உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/572

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவிவேகி

வைராக். 89).

QU.).

அவிவேகி

அவிவேக பூரண குருகதை (நூ.

பெ. பகுத்தறிவு இல்லாதவன். அவி வேகிக்குப் பாரம்சாத்திரம் (ஞானவா. வைராக். 68). இந்தவிடயத்தில் விவேகிக்கும் அவிவேகிக்கும் என்ன பேதம் (பிரதாப. ப. 18).

...

அவிழ்தல் 4 வி. 1. நெகிழ்தல். புரியவிழ் ஐம்பால் (பதிற்றுப். 18,4). வானிளம்படியர் மலர்க்கூந்தல் அவிழ (பெரியாழ். தி. 3, 6, 3). குழல் அவிழ இடை நுடங்க (பெரியபு. 21, 421). இறுக்கு அவிழாக் கச்சினர் (சங்கர. கோவை 244). 2. (இதழ்) விரிதல், (பூ) மலர்தல். மாமடல் அவிழ்ந்த காந்தள் (நற். 14, 7). கருநனைக் காயா கணமயில் அவிழவும் (சிறுபாண். 165). தளை அவிழ் தார் சேய் (கள. நாற். 18). தடத்து அவிழ் தாமரைப் பொய்கை (நாச்சி. தி. 3,6). இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி நனைந்தனைய திருவடிகள் (தேவா. 6, 14, 1). மலர அவிழ்ந்த தாமரை (கல்லாடம் 5, 12). போதவிழ் பொய்கை தோறும் (கம்பரா. 1, 1, 20). மடலவிழும் பூங்காவில் வந்து (மதுரைச். உலா 353, 1). 3. உதிர் தல். தாது அவிழ் கூந்தல் மாதர் (கம்பரா. 6,15,3). போதவிழ் பொய்கை (தேவா. 3,62,10). அவிழ் பன்னம் ஊணாய் பன்னாதன் நாமம் படைத்து (ஞானவா.சுரகு. 35). தாது அவிழ் மலர்த்தார் (சீறாப்பு. 1, 4, 28). 4. சொட்டுதல். வண்டு ஏறக் கள் அவி ழும் (தேவா. 2,68,6). மட்டவிழ் மலர்க் குழலி னாள் (கம்பரா. 6, 2, 53). கொங்கு அவிழும் குழலாள் (குலோத். கோ. 2). மட்டவிழ் அலங்கன் மறவோன் (பாரதம் 3, 5, 38). 5. இளகுதல். சிந்தையும் அவிழ்ந் தவிழ்ந்து தெரிசினைப் படுவேனோ (திருப்பு.34). சிந்தை அவிழ்ந்தவிழ்ந்து ... இன்பநிலைவாய்க்கும் (தாயுமா. 43,75).

...

அவிழ்-த்தல் 11 வி. 1. கட்டு நீக்குதல், பிரித்தல். கூம்பு முகை அவிழ்த்த குறுஞ்சிறைப் பறவை (அகநா. 132,10). அவிழ்த்தற்கு அரிது அது முடிந்த மைந்தன்றே (குறுந். 313). கையிற் கட்டிய கச்சவிழ்த் திட்டு (பெருங்.4, 14, 145). புனக்குடிக்கணியர்தம் மலர்க்கை ஏடு அவிழ்த்து (கல்லாடம் 4, 22). ஆடகப் பொற்கிழி அவிழ்க்கும் (மீனா. பிள். 73). ஆடை சோர அவிழ்த்து அரைசுற்றவும் (திருப்பு. 235). பாத ரட்சையின் வாரைக் குனிந்து அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல (விவிலி. LDIT 5. 1, 7). 2. மலரச்செய்தல். கூம்புவிடு மென் பிணி அவிழ்த்த ஆம்பல் (புறநா. 383,7). ஊதை அவிழ்த்த உடை

44

2

அவினயம்

மலர் பொதி

யிதழ் ஒண்ணீலம் (பரிபா. 11,22). அவிழ்த்த உலகு தொழு மண்டிலம் (சிலப். 14, 4). கள்முகை அவிழ்க்கும் சரோருகம் (செங்கோட்டு. பிள். 1,6). 3. (விடுகதை, புதிர்) விடுவித்தல். (நாட்.வ.) 4. பெரிது படுததிப் பேசுதல். மகன் புலமையும் தந்தை யின்புலமைகளும் யாரிடம் அவிழ்க்கின்றார் (பாரதி. பாஞ்சாலி. 135). 5. விலங்கு வாகனம் போன்றவற்றை விலைக்கு வாங்குதல். (இலங். வ.)

அவிழ்' பெ. 1. சோறு, உணவு. அவிழ்ப்பதம் மறந்து பாசடகு மிசைந்து (புறநா. 159,12). வாலவிழ் வல்சி (மலைபடு. 183). 2. அரிசி. கல உமிதின்றால் ஒரு அவிழ் தட்டாதா (பழ. அக.5190). 3. பருக்கை. ஈசனாதியர்க் களித்த வூண் அவிழொன்றற்கு (தணிகைப்பு. அகத். 199). அவிழ் ஒன்றற்கு உக மொன்றா போகமுடன் வைகுவர் (திருவிளை. பு.

மூர்த்தி. 27).

...

அவிழ்த்துக்கொடு-த்தல் 11 வி. சொந்தப் பொருளி லிருந்து எடுத்துக் கொடுத்தல். (பே.வ.)

அவிழ்தம் (அவிடதம், அவுடதம், அவுழ்தம், ஒளட தம்) பெ. மருந்து. அனுபோகம் தொலைந்தவுடன் சித்தியாம் வேறும் உள அவிழ்தந்தானே (தண்டலை. சத. 89). அவிழ்தம் எல்லாம் எழுதி (தனிச் சிந். அட்டா. சரவண. 1, 3). அக்கியானம் தொலைந் தால் அவிழ்தம் பலிக்கும் (பழ . அக. 49).

அவிழகம் பெ. மலர்ந்த பூ. ஒள்ளிதழ் அவிழகம்

(பதிற்றுப். 52,19).

அவின் (அபின், அபினி, அவினி') பெ. கசகசாச் செடி யின் பாலிலிருந்து தயாரிக்கிற கசப்புச் சுவையும் பழுப்பு நிறமும் உள்ள போதையூட்டும் பொருள். அவின் புழுகுசட்டம் இவை அத்தனையும் கூட்டி (தெய்வச். விறலி. தூது 410).

அவினந்தமாலை பெ. மறைந்துபோன கணித நூல். மிச்சிரகமும் முதலாகிய எட்டதிகாரமுமாம் அவை அவினந்தமாலையும், அரசசட்டமும், வருத்தமான மும் முதலியவற்றுள் காண்க (யாப். வி. 96 உரை).

அவினயம் (அவிநயம்') பெ. மனக்கருத்தை மெய்ப் பாடுகளால் விளக்கும் உறுப்பின் செய்கை. (செ.ப.அக.)

அவினயம்' (அவிநயம்') பெ. ஓர் யாப்பு இலக்கண நூல். (முன்.)