உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லா-த்தல்

...

அல்லா 1-த்தல் 12 வி. வருந்துதல். அல்லாந்து என் முகம் நோக்கியோள் (நற். 55,8). வயவுநோய் நலிதலின் அல்லாந்தார் (கலித். 29, 1-2). அல் லாந்து வடுவஞ்சி (பரிபா. 12,71). ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் (குறள். 593). அல் லாந்து அவள் நடுங்க அன்பின் அகல்வாயோ (சீவக. 2963). அல்லாந்து நெஞ்சம் கனன்று மிக் கழுங்கும் நீ (கச்சி. காஞ்சி. தீர்த். 66).

அல்லா 2 -த்தல் 12 வி. மகிழ்தல். அதனெதிர் சொல்லே மாதலின் அல்லாந்து கலங்கி (குறிஞ்சிப். 143... மகிழ்ந்து அதற்கு மறுமொழி கொடேம். நச்.).

..

அல்லா' பெ. வருத்தம். அல்லா நெஞ்சம் உறப் பூட்டக் காய்ந்தே (பரிபா. 6,99).

அல்லா (அல்லாசாமி) பெ. இசுலாமியர் வணங்கும் கடவுட்பெயர். யவனர்கள் அல்லா என வந்து சந்தி யும் நந்தாவகை தொழுஞ்சீர் (களவி. காரிகை 54 மேற்கோள்). மறைப் பொருளாய்த் திகழ்ஒளியாய் நிறைந்த அல்லா (சீறாப்பு. 3,39, 5). இம்மையி லும் அல்லா உனக்குக் கிருபை செய்வார் என (பிரதாப. ப. 2).

அல்லா" பெ.அ. முன்சொன்னவையல்லாத, ஒழிந்த. சோதிவைகும் பொற்றைய தொன்றே யல்லாப் பொருப்பெலாம் செறிந்த (கந்தபு. 4, 13, 486).

அல்லாக்கால் வி. அ. அல்லாதவிடத்து. அணைமென் தோள் அல்லாக்கால் (கலித். 124, 12). அல்லவை செய்குப அல்லாப்பின் அல்லாக்கால் செய்வது அறிகிலர் (பழமொ.நா.290). ஏற்பக் குடைந்தாடில் ஏசுவர் அல்லாக்கால் மாற்றிஇருந்தாள் என உரைப்பர் (முத்தொள்.30).

அல்லாசாமி (அல்லா± ) பெ. இசுலாமியர் வணங்கும் கடவுள். (பே.வ.)

அல்லாசி பெ. பெருங்கொடி முந்திரிகை. (சாம்ப. அக.)

அல்லாசிக்கொடி பெ. அல்லி. (மரஇன. தொ.)

அல்லாட்டம் பெ. அங்கும் இங்கும் திரிந்து அலைகை. (பே.வ.)

அல்லாடு-தல் 5 வி. 1.அங்கும் இங்கும் திரிந்து அலை தல். (முன்.) 2. துன்பப்படுதல். (செ. சொ. பேரக.)

1

அல்லாத பெ. மாறானவை. சொலற்பால அல்லாத சொல்லுதலுங் குற்றம் (நான்மணிக். 28).

397

அல்லாரி'

அல்லாத2 பெ. அ. (ஒன்றிலிருந்து) வேறான. அல் லாத என்னையும் (திணைமாலை. 88). மறுமனத்தான் அல்லாத மாநலத்து வேந்தன் (பழமொ. நா. 165). தன தல்லாத உடம்பினுள்ளே ஒதுக்குக் குடியாக இருந்த உயிர்க்கு (குறள். 340 மணக்.). அல்லாத நிலத்திற்கும் (இறை. அக. 18 உரை). அல்லாத பர சமய அலகைத் தேர் (சேதுபு.கடவுள்.13).

அல்லாப்பண்டிகை

பெ. இசுலாமியர் கொண்டாடும்

மொகரம். (செ.ப. அக.)

அல்லாப்பாண்டியடி-த்தல் 11 வி. குட்டிக்கரணம் போடு தல். (செ. ப. அக. அனு.)

அல்லாப்பு பெ. வருத்தம். அல்லது செய்குப அல் லாப்பின் (பழமொ.நா. 290). இவனைக் காய்ந்து இவன் நெஞ்சின்கண் அல்லாப்பை இறுகப் பூட்டு தலால் (பரிபா. 6, 99 உரை).

அல்லாமல்

இ.சொ. தவிர, இல்லாமல். எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்று அறியேன் (தாயுமா. 43, 221). பள்ளன் அல் லாமலே பயிர் ஆரிடுவார் (முக்கூடற். 105).

அல்லாமலும் இ.சொ.

மேலும். நீங்கள் பாதுகாப் புடன் செய்யவேண்டும் அல்லாமலும் விரைந்தும் செய்யவேண்டும் (பே.வ.).

அல்லாமை பெ. 1. தீக்குணம். வாஞ்சை முதலா அல் லாமை எத்தனை அமைத்தனை (தாயுமா.8, 1). 2. காரணம் அற்றிருக்கை. ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும் (இயற். சிறியதி. 53).

...

அல்லார் பெ. 1. மற்றவர். உடம்புணர் காதலரும் அல்லாரும் கூடி (பரிபா.8,125). தவம் செய்வார் தம் கருமம் செய்வார். அல்லார் அவம் செய் வார் (குறள்.266). நிரை உள்ளர் அல்லார் நிமிர்ந்து பெருகல் (பழமொ. நா. 125). 2. பகைவர். யாதும் தன்கண் அல்லார் செயற்கு என்றதோர் ஏதம் உண்டெனும் எண்ணம் இல்லா தவன் (சூளா. 641).ஏவின் அல்லார் எயில் எய்தார் (தேவா. 1,56,4). 3. எல்லா மக்கள். அல்லாரும் காதுகுத் துக்கு வந்திருந்தார்கள் (கோவை வ.).

அல்லாரி' பெ. வெள்ளாம்பல். (பச்சிலை. அக.)

அல்லாரி' பெ. சுவரில் கூரையைத் தாங்குவதற்கு

அமைக்கும் தண்டியம். (வட்.வ.)