உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவகுணம்

அவகுணம் பெ. தீய குணம். அவகுண விரகனை (திருப்பு.

85).

அவகேசி பெ. காய் தராத மரம். பலினம் காய்மரம் அவகேசி யலா மரம் (பிங். 2833).

அவகேடு பெ. 1. பெருந்தீங்கு. (செ. ப. அக.) 2.தாழ்வு. (பே.வ.)

அவச்சா பெ. அகாலச்சாவு. (சாம்ப. அக.)

அவச்சாடை பெ.

கேடுணர்த்துங் குறி. (செ. ப. அக.

அனு.)

அவச்சாயை பெ. நிழல் நிலத்தில் விழாத உருவ முடைய வானவர். (முன்.)

அவச்சாயை' (அபச்சாயை 2) பெ. ஒரு சாவுக்குறி. (முன்.)

அவச்சாயை' பெ. நிழலை அளந்து நாழிகை கணிப்பதில் மாதத்திற்கு ஏற்பட்ட தள்ளுபடி நிழலளவு. மாதத்தை மூன்று பங்காக்கிப் பங்கொன்றுக்கு மேற்கணக் குப்படி அவச்சாயை தள்ளிக்கொள்ளவும் (பெரிய

வரு.ப.98).

அவச்சாவு பெ. அகாலச் சாவு. (செ, ப. அக.)

அவச்சின்னம் பெ. 1. குறிப்பிட்டு வேறுபடுத்தப்பட்டது. (முன்.) 2. அவமானத்துக்கிடமான அடையாளம். அவளுக்கு அவச்சின்னமாக இக்குழந்தை பிறந் துள்ளது (பே.வ.).

அவச்சுழி பெ. தீயஊழ். (செ. ப. அக.)

அவச்சேத்தியம் பெ.

435)

பிரிக்கக்கூடியது.

(விசாரசந்.ப.

அவச்சேதகம் பெ. வேறுபடுத்துந் தன்மை. (சி. சி . 2,

4 சிவாக்)

அவச்சொல் பெ. 1. அமங்கலச் சொல். (செ. ப. அக.) 2. பழிச்சொல். வீணாக அவச்சொல் பேசாதே (பே.வ.).

அவசக்தி பெ. தீய ஆற்றல். (துச்சாதனன்)

...

அவ

சக்தி வழிபற்றி நின்றவன் (பாரதி. பாஞ்சாலி. 265).

அவசகுனம் (அபசகுனம்) பெ. கெட்ட நிமித்தம்.

(பே.வ.)

அவசங்கை பெ. அவமரியாதை. (செ.ப.அக.)

125

அவசரம்1

அவசத்தம் (அபசத்தம்) பெ. 1. அமங்கலவொலி. அவசத்தம் மாபாதகம் (முத்திநிச். 1 உரை ). 2. பிழை பட்ட சொல். சீவன்முத்த ரென்னும் ரென்னும் அவசத்த மாபாதகம் (முன். 17). அவசத்தமொர் கண மாயினும் அறையாம லிரான் (பெருந். பு. 29,7). அவசதை பெ. உடல் தளர்ச்சி அடைதல். அவசதை யினாலே நித்திரை பகட்ட (யதீந்திரப். ப. 5).

அவசம் பெ. (அ + வசம்) தன்வசப்படாமை, தன்வச மிழந்த நிலை. அவசமாய்ச் சிந்தை அழிந்து அயலே நின்றான் (கம்பரா. 3, 2, 26). அவசம் புத்தியில் கசிந்து கொடு (நம்பியாண். திருநாவுக். 10). அவசம் பட ஏழ்கணை தூண்டினன் (கந்தபு. 2, 14, 54). சாமிவசம் ஆனார் என்றே அவசம் ஆனாள் (தமிழரசி குற.28). அவசம் எய்தி அழிந்ததும் பொய் கொலோ (குமண சரித். 68).

அவசர்ப்பிணி பெ. வாழ்நாள் போகம் முதலியவை சுருங்கும் காலம். உற்சர்ப்பிணி அவசர்ப்பிணி என் னும் கால வேறுபாட்டினும் (குறள். 361 பரிமே.).

அவசரக்கட்டளை பெ. காலத்துக்குரிய வழிபாடுகள். பெருமாளுக்குத் தம்முடைய அவசரக்கட்டளை நடத்துகைக்கு (தெ.இ.க. 24, 377).

அவசரக்குடுக்கை பெ. பதற்றக்காரன். இவன் இவன் எப் போதும் ஓர் அவசரக்குடுக்கை (பே.வ.).

அவசரச்சட்டம் பெ. (இக்) நெருக்கடிக் காலத்தில் அரசு பிறப்பிக்கும் ஆணை. இப்போது அவசரச்சட் டம் பிறப்பிக்கும் சூழல் எழவில்லை என இந்திய அரசு அறிவிக்கிறது (செய்தி. வ.).

அவசரச்சம்பா பெ. பெருநெல் வகை. (செ.ப.அக. அனு.) அவசரத்துக்குப்போ-தல் 5 வி. மலம் சிறுநீர் கழித்தல்.

(முன்.)

அவசரநிலை பெ. (இக்.) நெருக்கடி நிலை.(செய்தி.வ.) அவசரப்பாடல் பெ. அவசியமாக நினைவில் வைக்க வேண்டிய பாடல்கள். (மீனா. சரித். 1, 10 அடிக்குறிப்பு). அவசரப்பிரகடனம் பெ. (இக்.) அவசரச் சட்ட வெளி யீடு. (செய்தி.வ.)

அவசரம்1 பெ. 1.விரைவு. அது கேட்டுச் சின்னா னும் அவசரமாய் ஓடிவந்து (காத்தவரா. ப.138) 2. பொழுது, சமயம். அவசரத்தவளிடை நிகழ்ந்த மெய்க்குறி (பாரதம். 1, 2, 13).3. தேவை. அவசரத் துக்குப் பாவமில்லை (நாட்.வ.).