உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரைமனைப்படிக்கல்

அரைமனைப்படிக்கல்

பெ. ஒரு நிறுத்தலளவை.

வெள்ளி சரப்பள்ளி நாலுக்கு வராகன் இடை வெள்ளி இராயடைப்படி அரைமனைப்படிக்கல்

லால் தூக்கம்

அரைமனைப்பிரதானி

(முன். 24, 431).

பெ. அரண்மனை அலுவலர்.

மகாதேவியார்க்கும் நன்றாக இவர் அரைமனைப் பிரதானிகளில் துளுமண்டலத்துப்புத்தூர்

(முன்.24, 261).

அரைமா பெ. (ஒரு மாவில் பாதியாகிய) 1/40 என்

னும் பின்னம். (எண்சுவடி)

அரைமுடி (அரைமூடி) பெ. பெண்

குழந்தைகளின் பெண்குறியை மறைக்க அரசிலைவடிவில் அணியும் அணிகலன். அரை முடியாச் செய்யச் சொன்னேன்

(மலைய. ப. 222)

அரைமூடி (அரைமுடி) பெ. பெண் குழந்தைகள் பெண்குறியை மறைக்க அரசிலை வடிவில் அணியும் அணிகலன். (பே.வ.)

அரைமேனி பெ. கிடைக்கவேண்டிய பலனில் பாதி கிடைத் தல். (வட்.வ)

அரையணி பெ. இடுப்பில் அணியும் அணிகலம். (செ. சொ. பேரக.)

அரையணிகை பெ. திருமணத்தில் மணமக்கள் புதிய ஆடைகள் அணிகை. (செ.ப. அக.)

அரையநாடு பெ. கொங்குமண்டலத்திலுள்ள 24 நாடு களுள் ஒன்று. பூவாணி அரையநாடு (கொங்கு. ஊர்த்.

2).

அரையம் பெ. 1. அரசமரம். வேனில் அரையத்து இலைஒலி வெரீஇ (ஐங்.325). 2. இருங்கோ வேளின் முன்னோர் ஆண்டநகர். நீடுநிலை அரையத் துக் கேடும் கேள் (புறநா. 202,8). வளம் தந்த ஈர் அரையம் மாய்ந்தது (பாரிகாதை. 561).

அரையர்' (அரசர்) பெ. 1.

குலப்பிறப்புரிமையால் நாட்டை ஆள்பவர். ஈழத்து அரையர்தம் முடியும் (தெ.இ.க.8,5). பெரிய பகடுகடவிப் பரவும் அரை யர் மகுடநிரைகள் வயங்க (ஆனந்த. வண்டு. 214). 2. தலைவர். ஐவகை அரையர் அவர்ஆகி (தேவா. 7, 60, 8). 3. முற்காலத்தில் அரசர்கள் அளித்துவந்த பட்டம். அரையர்கள் அனைவோமும் மறமுதலி கள் அனைவோமும் (தெ. இ.க.23,165).

3

889

அரையன்2

அரையர்' பெ. திருமால் கோயில்களில் திவ்வியப் பிர பந்தங்களைப் பாடியும் ஆடியும் தொண்டு செய்வோர். அதுமுதலாக, பாடுவாருக்கு அந்த இரண்டு பட்டப் பேரும் அரையர் என்கிற வியவகாரமும் நடந்து வருகின்றது (கோயிலொ. ப.34).

அரையர்கோவை பெ. தஞ்சைத் தயாபரன் என்ற தலை வன்மேல் பாடப்பெற்று இன்று கிடைக்காத கோவை நூல். (களவி. காரிகை 90)

அரையர்சேவை பெ. திருமால் கோயில்களில் திவ்வியப் பிரபந்தங்களைப் பாடியாடும் பணி. (கோயில் வ.)

அரையல்1 பெ. துவையல். (செ. ப. அக.)

அரையல்" (அரையலன் ) பெ.

1.சோம்பல். (கதிரை.

அக.) 2. 2. சோம்பேறி. (இலங். வ.)

அரையலன் (அரையல்') பெ. சோம்பேறி. (சங். அக.)

அரையலிடுகை

ஓரிடத்தைத்

பெ. 1. இருந்தாவது நின்றாவது தேய்த்துக் கொண்டிருக்கை. (வின்.) 2. வேலை செய்யாமல் மிகுதியாக உண்கை. (முன்.)

அரையவியல் பெ. பாதியளவு வெந்த உணவு. (இலங். வ.) அரையற்றநாள் பெ. மிருகசீரிடம் சித்திரை அவிட்டம் என்ற நட்சத்திரங்கள். (சோதிட. அக./செ.ப. அக. அனு.)

1

அரையன் 1 (அரசன், அரயன் அரைசன்') பெ 1.ஆட்சி செய்யும் அரசன். மலையரையன் பெற்ற மடப் பாவை தன்னை (சிலப். 29, 14). அரையனாய் அமருலகம் ஆள்வதற்கு (தேவா. 7, 34, 4). அரை யன் அமரும் மலை (பெரியாழ். தி. 4, 3, 8). கைமலர்க்காந்தள் வேலிக் கணமலை அரையன் மங்கை (சீவக. 208). பொருப்பரையன் மடப் பாவை (நந்திக்கலம். 1, 13). என்னானை

என்ன

ரையன் இன்னமுது (திருவாச. 7, 7). பொருப்பரை யன் மடப்பாவை இடப்பாகர் (பெரியபு. 21, 244). நீர்க்கடல் அரையற்கு ஆற்றுவான் அமைத்தல் (தணிகைப்பு. நாட்டுப். 138). 2. தலைவன். நாதாந் தத்து அரையா (திருமாளிகை. திருவிசை. 3, 7).3. ஒரு பழைய பட்டம், அரையன் அரங்கன் பிச்சன் (தெ. இ.க.438). 4. குறுநில மன்னன் பட்டம். பைம் புயற்கை மூவரையன் (மூவரை. விறலி. தூது 501-502).

அரையன்' பெ. தூள். (சாம்ப. அக.)