)

அரித்திராமேகம் பெ. பித்தவெட்டை. (தைலவ.58 உரை செ. ப. அக.)

அரித்திரான்னம் பெ. மஞ்சள் அன்னம். (செ.சொ.பேரக.) 674)2.

அரித்து ' பெ. 1. பசுமை. (நாநார்த்த. 674) 2. பசும் புல். (முன்.) 3. பசும்புரவி. (முன்.)

அரித்து ' பெ. திசை. (முன்.)

அரித்துவாரம் பெ. இமயமலைச்சாரலில் உள்ள மாயா புரி என்னும் நகர். அரித்துவாரம் மாயாபுரியே (பிங். 470).

அரித்தை

பெ. கிலேசம், துன்பம். அரித்தை தானே கிலேசம் என்றாகும் (அக. நி. அம்முதல். 33).

அரிதகி பெ. கடுக்காய். அரிதகி பலாசம் மாதிலகம் ஆசினி (அரிச். பு. 1, 95).

அரிதகிவனம் பெ. அட்ட வீரட்டானங்களுள் ஒன்றாகிய திருக்குறுக்கை. அரிதகிவனத்தில் ஐயவெம் வினையை அரிதகி யென்றுவந் தடைவார் (மீனா. சரித். ப.233).

அரிதட்டு பெ. சல்லடை: (புதுவை வ.)

அரிதம்1 பெ. திக்கு. அரிதம் அம்பரம் ககுபம் அனைத்தும் திக்கே (பிங்.11).