உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்'

அருள் பெ. தொடர்பு மாறாமல் இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் காட்டும் இரக்கம். அருளொடு புணர்ந்த அகற்சியானும் (தொல் QUIT. 75, 22 பொ. இளம்.). அருளும் அன்பும் நீக்கி (புறநா. 5, 5). அரு ளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை (குறள், 247). அருள் பெற்றேன் (தேவா. 7, 1, 2). ஆழியான் அருள் தருவான் (திருவாய். 10, 6, 1). ஈதலும் அருளும் (கம்பரா. 5,12,98). அருள் விளங்கும் (ஏரெழு. 28). இன்னருள் மடந்தை சார்ந்த இவன் (திருவால.பு.35,81). அருள்மடை திறந்த கடை வெள்ளம் (மீனா. பிள். 17). திருமுனி அருளினால் சிறிது இங்கு உரைப்பல் (செ. பாகவத. 1, 1, 9).

அருள்' பெ. நல்வினை. அருளும்

(பிங். 1798).

.

நல்வினையாகும்

அருள்' பெ. கருத்து, எண்ணம். அருள் என்கொல் கோவே (கம்பரா. 3, 5, 142).

10

அருள்1 பெ. கட்டளை, ஏவல், அருமணி முடியவன் அருளிது என்றலும் (சூளா. 1759). அருள்முறை அவரும் நின்றார் (கம்பரா. 6,21,22).

அருள் 11 பெ. (சிவனது கருணை வடிவான ) சிவசக்தி. அருளது சத்தியாகும் அரன் தனக்கு (சி. சி. சுப.

236).

அருள் 12 பெ. ஒளி. (செ.ப.அக.)

அருள் 13 பெ. முதிர்ந்த மாதுளை மரம். வாதம் அக லும் வளருகின்ற மந்தமறும் அருளென்னும் நன் மரத்தாலாய் (பதார்த்த. 229).

...

அருள்செய்-தல் 1வி. 1 வி. இரக்கங்காட்டுதல். என் இடர் கள்போக அருள்செய்யும் இறைவன்காண் (தேவா.

6, 30, 6).

அருள்துறை பெ. 1. திருவெண்ணெய்நல்லூர்ச் சிவன் கோயில். வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் அத்தா (தேவா. 7, 1, 1). அருள்துறை அத்தர்க்கு அடிமைப்பட்டேன் (நம்பியாண். தொண்டர். அந். 16). 2. திருவருளாகிய மேலான இடம். அடியார்க்கு அருள் துறை அளிக்கும் சோதி (திருவாச. 44, 6).

அருள்துறையான்

பெ.

திருவெண்ணெய்நல்லூரில் வாழ்ந்த மெய்கண்டார். மாடமலிதோய் அருள் துறை

யாய்.(சுதமணிக்கோ. 20).

38

61

32

அருளம்

அருள்நிதி! பெ.அருளாகிய

செவ்வம். அருள் நிதி

தரவரும் ஆனந்த மலையே (திருவாச. 20, 2).

அருள்நிதி2 பெ.

நில அளவுகோல் பெயர்.

அளவு

கோல் அருள்நிதியால் ஒருமா அரைக்காணியும் (தெ.இ.க. 14, 235).

அருள்பாடு பெ. 1. அருள்முறை. அருள் பாடின் முடி வைத்து (திருமந். 1591). 2.இசைந்தமை அருளிச் அருள்பாடு எனக்கேட்டுத் தூதனும் புகுந்து. வணங்க

செய்கை.

(பாரத வெண். 11 உரை).

அருள்பாராவதம் பெ. (அருள் + பருமை + ஆவதம்) அருளாகிய பெரிய மேகம். நின் அருள்பாராவதம் உயிர்கள் அனைத்தினுக்கும் ஒன்றாமோ (வீரசோ. 116 உரைமேற்கோள்).

அருள்புரி -தல் 4 வி. அருள்செய்தல். அருள் புரிந்த சிந்தை அடியார் (இயற். இரண்டாம்திருவந். 59). வர முனி மதலை அழ அருள்புரியும் (திருமலைமுரு. பிள். 2).

அருள்மன்றம் பெ. தில்லை (சிதம்பரம்). நித்திய பரமானந்த நிறையருள்மன்றமீது (திருவிளை. பு.

65, 17).

அருள்மாரி' பெ. கருணைமழை. (செ. ப. அக.)

அருள்மாரி' பெ. திருமங்கையாழ்வாரின் பெயர். அருள் மாரி அரட்டமுக்கி ... மங்கை வேந்தன் (பெரியதி.

3, 4, 10).

அருள்வடிவன் பெ. சிவன். எழுத்து ஐந்தன் அருள் வடிவன் (நாம.நி.10).

அருள்வாக்கி பெ. இறையருள் பெற்ற கவிஞன். (செ.

ப. அக.)

அருளகம் பெ.

வெள்ளெருக்கு. (செ.ப.அக.)

அருளப்படு-தல் 6 69. தெரிவிக்கப்படுதல். நீங்கள் பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அரு ளப்படும் (விவிலி. மத்தேயு 10,19).

அருளப்பாடு (அருளிப்பாடு) பெ. ஆணை. அருளப் பாடு என்று அடிபணிந்து (பாரதவெண். 237 உரை).

அருளம் பெ. பொன். (செ. ப.அக .அனு.)