உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவிதா

கருமம் ஆதி அவித்தையால் வந்ததாகும் (சிவப்பிர. விகா. 105).அவித்தையாம் உடலம் உற்றோர் (செ. அவர்கள் அவித்தைகளைத்

பாகவத. 11, 5, 15).

தூண்

.

டி (நந்த. கீர்த். ப. 58). தனக்கொழிந்த அவித்தையென (குசே. 525). 2. மாயை. கூறு அரும் அவித்தை சத்தி ... விளங்கும்

...

மாயை (சிவப்பிர.

விகா. 158). 3. ஆணவம். மூடம்பசுத்துவம் அவித்தை யாதி (சிவப்பிர.விகா. 143). 4. மோகம். அவித்தை மோகம் (நாநார்த்த. 908). 5. ஐவகைத் துன்பங்களுள் ஒன்று. (விசாரசந்.ப. 464)

அவிதா (அபிதா) பெ. துன்பத்தில் முறையிட்டுக் கூறுஞ்சொல். எந்தாய் என்று அவிதா விடும் நம்ம வர் (திருவாச. 5, 4).

அவிதூசம் பெ. ஆட்டுப்பால்.(சங். அக.)

அவிந்ததவசம் பெ. கெட்டுப்போன தானியம். (ராட்.

அக.)

அவிந்துவி பெ. இருவேரிப்புல். (செ. ப. அக. அனு.) அவிநயக்கூத்து பெ. 1. பாடற்பொருளை மெய்ப்பாடு களால் காட்டி ஆடும் கூத்து. அவிநயக் கூத்தாவது கதை தழுவாது பாட்டினது பொருளுக்குக் கை காட்டி வல்லபம் செய்யும் பலவகைக் கூத்து (சிலப். 3, 12 அடியார்க்.). 2. பன்னிரு சிவதாண்டவங்களி லிருந்துவந்த அடவுமுதலாய பன்னிரு கூத்துக்களுள் ஒன்று. (கூத்த. ப. 353).

அவிநயம்" (அவினயம்!) பெ. மனக்கருத்தை மெய்ப் பாடுகளால் விளக்கும் உறுப்பின் செய்கை. ஆடன் மகளிர் அவிநயம் வியப்பவும் (பெருங்.4,12,188). மகளிர்தம் அவிநய மடநடை (சூளா. 942). பாட லோடு ஆடும் அந்நலார் அவிநயத் திறத்தை (கச்சி. காஞ்சி. இருபத். 52). அவிநயங் காட்டி (மதுரைப் பதிற்றுப். 12). பிருங்கி அவிநய இன்பமும் எய்த நின்று நடிக்கும் (வசவ பு. திருக்கயி. 15);

அவிநயம்'

(அவினயம்') பெ. ஓர் இலக்கண நூல். இவை ஈரிடத்திற்கும் அவிநயத்திற் காட்டினவை (நன். 369 மயிலை.).

அவிநயர் 1

(அவிநயனார்) பெ. அவிநயம் என்னும் பண்டைய இலக்கண நூலாசிரியர். அவிநயர் யாப் பிற்கு நாலடி நாற்பதும் போல (யாப். காரிகை தற்

சி. பாயி.)

அவிநயர்' பெ. கூத்தர். கூத்தர் அவிநயர் என்றும் கூறும் (சூடா. நி. 2,38).

அவிநயனார் (அவிநயர்!) பெ. அவிநயம் என்னும்

44

10

பண்டைய இலக்கண

அவிமந்திரம்

நூலாசிரியர். அவிநயனார்

ஆராய்ந்தார் சொல் (வீரசோ. 83 உரை எ-டு)

அவிநவம் பெ. புதுமை. (உரி. நி. 12, 4)

அவிநாசவாதி பெ. பொருள் அழியாதது என்னும் கொள்கையுடையோன். அவன் அவிநாசவாதி ஆத (மணிமே.29, 171).

லின்

அவிநாசி1 (அவினாசி ) பெ. (அழிவில்லாத)

கடவுள். அமலன்கண்டாய்

(தேவா. 6, 73, 7).

அவிநாசி'

(அவினாசி')

அவிநாசிகண்டாய்

பெ. கொங்கு

நாட்டி

லுள்ளதொரு சிவத்தலம். புற்றாடரவா புக்கொளி யூர் அவிநாசியே (தேவா. 7,92, 1). அவினாசியப்பா பாண்டி வெள்ளமே (திருவாச. 50,7). விநாசம் பொருந்தா மேன்மைத்தாலே...அவிநாசித் தலமாய்த் திகழும் (அவி. பு 2,20).

அவிநாபாவம் பெ. விட்டுநீங்காது உடன்நிகழும் தன்மை. ஆயிரத்தில் நூறு அவிநாபாவமாயிருத்தலால்

(சி. சி. சுப. 6மறைஞா.).

அவிப்பலி பெ. 1. போர்வீரன் சூளுரை செய்து தன் னைத் தீக்கடவுளுக்குப் பலிகொடுக்கை. தொல்லுயிர் வழங்கிய அவிப்பலியானும் (தொல். பொ.75, 12 இளம்.). இவற்றால் சொல்லியவை அவிப்பலி என் னும் புறப்பொருட் பகுதி (சிலப். 5, 76-88 அடியார்க்.). 2. தேவர்க்கு வேள்வித்தீயில் கொடுக்கும் உணவு. (செ. ப. அக.)

அவிப்பாகம் பெ. தேவர் உணவின் பங்கு. திருமால் அவிப்பாகங்கொண்டு (திருவாச. 14, 6).

அவிப்பிணம் பெ. உவர்மண்ணை எடுத்துக் காய்ச்சும் உப்பு. (செ.ப. அக. அனு.)

அவிப்புறம் பெ. பூசையின் போது இறைவன் படையலுக் காசுக் கொடுக்கும் கொடை நிலம். இருக்குவேள் வந்தித்து அவிப்புறஞ் செய்த

நாலேகால் (புது. கல். 9).

பள்ளிச்சந்தன

அவிபக்தகுடும்பம் பெ. பிரிவினை செய்யாத சொத்

துள்ள கூட்டுக்குடும்பம். (செ. ப. அக.)

அவிபாவியம் பெ. பாவிக்கப்படாதது.

பாவியமாய் (சருவஞா. 12 உரை).

எத்தும் அவி

அவிமந்திரம் பெ. ஓம் எனும் பிரணவ மந்திரம். அவி மந்திரத்தின் அடுக்களை கோலி (திருமந். 359).