உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலை

...

வீற்றிருந்தானை (பெரியாழ். தி.4, 1, 3). முரசம் அதிர்தலில் அலை கடல் போன்றுளது (தொண்டரடி. திருப்பள்ளி. 1). அலையடைந்த புனல் பெருகி (தேவா. 7, 16, 4). அலை பொருத செந்தில் (திருப்பு. 195). கடலாழி அலைகடந்த நாவுக்கரசும் (மதுரைச். உலா 88). அலைபட்ட வைகைத்துறை (மீனா. பிள். 77). அலை தவழும் வாவி தனில் வரால் துள்ளி (அப்பாண்டை. உலா 115). 2. தண்ணீர். வித்திஅலையில் விளைகபொலிக என்பார் (பரிபா. 10,86). 3. கடல். அலையிடைப் பிறவா அமிழ்தே (சிலப். 2, 78). அலை ஆரும் அஞ்சுவணத்தின் முத்து (கம்பரா. 5,2,79). அலையாக்கிய அமுதன்ன நல்லீர் (அம்பி. கோ.44). அலையின் மேற்றுயில் அண்ணல் (செ. பாகவத. 8, 7, 21). அலை நீரில் உழல் மீனதென (திருப்பு.912). அலைவளம் பெரிதென்கோ (நைடத. 1, 22). 4. கங்கையாறு. அலையொடு மதியம் சூடும் ஐயன் (திருவிளை. பு. 5,128). ஆம்பார் அனைத்தும் அலைகோத்து நீங்கும் அந்நாளில் (திருவால. பு. பயகரமாலை 47).

அலை பெ. மிகுதி. அலை ஊக்கம் கொள்ளை வெள்ளம்... மிகுதி (ஆசி.நி.194).

அலை' பெ. 1. வருத்துகை. உறுப்பறை, குடி கோள், அலை, கொலை என்ற வெறுப்பின் வந்த வெகுளி நான்கே (தொல். பொ. 254 இளம்.). அலை மேற் கொண்டு அல்லவை செய்தொழுகும்வேந்து (குறள். 551). கணை அலைக்கு ஒல்கிய யானை (கள. நாற்.21). நெறியழித்த பொறியிலியை அலை புரிவாய் (பெரியபு. 21,89).2. துன்பம், பரத்தும் இகத்தும் அலை வாராமல் (அண். வெண். 33). 3.கொலை. அலையே கொலை யும் திரையும் ஆகும் (பிங். 3095).

...

ஆண்ட

600

மலை

அலை பெ. மாறுபட்ட கருத்துரை. அலை பலவே யுரைத்தாள் என்று அருகிருந்தோர் கருதுதலும் (நீல. 204).

அலைக்கழி 1-ல் 4 வி. அலைந்து வருந்துதல். ஐம் பூதத்தாலே அலைக்கழிந்த தோடமற (தாயுமா.45,

6, 1).

அலைக்கழி -த்தல் 11 வி. அலைத்து வருந்துதல். அக் கிரமத்தில் அலைக் கழித்து வழக்கரைத் தொடர் (சர்வ.கீர்த்.174, 3). அந்த அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து போய்விட்டது (விவிலி. மாத். 1,26). கடன் தருவதாக வரச்சொல்லி அலைக் கழித்தான் (பே.வ.).

...

பெ. சொ அ.1-27 அ

4

19

அலைசோலி

அலைக்கழிவு பெ. அலைந்து வருந்தும் வருத்தம். வழக்கு மன்றத்திற்குப் போவதே பெரிய அலைக் கழிவு (முன்.).

அலைகல் பெ. கரையை நீர் அரிக்காதவாறு தடுக்க அமைக்கும் கல். (செ. ப. அக.)

அலைகாற்று பெ. பெருங் காற்று. (ராட். அக.) அலைகுலையாக்குவி -(த்)தல் 11 வி. நிலைகுலையச் செய் தல். கயிலை தன்னை தாக்கினான் தன்னை யன்று அலைகுலையாக்குவித்தார் (தேவா. 4, 59, 4).

...

அலைகொம்பு பெ. உறுதியற்ற மாட்டுக்கொம்பு, அசை கொம்பு.(ரா. வட்.அக.ப.314)

அலைகொள்ளு-தல் 2 வி. வருத்துதல். காமன் கணை கொண்டு அலைகொள்ளவோ (திருக்கோ. 90).

அலைச்சல் பெ.

1. அலைந்து திரிகை.

பயனற்ற

அலைச்சல் எதற்கு (பே.வ.).2. தொந்தரவு.(வின்.)

அலைசடி (அலைசடை) பெ. சோர்வு. (பே.வ.)

அலைசடை (அலைசடி) பெ. சோர்வு. (முன்.)

அலைசல் 1 பெ. 1. அலைகை. அலைசல் ஞெகிழ்தல் அலையலின் பெயரென்று அறைதற்குரிய (திவா.

...

2006). 2. துன்பம். (வின்.)

அலைசல்' பெ. சோம்பல். ஆஞ்சி அழுங்கல் அலை சல் மாழ்கல் சோம்பலாகும் (திவா. 1675).

அலைசல்'

மின்மை.

...

(அலசல்') பெ. துணிநெசவில் நெருக்க (பே.வ.)

...

அலைசு 1 - தல் (அலசுதல்2) 5.வி. (ஆடையை) நீரில் அழுக்குநீங்கக் கழுவுதல். மீன் பிடிக்கிறவர்கள் வலைகளை அலைசிக் கொண்டிருந்தார்கள் (விவிலி. லூக், 5,?).

அலைசு 2 - தல் 5 வி. 1.கலங்குதல். பொன் அங்கு அலைசாவகை எடுத்தாற்கு (நம்பியாண். ஆளு. அந். 70). 2. கலக்குதல். கூழை நன்றாக அலைசிக் குடி (பே.வ.). 3. திணறடித்தல். அவனைப் பேச் சால் அலைசி விட்டான் (பே.வ.).

அலைசுதல் (அலசுதல்') 5 வி. சோம்புதல். தூங்கல் அசைதல் அலைசுதல் சோம்பே (பிங். 1891).

அலைசோலி பெ. 1.தொந்தரவு. (இலங். வ.) 2. தொந்தரவு தரும் வேலை. (பே.வ.)