உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலைவுநேரம்

எல்லாம்

மன அலைவு எல்லாம் ஒழித்து ... சித்திரம்போல் நின்றான் (ஞானவா. சனகரா. 29). அலைவில் குதி ரைக்கு நடைவேகத்தில் அதிக சயம் ஆம் என்பர் (அறப்பளீ. சத. 33). எண்ணம் அலைவு அற்றோர்க்கு இனிய மலை (அண். வெண். 36). 3. (அறிவியல்) ஒலி, ஒளி ஆகியவை செல்லும் அலை போன்ற இயக் கம். அலைவுக்கொள்கை (பௌதி.க.சொ.ப.80). ஊசலாடு நிலை, நிலையற்றிருத்தல். (கலை. அக.

4.

2 ப. 60).

அலைவுநேரம் பெ. அடுத்தடுத்த இரு அலைவுகளுக் கிடையேயுள்ள கால அளவு. (அடிப். பெளதி. பட்ட வகுப்பு

ப.289)

அலைவுபடு-தல் 6 வி. சீராகச் செல்லாமல் அங்குமிங் கும் இடம் பெயர்ந்து செல்தல். படவு நடுக்கடலிலே அலைகளினால் அலைவு பட்டது (பு. ஏற். மத்.

090

14, 24).

அலோகம்1 பெ.

பஞ்சபூத சம்பந்தம் இல்லாததும், சூரிய கிரகணம் படாததும் ஆகிய உலகம், காணப்படாத உலகம். உலகம் மூன்றும் விழுங்கியிட்டு அலோகம் நுங்கி (சீவக. 3082). முத்திச்சேத்திரங்கள் உலோக மல்ல அலோகம் என உணர்க (தக்க.38 ப. உரை).

அலோகம் 2 பெ. உலோகம் அல்லாத பிற தனிமப் பொருள். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தனி மங்களை உலோகங்கள் எனவும் அலோகங்கள் எனவும் பிரித்துக் காட்டலாம் (அறிவி. 10 ப. 152).

அலோகி (அலோசி) பெ. பசளைப் பூண்டு. (சங். அக.) அலோசி (அலோகி) பெ. பசளைப் பூண்டு. (பச்சிலை.

அக.)

அலோமி பெ. பொற்றலைக் கையாந்தகரை, கரிசலாங் கண்ணி. (முன்.)

அலௌகிகம் பெ. உலக நடைக்கு ஒவ்வாதது. (செ.

ப. அக.)

அவ்1 சு.பெ. அவை. அவ்வே இவ்வென அறிதற்கு மெய்பெறக் கிளப்ப (தொல். சொல். 119 சேனா.). அவ்வே பகைவர்க்குத்திக் கோடுநுதி சிதைந்து (புறநா. 95, 3-4).

அவ்' சு. இ. சொ. அந்த. அவ்வைந்தின் அவா அறுப்பின் (ஏலாதி 11). ஆயிரங் கரத்து அவ்வண் ணலும் (நாஞ். மரு.மான். 4,21).

42

21

அவ்வளவு

அவ்யாசகருணை பெ. காரணமில்லாத அருள். (செ. ப. அக. அனு.)

அவ்வச்சிலேடிகவியாபகம் பெ. நன்கு பொருந்தியுள்ள தால் உண்டாகும் சிந்தனை. (சிவப்பிர. சிந்தனையுரை)

அவ்வண்ணம் வி. அ. அப்படி, அவ்விதம். மின் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை (சேரமான். பொன். 1). அவ்வண்ணத்து அவர்நிலைமை கண்டும் (திருமங்கை. திருநெடுந். 21). அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக உடைத்து (குறள். 1 மணக்.).

அவ்வது வி. அ. அவ்வாறு. அவ்வாறு. அவ்வது உறைவதறிவு (குறள். 426).

அவ்வப்போது (அப்பப்போது) வி.அ.அந்தந்தநேரத் தில். அவ்வப்போது செய்யவேண்டியவற்றைச் செய்துமுடிக்க வேண்டும் (பே.வ.).

அவ்வமை பெ. இந்துப்பு. (சங். அக.)

அவ்வருகு வி.அ.

1.அப்பால். எண்ணுக்கு அவ் வருகே பெருகியிருக்கிறது என்று அர்த்தமாய் (திரு வாய். 1, 2, 10 ஈடு). 2. உயர்வாக. இன்று கிட் டிற்று ஒரு குரங்கை நித்தியாசரிதையான பிராட் டிக்கும் அவ்வருகாக நினைத்தானிறே (திருவாய். 1, 3, 1 ஈடு).

அவ்வல் பெ. அ. முதன்மையான. (செ. ப. அக. அனு.)

அவ்வழி வி. அ. 1. அப்படி வருமிடத்து. அவ்வழி அரணமும் பெருமையும் அறைந்தேன் (கம்பரா. 6, 5, 68). அவ்வழி ஆவி இடைமை இடமிடறாகும் (நன். 75). 2. அதன் பின்பு. அவ்வழி... உதித் தன்றே (கூர்மபு. பூருவ. 2,5).

அவ்வளவிலவன் மகிழ்கவெனல் பெ. பின்னும் எதிரியை வெல்லக்கூடிய வாதத்திற்கு இடமுண்மை கண்டும் மகிழ்கவென்று தொடக்கத்தில் அவன் கொள்கையை ஒப்புக்கொள்ளும் முறை. (சி. போ.3,6 சிற்.)

அவ்வளவு வி. அ. 1. சுட்டியுரைக்கும் அளவு, எல்லை, காலம். மலரும் மௌவல் மாச்சினை காட்டி அவ் வளவு என்றார் (அகநா. 23, 13). புல்லிக் கிடந் தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் (குறள். 1187). மேலாடை வீழ்ந்தது எடு என்றான் அவ் வளவில் நாலாறு காதம் நடந்ததே (நளவெ.3,39).