உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவாள்

உலகு அவாம் பேரறிவாளன் திரு (குறள். 215). வென்றி அவாம் வான் நாடியர் கண் எனும் வாள் (கம்பரா. 3, 2, 12). 2. பற்றுச் செய்தல். வீடு பேற் றின் கண்ணே அவாவிநின்று (இறை. அக. 1 உரை). கோது அவாம் புலன்கள் வென்று (செ. பாகவத. 3, 9, 71). 3. (இலக்.) சொற்றொடரில் ஒருசொல் தன்னொடு பொருந்திப் பொருள் முடித்தற்கு மற் றொரு சொல்லை வேண்டுதல். கொடு. அவற்கு என்னுஞ் சொற்களை அவாய்

...

நிற்றல்

(தொல். சொல். 448 நச்.).

அவாள் சு. பெ. அவர்கள். (அந். வ.)

...

...

...

முடித்தே

அவி1-தல் 4 வி. 1. குறைதல், அடங்குதல். புரை யோர் நாப்பண் அவிதல்கடன் (தொல். பொ. 419 இளம்.). திரைபாடு அவிய (அகநா. 260,5). மறவர் ஒலி அவிந்து அடங்க (பதிற்றுப். 40,8). நிழல் ஆன்று அவிந்த நீர்இல் ஆரிடை (குறுந். 356), கடல் ஓசை அவிந்தபின் ஆடுதும் (நாலடி.332). வெஞ்சுடரின் ஆண்டகை அவிந்தான் (சீவக. 289 அவிதல்-குறைதல். நச்.). உரை நஞ்சு ஒருவாறு அவிய (கம்பரா. 2, 4, 38). 2. பணிதல். ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர் (புறநா.191,6). நோன்று அவிந்து வாழாதார் (இன். நாற். 17). ஆன்றவிந்த மூத்த விழுமியார் (ஆசாரக். 60). 3. ஓய்தல். பெயல் ஆன்று அவிந்த தூங்கிருள் நடுநாள் (அகநா. 158,2). பாடான்று அவிந்த பனிக்கடல் (மதுரைக். 629). கோல்அவியா வெஞ் சிலையான் (சீவக. 1045). 4. ஒடுங்குதல். பாம்பு பை அவிந்தது போல (குறுந். 185). இடு நீற்றால் பை அவிந்த நாகம் (நாலடி. 66). நாகம் மாழ்கிப் பை அவிந்தவண்ணம் (சீவக. 449). அணைந்து போதல். அவியா அனலேந்தி (தேவா. 7,47,2). கால் அவியாப் பொன் விளக்கு (சீவக. 1045). தீ அவிய மூண்டெழும் காமானலம் (LAGUTIT. LIGT. 99). நின்று அவிந்தன நுங்கள் விளக்கெலாம் (பாரதி. பல்வகை. 10,2). புதரையோ அவியாத அக்கினியி னால் சுட்டெரிப்பார் (பு. ஏற். மத். 3, 12).6. அழி தல், சிதைதல். ஈரைம்பதின்மரும் பொருது களத்து அவிய (பெரும்பாண். 415). ஆண்டோர் வீழ்ந்து அவிதல் கண்டும் (பழமொ.நா.343). புரமூன்றும் வெங்கணை ஒன்றினால் அவிய (தேவா. 1,133, 10). பனிவரை இரதம் அவிந்தன (கம்பரா. 6, 30, 214). தழல்வாய் அரசு அவிய (நம். திருவிருத்.13). புரம் வெந்து அவிய (பெரியபு. 8,17). அவன் குடும்பம் அவிந்துபோயிற்று (நாட், வ.). 7. சாதல். அவியினும் வாழினும் என் (குறள். 420). மைந்தர் அவிந்தமை அரசன்காணா (கம்பரா. 1, 10, 101).

5.

437

அவி5

8. குருடாதல். அவிந்த கண்தான் தெரிய (காத்த

வரா. ப. 47).

அவி-தல் 4 வி. 1. (வெப்பத்தால்) வெம்புதல். வெவ்வழல் அகவயின் சுடுதலின் அவிந்த ஆற்றலர் (பெருங். 1,46, 31). 2. புழுங்குதல், வேகுதல் அரிகால் அவித்து (பதிற்றுப்.30,15). காயை அவிய விடு (பே.வ.).

...

அவி- த்தல் 11 வி. 1. அடக்குதல், கல்லென் சுற் றக் கடுங்குரல் அவித்து (குறிஞ்சிப்.151). அரிது அவித்து ஆகின்று உணர்ந்தவன் (பழமொ.நா. 1). ஐந்தவித்தான் ஆற்றல் (குறள்.25). ஒருமூன்று அவித்தோன் ஓதிய ஞானத்திருமொழி (சிலப். 10, 194). புலன்கள் ஐந்து அவிக்கும் (கம்பரா. 1, 3, 6). நீள் பசி அவிக்கக் கனபானம் வேணும் (திருப்பு. 239). புலன் அவித்த அந்தணரும் (கச்சி. காஞ்சி. அந்தரு.60). உளத்தினை புன்சொல்கூறி அவித்திடலாமோ (பாரதி. பாஞ்சாலி. 105). 2. அணைத் தல். பொற்சுணத்தால் விளக்கு அவிப்ப (சீவக. 91). கான அனலைக் கடிது அவித்து (கம்பரா. 3, 3, 45). அவிப்பரிய தீயாம் என்னாசை (பட்டினத்தார். அருட்பு. முதல்வன். 42). சினத்தழலை அவித்து நின்றோம் (கலைமகள் பிள்.81). 3. கெடுத்தல், அழித்தல். தீயோ ரன்ன என்னுரன் அவித்தன்றே (குறுந். 95). சேனை அவித்த பரஞ்சுடரை (திருவாய். 3,5,7). தீது அவித்து அமையச் செய்த (கம்பரா. 4, 2, 21). துயர் அவித் தனை (சூளா.216). பசித்தழல் அவித்து (குசே.52). 4. கொல்லுதல். போரில் வந்தோரை அவிப்பா னும் அவித்து அவர் ஆக்கையைக் குவிப்பானும் (கம்பரா. 2, 4, 117). 5. நீக்குதல், தவிர்த்தல். செவிச் சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல் (குறள். 694). துயர் அவித்தற்கு ஒத்த அரும்பெறல் யோகம் (சீவக.1800). 6.துடைத்தல். சிலம்பிற் போர்த்த பூந்துகள் அவித்து (முன்.2064).

...

...

அவி - த்தல் 11 வி. வேகவைத்தல். அறுத்து அவித்து ஆரச் சமைத்து (மறைசையந். 20). அடுத்த கிழமை யில் அவிக்கவில்லையா (நாஞ். மரு. மான். 7, 62).

அவி" (அவிசு) பெ. 1. வேள்வித் தீயில் தேவர்க்குக் கொடுக்கும் உணவு. தொல்லுயிர் வழங்கிய அவிப் பலியானும் (தொல். பொ. 75, 12 இளம்.). அகில் பல பளிதம்...அவியமர் அழல் என அரைக்குநர் (பரிபா. 10,82-84). அவியுணவின் ஆன்றாரோடு ஒப்பர் (குறள். 413). வேட்டவி வேட்டவி உண்ணும்

விரி