உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவத்தம் 1

அவத்தம்' (அபத்தம்) பெ . 1. பொய். அமணர்சொல் அவத்தமாவது அறிதிரேல் (தேவா. 2,100,10). பெற்ற வெற்றியும் அவத்தம் (கம்பரா. 6,36,207). 2. பயனற்றது, வீண். அவத்தமே வாழ்நாளைப் போக்குவார் புல்லறிவினார் (நாலடி.327). அல்லல் வாழ்க்கை உய்ப்பதற்கு அவத்தமே பிறந்து (தேவா. 2,97,6). அவத்தமே பிறவி தந்தாய் (தொண்டரடி. திருமாலை 31). அவத்தமே வருந்துகின்றேன் (இறை. அக. 12 உரை). சொல்லுவதெல்லாம் அவத்தம் (புல் லையந். 30). பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டுபட்டு (பெரியதி. 2, 5, 2).

அவத்தம்' பெ. கேடு. 2

அவரொடும் நின்னொடும் ஆங்கே அவத்தங்கள் விளையும் (திருவாய். 10, 3,9).

அவத்தம்' பெ. நாய்வேளை என்னும் செடி. (வைத். விரி, அக. ப. 24)

அவத்தன் பெ. பயனற்றவன். மருட்.கொண்டழியும் அவத்தன் (திருப்பு.923).

அவத்தானம் பெ. இருப்பிடம். மாயாத்துவயமத்தியே அவத்தானஞ் சொல்லப்பட்டது (சி.சி. 8, 2 சிவாக்.).

அவத்திதன் பெ. துய்த்தற்குரிய

அவத்தைகளைத்

துய்க்கும் ஆன்மா. (சி. போ.பா. 4,3)

அவத்தியம் பெ. 1. இழிந்தது. (கதிரை. அக.) 2. தீங்கு. (முன்.) 3. பாவம். (முன்.)

அவத்தியா பெ. கப்பலின் முன்பக்கத்திற் கயிறு கட்டும் தூண். (செ.ப. அக.)

அவத்திரியம் பெ. ஆபத்து. (செ. ப .அக.அனு.)

அவத்துறை பெ. தீய வழி. அவத்துறை போய நெஞ்சத்து (கூர்மபு. பூருவ. 15, 7).

அவத்தூறு (அவதூறு) பெ. பழிப்பு. (செ.சொ. பேரக.)

அவத்தை 1 பெ. 1. வேதனை, துன்பம். முன்னும் அவத்தையும் மூலப்பகுதியும் (திருமந். 1485). அன் னவள் அவத்தை கண்டு ஆங்கு இளையவன் அலறி வீழ்ந்தான் (உத்தர. சீதைவன. 61). மனத்துள் அவத்தைப்படும் (திருவரங். கலம். 12). அவத்தைப் பட்டாலும் (பட்டினத்தார். பொது அன்னை. 40). அவத்தை தெரிந்தாங்கு இரித்தலும் இலனே (இருபா இரு.8). மேல் இளைப்பும் முசிப்பும் அவத் தையும் விதிப்படி எனுமாறும் (திருப்பு. 145). என் குமாரத்தி மரண அவத்தைப் படுகிறாள்

900

427

அவதரி'-த்தல்

(விவிலி. மாற்கு 5, 23). 2. காதலில் ஏற்படும் பத்துவித அவத்தைகள். காட்சியும் வேட்கையும்... சாக்காடும் என்னும் பத்தவத்தையும் (நம்பியகப். 36 உரை).

அவத்தை 2 பெ. 1. நிலை. விண்ட அவத்தை முடிவில் (சிவப்பிர. விகா. 22). 2. (சைவசித்.) ஆன்மாவின் அனுபவ நிலை. கேவல சகல சுத்தமென்று மூன்று அவத்தைகள் வரும் (சித். தத். இலக். ப.19). 3.(சைவசித்.) (இலயம், போகம், அதிகாரம் என் னும்) இறைவனின் மூன்று நிலை. இலயம் போகம் அதிகாரம் என்னும் மூன்றாயடங்கும் அவத்தை களையும் (சி. சி. சுப. 65 சிவஞா.). 4. இளமை முதலிய மானிடப் பருவங்கள். அவத்தை பத்தா கும் (திருவிளை. பு. 59, 114).

அவத்தைப்படு-தல் 6 வி. 1. (தத்துவம்) அந்தத்த நிலையில் அனுபவப்படுதல். அஞ்சு அவத்தைப்படு தல் ஆன்மாவுக்கு இலக்கணம் (சி. போ. 4 சிவஞான.). 2. துன்புறுதல். நடுவில் அகப்பட்டுக்கொண்டு அவள் அவத்தைப்படும்போது (பிரதாப.

அவத்தைப்பிரயோகம் பெ. அறுபத்துநான்கு யுள் சூனியம் வைக்கும் வித்தை. (வின்.)

ப. 52).

கலை

அவத்தைபூசு - தல் 5 வி. மரண வேளையில் கடைசியாகப் பாவமன்னிப்புக் கேட்பவர்க்கு நற்கருணை என்கிற அப் வழங்குதல். எனக்கவத்தை பூசுதல் னருள்வழிகாட்டி (அந்தோனி. அண். ப. 17).

பம்

தந்துன்

அவதஞ்சம் பெ. பூ வடிவில் அமைந்த காதணிகளில் ஒன்று. மருவிய செவிமலர்ப்பூ மன்னு கன்னாவ தஞ்சம் (சூடா.நி.7,28).

அவதந்திரம் பெ. சதியோசனை. அவதந்திரம் தனக்கு அந்தரம் (பழ.அக.586).

அவதரணம் பெ. அவதாரம். (செ.ப. அக.அனு.)

அவதரப்பெயர் பெ. தற்சமயத்திற்கு வைத்துக்கொண்ட பெயர். (செ.ப.அக.)

அவதரம்

பெ. பொழுது, சமயம். ஆங்கவையிருந் தோர் நல்ல அவதரத்து அணைந்தான்... என்றார் (திருவால.பு. 41,20). அவதரம் பார்த்து அருள்புரிந்து விடும் அளவு (செவ்வந்திப்பு.

1, 27).

மங்கை பங்கர்

அவதரித்தல் 11 வி. 1. தெய்வத்தன்மையுடன் பிறத் தல். மன்னர் தொல் குலத்து அவதரித்தனை (கம்பரா.