உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரியணை

அரியணை பெ. (அரசன் வீற்றிருக்கும்) சிங்காதனம். அரியணைமேல் இருந்தாயை (பெருமாள்தி.9,1). அரியணை அனுமன் தாங்க (கம்பரா.6,38,38). அரியணை மிசை இருந்தபொழுது (பாரத வெண். 30 உரை). அரியணை வழங்கினன் அளகை காவலன் (செ. பாகவத. 4, 4, 35). அரியணையின் மேல் உமை யைப் போல (திருவாரூருலா 250).

அரியணைச்செல்வன்

பெ.

(சைனம்) அருகன். அற வாழி வேந்தன் அரியணைச் செல்வன் அருகன் பெயரே (பிங்.191).

...

அரியது பெ. 1. எளிதில் கிடைக்காத உயர்ந்த பொருள். அரியது ஒன்று எய்தினை வாழிய நெஞ்சே (நற். 137, 3-4). அரியது இனி எனக்கு (பெரியபு. 29, 249). அரியது கேட்கின் வரிவடிவேலோய் (தனிப்பா. அவ்வை. 58, 1). 2. பெறமுடியாதது. பற்றற்கு அரியது அரண் (குறள். 747).

அரியபச்சை பெ. வங்காளப் பச்சைநிறம். (சங். அக.)

அரியம் பெ. வாச்சியம், ஒருபறை. (மதுரை. அக.)

அரியமன் (அரியமா, அரியமான்') பெ. பன்னிரு சூரியருள் ஒருவர். (செ.ப.அக.)

அரியமா (அரியமன், அரியமான்2) பெ. பன்னிரு சூரிய ருள் ஒருவர். அரியமா எனுங் கடவுள் (பாரதம். 8, 2, 264). அரியமா எனும் பெயர் கதிரோன் அடைந்தி யங்கும் (செ.பாகவத. 12, 8,8).

அரியமா

(அரியமான்) பெ. பிதிர்த்தேவதை. (நா

நார்த்த. 636)

அரியமா' பெ. சூரியபக்தன். (முன்.)

அரியமான்1

(அரியமா) பெ. பிதிரர் தலைவன்.

தென்புலத்தோரின் இச்சையுறும் அரியமான் (கூர்ம

பு. உத்தர. 7, 10).

அரியமான் 2

(அரியமன், அரியமா1) பெ. பன்னிரு

சூரியருள் ஒருவர். விளங்குறு தாதா அரியமான். ஒளிரும் மித்திரன் (கூர்மபு. பூருவ.39,2).

அரியமான் ' பெ. செடிவகை. (சாம்ப. அக.)

அரியர் பெ. மிகச் சிலர். அகன்ஞாலமுடையாயை அறிவாரோ அரியரே (சூளா. 183),

35

57

அரியன் 1

அரியர்த்தர் பெ. (இடப்பாதியில் அரியைக் கொண்ட) சிவமூர்த்த பேதங்களுள் ஒன்று. (சிவக். பிரபந். ப. 249 அடிக்குறிப்பு)

அரியரசு பெ.

அரசசிங்கம். பிலத்தின் வாழ் அரி

யரசு தன் துயில் பெயர்ந்ததுவே

அரியரசு அனையன் (கம்பரா. 6, 9, 2).

(சூளா. 718),

அரியரன்சேய் பெ. (திருமால் சிவன் ஆகியோர்க்குப் பிறந்த மகன் ) அய்யனார். (யா.நி.23)

அரியல்' பெ.

...

1.கள். அரியல் ஆர்கையர் விளை மகிழ் தூங்க (அகநா. 184, 14). அரியல் அம் புக வின் இளையர் பெருமகன் (குறுந். 258). அரியல் ஆர்கை வன்கை வினைநர் (பதிற்றுப். 62, 16). அரி யல் ஆர்ந்தவராயினும் பெரியர் (நற்.156,8). பதலை அரியல் பாசிலைப் பருகிய (பெருங்.1,48, 163). அரியல் ஆர்ந்து அமர்த்தலின் அனந்தர் நோக்குடை மங்கையர் (சீவக. 1249). நெறி பிழைத்து அரியல் மாந்தி மாந்தி நெடுங்களி திளைத்து (கச்சி. காஞ்சி. இருபத். 381). வெதுப்புறும் அரியல் ஆர்ந்து வினைத்திறத்து ஊக்கம் மிக்கார் (பேரூர்ப்பு. 1,41). 2. தேன். பலாஅம் பழுத்த பசும்புண் அரியல் (பதிற்றுப். 61, 1). 3. (தூசு முதலியன) அரிக்கை. வெந்நீர் அரியல் விரல் அலை நறும் பிழி (பெரும்பாண்.281).

...

அரியல்' பெ. குத்துச் செடிவகை. (நாம.நி. 519)

அரியலாட்டியர் பெ. கள் விற்போர். அரியலாட்டியர் அல்குமனை வரைப்பின் (அகநா. 245, 9).

அரியலூர்த்தாட்டு பெ.

(அரியலூரில் நெய்த)

இரவிக்கைத்துண்டு வகை. (நாட். வ.)

அரியவர் பெ. (உயிர்களால் நினைக்க, நோக்க இய லாத) இறைவன். இடைவிட லரியவர் இடைமரு தெனு நகர் (தேவா. 1, 122, 4). நோக்க அரியவன் காண் (பட்டினத்தார். அருட்பு. மகடூஉ. 38).

அரியவனாதி பெ. இலவங்கப்பட்டை. (மரஇன. தொ.)

அரியளாமெனல் பெ. தலைவியின் மனநிலை அறிதல் அருமையெனத் தோழி தலைமகற்குக் கூறும் அகப் பொருள் துறை. (களவி. காரிகை 58)

அரியன்1 பெ. சிவபிரான். பெறுதற்கரியன் பெரு மானே (திருவாச. 45,7).